நாம் சாப்பிடும் உணவு உடலுக்கு நன்மை தரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் கேடுவிளைவிக்க கூடாது. இரத்தம் என்பது நமது உடல் இயக்கத்தின் அத்தியாவசியமான திரவம், அதை சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம். நாம் உட்கொள்ளும் உணவு மூலமாக அதை சுத்தம் செய்யலாம்.
உலர் திராட்சை, இரத்த சோகை ஏற்படாமல் தடுக்க கூடிய இரும்புசத்து நிறைந்த உணவு இதை தினமும் காலை 5, மாலை 5 தண்ணீரில் ஊறவிட்டு அல்லது வெறும் வாயில் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தத்தில் ஆக்ஸிஜன் செல்லவும் உதவியாக இருக்கிறது. அடுத்து அத்திபழத்தை தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகி உடல் வலிமை பெறும்.
வாரத்தில் மூன்று நாள், காலையில் தேனில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வர இரத்தம் சுத்தமாகும். நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வருவதால் பல விதமான நோய்களில் இருந்து விடுபடுவதோடு, வெறும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகுவதோடு இரத்தமும் சுத்தமாகும்.
கீரை, தேன், சுண்டைக்காய், முழு தானியங்கள், கிவிபழம், கேரட், பேரீட்சை, வெல்லம், முட்டை, ஈரல் இவையெல்லாம் இரும்பு சத்து அதிகமாகவே காணப்படுகிறது. இவைகளை சாப்பிடுவதால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம், இரத்தத்திற்கும் மிகவும் நல்லது. உணவில் அடிக்கடி பீட்ரூட்டை சேர்த்து சமைத்து வருவது நல்லது. பீட்ரூட், உடலில் புதிய இரத்தம் உருவாக ஊக்குவிக்கிறது. அதோடு பீட்ரூட்டை நறுக்கி, அதை பச்சையாக எலுமிச்சை சாற்றோடு கலந்து சாப்பிட்டால், இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.