உலகெங்கும் கற்கள் பரவியுள்ளன. ஆனால் உடலில் உண்டாகும் கற்கள் உபாதைகளை உண்டாக்கும். சிறுநீரகங்களில் கற்கள் காணப்படுவது சர்வ சாதாரணமான கோளாறாக ஆகிவிட்டது. உடல் கற்களை ஆங்கிலத்தில் கால்குலி (Calculi) எனப்படும். உடலின் எந்தெந்த பாகங்களில் கற்கள் காணப்படுகிறதோ, அந்த பாகத்தின் பெயரால் கற்கள் குறிப்பிடப்படும். பித்த நீர்ப்பை (Gall bladder) கற்கள், சிறுநீரக கற்கள் சிறுநீர் பாதை கற்கள்.
கற்கள் சேரும் இடங்கள் – உடலில் இடுப்பெலும்பு கட்டு, சிறுநீர்ப்பை, சிறுநீரகம், சிறுநீர்பாதை இவைகளாகும். கற்கள் உண்டாகும் விதம் யூரோலித்தியாசிஸ் (Urolithiasis) ரீனல் லித்தியாசிஸ் (Renal lithiasis) மற்றும் நெப்ரோ லித்தியாசிஸ் (Nephrolithiasis) எனப்படும்.
உடல் கற்கள் உபாதைகள் 5 – 15 சதவிகித மக்களை பாதிக்கின்றன.
கற்களை பற்றி.
· உடல் கற்கள் ஒரு சிறு மணல் அளவில் இருக்கும். இல்லை ஒரு சிறிய பறவையின் முட்டை அளவும் இருக்கும். அரிதாக இதை விட பெரிய கற்களும் உருவாகலாம்.
· உடல் கற்கள் பொதுவாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களிலேயே உண்டாகிறது.
· சிறுநீரகக் கற்கள் உண்டாகுவது தற்போது அதிகரித்தே கொண்டே போகிறது. 14 ஆண்டுகளில் ஒருவருக்கும் 30 பெண்களில் ஒருவருக்கும் கற்கள் உண்டாகின்றன.
· 80 சதவிகித கற்கள் – யூரிக் அமிலம், சிஸ்டைன் (அமினோ அமிலத்தின் உள்ள ஒரு வகை அமிலம்) இவற்றில் ஆனவை
· கால்சியம் ஆக்ஸலேட் (Calcium oxalate) பெரும்பாலான கற்களின் உள்ள வேதிப்பொருள். இரண்டு சதவிகித கற்கள் கால்ஸியம் பாஸ்பேட் பால் (Calcium phosphate) ஆனவை. 9-17 சதவிகித மக்னீசியம் – அம்மோனியம் – பாஸ்பேட்டால் ஆனவை.
காரணங்கள்
1. சிறுநீரகப் பாதை தொற்று நோய்கள் – பேக்டீரியா, வைரஸ், பூசணம் (Fungus) இவற்றால் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்று நோய்கள். தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுநீரில் தான், ஸ்ட்ரூ வைட் (Struvite) கற்கள் ( மக்னீசியம், அம்மோனியா, மற்றும் பாஸ்பேட்) உண்டாகும்.
2. உணவு முறை – அதிக அளவில் மாமிச புரதத்தை உணவில் சேர்த்துக் கொள்வது.
3. சிறுநீரில் கற்கள் வராமல் தடுக்கும் சிட்ரேட் (Citrate) உள்ளது. இதன் அளவு குறைந்தால் கால்சியம் கற்களாக மாறும். தவிர பலவித “உப்புகள்” சிறுநீரில் சேர்வதும் காரணம். யூரிக் அமிலமும் கால்சியமும் சேர்ந்து சிறுநீரகம் சிறுநீர் பாதைகளில் கற்களாக மாறும். Gout வியாதியும் காரணம். அதிக அளவு யூரிக் அமிலமும் கற்களை ஏற்படுத்தும்.
4. அதிகமாக வைட்டமின் “டி” சேர்த்துக் கொள்வது.
5. உணவில் தேவைக்கு அதிகமான புரதம் உண்பது. தண்ணீர் குடிக்காமல் இருப்பது.
6. உயர் அழுத்த ரத்தம், ஸ்ட்ரெஸ் (Stress)
7. உடலின் நீர்மச்சத்து குறைபாடு (Dehydration)
8. வளர்சிதை மாற்றங்கள், கருத்தடை மருந்துகள்,
9. சிறுகுடல் அறுவை சிகிச்சைக்கு பிறகு கற்கள் தோன்றலாம்.
அறிகுறிகள்
1. கற்கள் சிறியவையாக இருந்தால் எந்த அறிகுறியும் தோன்றாது.
2. கற்கள் பெரிதாகி, சுற்றுமுள்ள நரம்புகளை அழுத்தலாம். அல்லது சிறுநீர் போக்கை தடைசெய்யலாம். இதனால்
· பரவலான வலி – தொடர்ந்து அல்லது விட்டுவிட்டு ஏற்படும்.
· சிறுநீரில் ரத்தம் போதல்
· சிறுநீர் அடிக்கடி வேண்டிய நிலை.
· பிரட்டல், வாந்தி,
· குளிர் ஜுரம் வரலாம்.
· கற்கள் நகர்ந்தால், முதுகெலும்பு வலி, சிறுநீரக பாகங்களில் வலி ஏற்படும்.
