இரத்தமும் சுத்தமா இருக்கனும்

Spread the love

இரத்தம் என்பது அனைத்து உயிரினங்களிடமும் உள்ள சிவப்பு நிற திரவமாகும். இரத்தத்தின் முக்கியமான வேலை உடலில் உள்ள செல்களுக்கு தேவைப்படுகின்ற ஆக்சிஜனையும், ஊட்டச்சத்துக்களையும் கொண்டு சேர்ப்பதாகும்.

இரத்தமும் தானமும்

தானத்தில் சிறந்த தானம் எது? என்று கேட்டால் அவரவர் ஒவ்வொன்று கூறுவார்கள். ஆனால், உடல் உயிரோடு இருக்க முக்கிய காரணம் இரத்தம் தான் என்பதை, யாராலும்  மறுக்க முடியாது.

           “தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம்”

யார் இரத்த தானம் செய்யலாம்?

·           நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றவர்கள் இரத்தத்தை கொடுக்கலாம்.

·           18 வயதிற்கு மேல் 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இரத்தத்தை கொடுக்கலாம்.

·           குறைந்தது 45 கிலோ எடையாவது இருக்க வேண்டும்.

·           இரத்த தானம் செய்ய விரும்புபவர்களின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும்.

எனவே இரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது நம் கடமை ஆகும்.

இரத்த சுத்தம் அவசியம்

நம் உடலில் பல நோய்கள் ஏற்பட காரணமே, நம் உடலில் உள்ள இரத்தம் சுத்தமாக இல்லாதது தான். இரத்தம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும், அப்பொழுது தான் நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துப்பொருட்களான வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள்  உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக செல்லும்.

இரத்தம் சுத்தம் இல்லாததால் ஏற்படும் நோய்கள்

இரத்தம் சுத்தமில்லாததால் தான் நமக்கு பெரும்பாலான நோய்கள் ஏற்படுகின்றன. அவை என்ன என்பதை நாம் பார்ப்போம்.

·           முகப்பரு

·           அலர்ஜி

·           தலைவலி

·           மஞ்சள் காமாலை

·           முகத்தில் சுருக்கம்

·           எரிச்சல்

·           தலை சுற்றல்

·           கண் பார்வை மங்குதல்

·           இளமையில் முதுமை

·           முடி உதிர்தல்

சுத்தம் செய்யும் உணவுகள்

நம் உடலில் இரத்தம் என்பது முக்கியமானதாக உள்ளது. அதை சுத்தம் செய்யக்கூடிய உணவுகளை நாம் பார்ப்போம்.

நெல்லிக்காய் 

நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பல நோய்கள் குணமாகும். நெல்லிக்காயை பச்சையாக சாப்பிட்டு வந்தால் பற்களும், ஈறுகளும் உறுதி பெறும் மற்றும் இரத்தம் சுத்தம் அடையும்.

வேம்பும், புதினாவும்

புதினா இலை மற்றும் வேப்பிலை தளிரை சம அளவில் எடுத்து அரைத்து, தினமும் காலையில் நெல்லிக்காய் அளவுக்கு சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்தம் சுத்தம் அடையும்.

முருங்கை கீரை

முருங்கை கீரை பொரியல்

தேவையான பொருட்கள்

முருங்கை கீரை             –                1 கட்டு

துவரம் பருப்பு               –           1கப்

சிறிய வெங்காயம்           –                 1கப் (வெட்டியது)

பசும் நெய்                  –               தேவையான அளவு

கடுகு                       –                தேவையான அளவு

கறிவேப்பிலை               –                 1 இனுக்கு

செய்முறை

வாணலியை அடுப்பில் வைத்து அதில் பசும் நெய்யை  ஊற்றி கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு சிறிது நேரம் கழித்து நறுக்கிய சிறிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை கீரையை சேர்க்கவும். ஒரு கிளறு கிளறி பொரியலை மூடி வைத்து மூடி விடவும்.

5 நிமிடம் கழித்து மூடியை எடுத்து விட்டு அதில் சிறிது உப்பு மற்றும் பருப்பை சேர்க்கவும். ஒரு நிமிடம் கழித்து இறக்கி விடவும், சுவையான கீரை பொரியல் தயார்.

இந்த பொரியலை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தம் ஆகும்.

அருகம்புல்லும், கீழாநெல்லியும்

அருகம் புல்லையும், கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து அதனை  காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் இரத்தம் சுத்தம் ஆவதுடன், நம் உடலில் தோன்றும் பல நோய்களுக்கு இது பெரிய மருந்தாக இருக்கிறது.

குங்குமபூவும், தேனும்

தினமும் குங்குமபூவை ஒரு சிட்டிகை  தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தம் அடையும்.

இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டு வருவதனால் உடலில் உள்ள இரத்தம் சுத்தம் அடையும்.

கீ. பி


Spread the love