மார்க் தான் மாணவர்களின் எதிர்காலம் என்று பேசப்படும் இங்கு, மார்ச், ஏப்ரல் வந்தாலே மாணவர்களுக்கு எக்ஸாம் மீதான பயம் வந்து விடுகிறது. தேர்வுக்குப் போவதை போர்க் களத்திற்கு போவதைப் போல் இன்றைய மாணவர்கள் எண்ணுகின்றனர். எத்தனையோ அறிவுரைகள் சொல்லப்பட்டாலும், இந்த மனநிலை மாணவர்களை நிரந்தரமாக பற்றிக் கொள்கிறது.
தேர்வு கால மன இறுக்கம் (Exam Stress) தேர்வு கால பதற்றம் (Exam Anxiety) தேர்வு கால மன உளைச்சல் (Exam Blues) தேர்வு கால காய்ச்சல் (Exam fever) தேர்வுக்கு முன்னர் ஏற்படும் மன உளைச்சல் (Pre Exam Blues), தேர்வு ஏற்படுத்தும் அச்ச நிலை (Exam panic attack) இவை போன்ற தொடர்புடைய நிறைய உளவியல் சொற்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.
இதன் காரணமாக மாணவர்களின் பெற்றோர்கள் கூட பல்வகையான மன இறுக்கத்திற்கு ஆளாகி, அடுப்பில் வைக்கப்பட்ட பிரஷர் குக்கரின் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.
தற்கால தேர்வு முறைகள் யாவும் முழுக்க முழுக்க உங்கள் குழந்தையின் நினைவாற்றலை (memory power) அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட முறைகளாகும்.