பூண்டு:
இதில் அடங்கியுள்ள ஆர்கனோ ஸல்பர் கொன்ட அலிசின், காமா குளுடாமைன் போன்றவைகள் இரத்தக் குழாய்களை நல்ல நிலையில் வைக்கவும், கொலஸ்ட்ரால் குறையவும் உதவும்.
தக்காளி:
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவல்ல பொட்டாஷியமும் நிறைந்த அளவில் அடங்கியுள்ளது. விட்டமின் ‘சி’ மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பொருள்களும் உள்ளன. காமா அமினோ ப்யூட்ரிக் ஆசிட்டும் உள்ளது.
வாழைப்பழம்:
நிறைந்த அளவில் பொட்டாஷியம் தருகின்ற பழம் வாழைப்பழம். உடலின் சோடியம் அளவு உயராமல் இது நிறுத்துகிறது.
இளநீர்:
சிறந்த இயற்கை குடி நீரான இளநீர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது இதில் உயர்ந்த அளவில் பொட்டாஷியமும் விட்டமின் ‘சி’ யும் உள்ளது.
பசளிக்கீரை:
பசளிக்கீரையில் நிறைந்த அளவில் பொட்டாஷியம், கால்ஷியம், மக்னீஷியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இதய நோயை உண்டு பண்ணக் கூடிய “ஹோமோஸிஸ்ட்டின்” அளவை இது குறைக்கவல்லது.
ஓட்ஸ்:
ஓட்ஸிலுள்ள ஆகாரச் சத்தும், தாது உப்புகளும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவல்லவை.
வெண்ணெய் நீக்கிய மோர்:
உயர் இரத்த அழுத்தத்திற்கு மோர் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் கால்ஷியம், புரொட்டீன், வட்டமின் ‘ஞி’ போன்றவை உள்ளன.லேக்டோபேசிலஸ் உள்ள புளித்த தயிரும் மோரும் உணவின் செரிமானத்திற்குப் பெரிதும் உதவுகிறது.