விளக்குகிறது இந்த செய்தி பதிவு
18 முதல் 60 வயது வரை உள்ள இருபாலரும் ரத்ததானம் செய்யலாம். ரத்ததானம் செய்பவரின் எடை குறைந்தபட்சம் 45 கிலோ இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் அளவு 12.5க்கு மேல் இருக்க வேண்டும். ரத்தஅழுத்தம் இயல்பாக இருப்பது அவசியம். நம் ஒவ்வொருவருடைய உடலிலும் சுமாராக 5 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் 350 மி.லி. மட்டுமே பெறப்படுகிறது. இந்த ரத்தமும் 24 மணி நேரத்திற்குள் உற்பத்தி ஆகிவிடும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாராளமாக ரத்ததானம் செய்யலாம். ரத்ததானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். தானம் செய்தவுடன் வழக்கம்போல் அன்றாட வேலைகளை செய்யலாம்.
தவிர்க்க வேண்டியவர்கள்:
கருவுற்றிருக்கும் போதும், குழந்தைக்கு தாய்பபால் ஊட்டும் போதும் ரத்ததானம் செய்ய வேண்டாம். பெரிய அறுவைசிகிச்சை செய்த 6 மாதங்களுக்கும், சிறிய அறுவைசிகிச்சை செய்த 3 மாதங்களுக்கும் ரத்ததானம் செய்வதை தவிர்க்க வேண்டும். மலேரியா நோய்க்கு சிகிச்சை பெற்ற மூன்று மாதங்களுக்குள்ளும், மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்ற ஓராண்டு வரையும் தவிர்ப்பது சிறந்தது. பால்வினை, எச்ஐவி.நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்ததானம் செய்யவே கூடாது. மாதவிடாய் நேரங்கள், சர்க்கரை நோயாளிகள் ரத்ததானத்தை தவிர்க்கலாம். ஸ்டீராய்ட், ஹார்மோன் தொடர்பான மருந்துகள் உட்கொள்ளும்போதும், போதைமருந்து உட்கொள்பவர்கள் மற்றும் பாலியல் தொடர்புடையவர்களும் இவற்றை தவிர்க்க வேண்டும்