· தவிர அடிவயிறு, உள் தொடைகள், பிறப்புறுப்புகளில் வலி இங்கெல்லாம் வலி ஏற்படும்.
சிறுநீர் பரிசோதனை, ரத்தப்பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா – சவுண்ட் இவைகளால்
கற்கள் இருப்பதை கண்டு பிடிக்கலாம். பாதிப்புகள், அறிகுறிகள் இல்லாத வரை ஒரு சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும். சப்த – அலைகளால் (Sound Waves) கற்களை சிதைக்கும் சிகிச்சையில் கற்கள் பொடிக்கப்படுகின்றன. இவை பிறகு நோயாளி திரவங்களை குடித்து, சிறுநீருடன் பொடித்த கற்களை வெளியேற்றலாம்.
ஆயுர்வேத முறைகள்:
அ) கை வைத்தியம்
அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர் குடிப்பது சிறந்தது. இது சிறுநீர் எரிச்சலை தணிக்கும் பார்லி தண்ணீரும் நல்லது. தண்ணீர் 2 1/2 லிட்டர் ஒரு நாளைக்கு கூட குடிக்கலாம்.
· தர்பூசணி பழம் சாப்பிடுவது சிறுநீரக கற்களை போக்கும்.
· வெங்காய ‘டிகாக்ஷன் (Decoction) சர்க்கரையுடன் சாப்பிடலாம்
· கொள்ளினால் சூப் செய்து குடிக்க, கற்கள் சிதையும்
· ஒரு தேக்கரண்டி முள்ளங்கியை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து பருகலாம்
· துளசி சாறுடன் தேன் சேர்த்து குடிக்கலாம்
· ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை, ஒரு ஸ்பூனங வெந்தயம் சேர்த்து, ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க விடவும். இதை காலையில் குடித்து வரவும்
· அடிவயிற்று வலிக்கு சூடு ஒத்தடம் கொடுக்கலாம்.
· கால்சியம், வைட்டமின் ‘டி’, செறிந்த உணவுகளை தவிர்க்கவும்.
· மக்னீசியம் அதிகம் உள்ள பார்லி, மக்கா சோளம், ஓட்ஸ், சோயா, வேர்க்கடலை போன்றவைகளை சேர்த்துக் கொள்ளவும்.
· உணவில் உப்பை குறைக்கவும் குறைந்த அளவில் புலால், மீன், இவற்றை எடுத்துக் கொள்ளவும்.
· சிறுநீர் கற்களுக்கு அத்திப்பழத்தின் சாறு மிகவும் நல்லது.
ஆ) ஆயுர்வேத மருந்துகள்
1. நெரிஞ்சி (கோக்ஸீரா – Tribulus terrestries) சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், மற்றும் சிறுநீரக பாதையின் கற்கள், இவற்றை போக்கவல்லது. இதன் விதைகளும், வேர்களும் பயன்படுத்தப்படுகின்றன தனியாகவும், பிற மருந்துகளுடன் சேர்த்தும், நெரிஞ்சி உபயோகப்படும். இதன் குணங்கள்:- கற்களை போக்கும், சிறுநீரை பெருக்கும், சிறுநீர் வலியுடன் போகாமல் தடுக்கும், குளிர்ச்சியுள்ள மூலிகை.
2. கொத்தமல்லி :- சிறுநீர் போவதை சீராக்கும். இதன் விதை ( தனியா) களுடன், சம அளவு சீரகம் சேர்த்து கொதிக்க வைக்கவும். ஆறின பின் இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.
3. மரலிங்கம் ( வருண் – Crateva Nurvala) இதுவும் உடல் கற்களை போக்க பயன்படும் நல்ல மூலிகை. இதன் கஷாயம், சிறுநீர்பை, சிறுநீரக பாதைகள் வழியாக கற்களை வெளியேற்ற உதவும். சிறுநீர் தேங்குவதை குறைக்கும். இது ஒரு ஆன்டி செப்டிக் ( உடல் அழிவை தடுக்கும்) அதனால் சிறுநீர் பாதைகளில் உள்ள கிருமிகளை அழிக்கும்.
4. பஸ்சான்பேதா ( Country Borage – Rosa Rotula) சிறுநீர்பையில் ஏற்படும் கற்களை போக்கும் மூல வியாதிக்கும் மருந்து கிருமி நாசினி.
5. கோக் சூராதி குக்குலு:- பல மூலிகைகளின் கலவை. வளர்சிதை மாற்றத்துக்கு உதவி, உடலிலிருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்றும். சிறுநீரக பாதைகளில் ஏற்படும் தொற்று நோய்களை போக்கி, சிறுநீர் தேங்குவதை தடுக்கும். கற்களால் உண்டாகும் பாதிப்புகளை தவிர்க்கும்.
6. கீழாநெல்லி:- ( Phyllanthus Niruri)ss உடல் கற்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்வதை நிறுத்தும். கால்சியம் ஆக்ஸலேட் படிமங்கள் உண்டாவதை எதிர்க்கும். தசைகளை தளர்விக்கும்.
7. சந்திரப்ரபாவதி வடி – சிறுநீரக பாதிப்புக்களுக்கும் நீரிழிவு வியாதிக்கும் சிறந்த ஆயுர்வேத தயாரிப்பு.