எலும்பு முறிவு

Spread the love

எலும்பு முறிவு என்றாலே நமக்கு ஞாபகம் வருவது ‘புத்தூர்’ தான். ஆந்திராவில், தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள இந்த சிற்றூர், எலும்பு முறிவு சிகிச்சைக்கு பெயர்போனது. “புத்தூர் கட்டு” என்றாலே பிரசித்தம். ஒரு நாளில் 200 – 300 எலும்பு முறிவு ஏற்பட்ட நோயாளிகள் இங்கு வருகிறார்கள். தொட்டு பார்த்து, எலும்பு முறிவின் தீவிரத்தை, உடைந்த விதத்தை கண்டுபிடித்து, மூலிகை தைலத்தில் தோய்த்து எடுக்கப்பட்ட கட்டு துணியால் சுற்றி மூங்கில் குச்சிகளால் இணைத்து கட்டு போடுகின்றனர். தினமும் கட்டின் மேல் நல்லெண்ணை தடவும் படி சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு பின் முதல் கட்டு பிரிக்கப்பட்டு, இரண்டாம் கட்டு (மூலிகை மருந்துகளுடன்) போடப்படுகிறது. எலும்பு முறிவு ஏற்படும் மூவரில் இருவர் இந்த பழைய முறைகளேயே விரும்புகின்றனர்.

எலும்பு முறிவுகளை பற்றி ஆயுர்வேதம் விரிவாக விவரிக்கிறது. ஆயுர்வேத அறிவை சுஸ்ருத சம்ஹிதையில் காணலாம். ஆயுர்வேதம் எலும்பு முறிவை 12 வகைகளாகவும், மூட்டு / எலும்பு இடப்பெயர்ச்சியை 6 பிரிவாகவும் கூறுகிறது.

ஆயுர்வேதத்தின் சிறப்பு அம்சம் “முறிவெண்ணா” எனும் தைலம். எட்டு மூலிகைகள் உள்ளடங்கிய இந்த தைலம் எலும்பு முறிவுகளுக்கு அற்புதமான மருந்து.

எலும்பில் வலிமை பெற்றவர்களின் இலக்கணம்

எலும்பு முறிவுகள்

“எலும்பில் வலிமை பெற்றவர்களின் குதிகால்கள், கணுக்கால்கள், முழங்கால்கள், முன் கைகள், கழுத்து, முகவாய்க்கட்டை, தலை, கணுக்கள், எலும்புகள், நகங்கள், பற்கள் இவை பருத்திருக்கும். இப்படிப்பட்டவர்கள் மிகுந்த உற்சாகம், பேராற்றல், துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை, உறுதியான உடல் அமைப்பு, நீண்ட ஆயுள் இவைகளைப் பெற்றவர்களாகத் திகழ்வார்கள்”.

எலும்பில் உள்ள சோறு வலிவு பெற்றவர்களின் இலக்கணம்

எலும்பில் உள்ள சோற்றால் வலிவு பெற்றவர்களின் உறுப்புக்கள் மெல்லியவை. அவர்கள் பலம் மிகுந்தவர்கள். அவர்களுடைய உடலின் நிறம் அழகாகவும் குரல் இனிமையாகவும் அமைந்திருக்கும். அவர்களுடைய மூட்டுக்கள் பருத்தும் நீண்டும், உருண்டும் இருக்கும்.

இவர்கள் நீண்ட ஆயுளுடன் கூடியவர்கள். வலிவு பெற்றவர்கள். சாத்திர அறிவு படைத்தவர்கள். செல்வம், பகுத்தறிவு, மக்கட்பேறு இவற்றையுடையவர்கள். மரியாதைக்கு உரியவர்கள்.

சரகஸம்ஹிதை

வாய்வு பதார்த்தங்களை தவிர்க்கும் பத்தியம்

வாய்வு பதார்த்தங்களை தவிர்க்கும் பத்தியம்

கிழங்கு வகைகள், வாழைக்காய், கொத்தவரங்காய், பூசணி, பரங்கி, பருப்பு இவை வாய்வை உண்டாக்குபவை. இவை ஜீரணமாக தாமதமாகும். வயிறு முழுவதும் வாயு சேர்ந்து, மேலேறி விலாவில் வலியை உண்டாக்கும். மூட்டுவலி உண்டாக்கும். இந்த வாய்வுப் பண்டங்களுக்கில்லாத பத்திய உணவு மேற்கொண்டால், வாய்வின் அழுத்தம் குறைந்து, பாதிப்புகள் நீங்குகின்றன.

கரப்பான் போன்ற தோல் வியாதிகள் உள்ளவர்கள், இட்லி, தோசை, முட்டைக்கோஸ், கருணைக்கிழங்கு, வெங்காயம், கீரை, தக்காளி, நல்லெண்ணை, மாங்காய், புதிய அரிசி, புளித்த தயிர், மீன் இவற்றை தவிர்க்க வேண்டும்.

தவறான உணவு சேர்க்கைகள் (விருத்தாஹாரங்கள்)

சில உணவுகள் ஒன்றுக்கொன்று சேராதவை. இவற்றை தனித்து உண்ண வேண்டும். ஆயுர்வேதம் இவற்றை தனித்துக் கூறும். இந்த ஒவ்வாத கலவை உணவுகளை தொடர்ந்து உபயோகித்தால் கெடுதல் ஏற்படும்.

இச்சாபத்தியம்

வாய்வு பதார்த்தங்களை தவிர்க்கும் பத்தியம்

எந்த நோயின் தாக்குதலும் இல்லாத நிலையில், உடல் ஆரோக்கியத்திற்காக விரும்பி, கடைப்பிடிக்கும் பத்தியம் இச்சாபத்தியம் எனப்படும். வாரத்தில் ஓரிரு நாட்களை தேர்ந்தெடுத்து அந்த நாட்களில் பத்தியம் இருப்பது நல்லது. இச்சாபத்தியத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் கொத்தவரங்காய், அகத்திக்கீரை, பாகற்காய், நல்லெண்ணை, கடுகு, எள் கடலை, பலாப்பழம், பெருங்காயம், பூண்டு, புகையிலை, கள், இறைச்சி (கோழி, பன்றி, நண்டு, மீன்)

உணவை வயதிற்கேற்ப அமைத்துக் கொள்ளவும். வயதானால் லேசான உணவை உட்கொள்வது அவசியம். முதுமை நெருங்கும் போதே, உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். வாய்வு இல்லாத உணவுகள் நல்லது.

காலையில் ஏற்ற உணவுகள்- பருப்பு வகைகள் (கடலை, துவரை, உளுந்து, பயறு, காராமணி, மொச்சை) தோஷ சம திரவியங்கள் (மிளகு, சுக்கு, பெருங்காயம், கடுகு)

பகலில் ஏற்ற உணவுகள்- கிழங்குகள், பழங்கள், மசாலாக்கள், தயிர், கீரை போன்ற மெதுவாக ஜீரணமாகும் உணவுகள்

இரவில் ஏற்ற உணவுகள்- மோர், பிஞ்சு காய்கறிகள், அவரை, முருங்கை போன்றவை மணத்தக்காளி வற்றல் போன்றவை.


Spread the love