உடல் அழகை பேணுவதில் எவ்வளவு ஆர்வம் எடுத்தாலும், ஒரு சிலருக்கு இயற்கையிலேயே துர்நாற்றம் வீசும். என்ன தான் நீங்கள் அழகு என்றாலும் வேர்வையின் துர்நாற்றம் காரணமாக, நமது அன்றாடத் தொடர்பில் உள்ள நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் உரையாடும் பொழுது, உடலிலிருந்து துர்நாற்றம் வீசுவதன் காரணமாக நெருங்கிப் பழக முடிவதில்லை. வியர்வையானது மனிதனுக்கு வெளிப்படலாம். ஆனால், வியர்வையில் நாற்றம் என்பது இருக்காது அமைய வேண்டும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
முடிந்த அளவு அசைவ உணவு, மைதா மாவு மூலம் செய்யப்படும் உணவுப் பண்டங்களை தவிர்க்க வேண்டும். வியர்வை நாற்றத்தை தீர்க்கும் அருமையான மருந்து எலுமிச்சை தான். எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும். அதன் ஒரு பாதி எலுமிச்சைப் பழத்தை உடல் எங்கும் சருமத்தில் நன்றாக தேய்த்துக் கொண்டு, ஒரு மணி நேரம் ஆன பின்பு சோப்பு கூட போடாமல் குளித்து வர வேண்டும். குளித்த பின்பு சென்ட், வாசனைப் பவுடர் எதுவும் பயன்படுத்தக் கூடாது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இவ்வாறு குளித்து வர சரும துர்நாற்றம் சுத்தமாக குணமாகி நிம்மதியடையலாம்.
குளிக்கும் நீரில் முதல் நாளே, துளசி இலைகளை ஊற வைத்து மறுநாள் குளித்து வர, வியர்வை துர்நாற்றம் போய் உடல் கமகமவென மணக்கும்.