நாம் காலையில் எழுந்த உடன் கேட்பது டீ தான். ஆனால், நாம் குடிக்கும் டீ சத்துள்ளதா என்று யாரும் யோசித்து பார்ப்பதில்லை. ஏனென்றால் நாம் வாழும் உலகம் மிக வேகமானது அதில் நமக்கு நிற்கக்கூட நேரமில்லை என்பதே மகத்தான உண்மை.
நம் உடலுக்கு நன்மை தரும் உணவுகளை உண்ண வேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால், ஒரு சில காரணங்களால் அது முடிவதில்லை. இனி நாம் உண்ணும் உணவு சுவையானதா என்று பார்பதற்கு முன் பாதுகாப்பானதா என்று பார்த்து உண்ணலாம்.
ப்ளு டீயின் பயன்கள்
· உடலில் உள்ள அதிகபடியான நச்சை நீக்குகிறது.
· ப்ளு டீயை தினமும் குடிப்பது வருவதன் மூலம் உண்ணும் உணவை எளிதில் செரிமானம் செய்கிறது.
· ப்ளு டீயை தினமும் குடிப்பதன் மூலம் உடல் சுருக்கத்தை தடுத்து, இளமையாக சருமத்தை வைக்க உதவுகிறது.
· காய்ச்சல் வருவதை தடுத்து, நம் உடலுக்கு தேவையான சக்த்தியை அளிக்கிறது.
· நமது உடல் மற்றும் உள்ளம் புத்துணர்ச்சியாக இருக்க ப்ளு டீ உதவுகிறது.
· சர்க்கரை நோயாளிகள் ப்ளு டீயை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம், நீரிழிவை கட்டுபாட்டில் வைக்க இது உதவுகிறது.
· இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், இதயத்தில் ஏற்படும் நோய்களையும் குறைக்க ப்ளு டீ உதவுகிறது.
· ப்ளு டீயை தொடர்ச்சியாக குடித்து வருவதனால் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தலை வளர செய்கிறது.
ப்ளு டீ
தேவையான பொருட்கள்
சங்கு பூ – 4
தண்ணீர் – 1 லு டம்ளர்
எலுமிச்சை – பாதி
தேன் – தேவையான அளவு
செய்முறை
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு எடுத்து வைத்துள்ள 4 சங்கு பூக்களை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதனை வடிகட்டி ஒரு கப்பில் ஊற்றி 2 சொட்டு எலுமிச்சை சாற்றை கலக்க வேண்டும். அதனுடன் தேவையான தேனை கலந்து பருகலாம். புத்துணர்ச்சியை தரும் ப்ளு டீ தயார்.