பல்ஈறு இரத்தக்கசிவு என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது பல்ஈறு நோய் போன்றவற்றுக்கான அறிகுறிகளாக தோன்றும்.
கருத்தில் கொள்ளவேண்டியவை
ஆரோக்கியமான ஈறுகளை பெறுவதற்கு பல் மருத்துவரைசந்தித்து அவரது அறிவுறைப் படி பேணுதல் மிகவும் நல்லது. ஒழுங்கு முறையற்ற பல் துலக்குதல், மிகவும் கடினமாக பல் துலக்கல் மற்றும் தவறான flossing நுட்பம் என்பனவும் எரிச்சலூட்டுகின்றது. ஆகையால் இவற்றை சரியான முறையில் செய்தல் அவசியம்.
காரணங்கள்
ஈறு வரியிலுள்ள பற்களில் பற்காறை குறைவாக நீக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே ஈறுகளிலிருந்து இரத்தக்கசிவு ஏற்படுகின்றது. இது காலப்போக்கில் பல் ஈறு வீக்கம் அல்லது ஈறுகளில் அழற்சி ஏற்படுதல் போன்றவற்றுக்கும் வழிவகுக்கும்.
தினமும் பல் துலக்குதல் மற்றும் பல் மருத்துவ சிகிச்சை இவற்றின் மூலம் பற்கறைகள் நீக்கப்படவில்லையாயின் பல்லில் படர்ந்திருக்கும் சீமை சுண்ணாம்பு (tartar) என்று அழைக்கப்படும் பொருள் படிவு கடினமாகின்றது. இறுதியில் இது அதிகமான இரத்த போக்கிற்கு வழிவகுத்து, மேற்படிகிறது. இது தாடை எலும்பு நோய்க்கும் வழிவகுக்கிறது.
பல்ஈறு இரத்தக்கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்
கடினமான பல் துலக்குதல் முறை
கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்
காரணமறியப்படா திராம்போசைட்டோபெனிக் தோலடி
ஒழுங்குமுறையற்ற flossing
பல் ஈறுகளில் ஏற்படும் தொற்றுக்கள்
லுகேமியா
சொறிகரப்பான் நோய்
இரத்தத்தை தண்ணீராக்கும் மருந்துகளின் பாவனை
வைட்டமின் கே குறைபாடு
எளிமையான வீட்டு பராமரிப்புகள்
பற்காறை நீக்குவதற்காக குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை சந்தித்து, அவர் ஆலோசனைப்படி நடப்பது அவசியம்.
மென்மையான, முள் மயிர் பல் துலக்கியின் உதவியுடன் பல் துலக்குதல் நல்லது. அதுமட்டுமின்றி உப்பு நீர்/ ஹைட்ரஜன் பெராக்சைடு/ நீர் பாவித்து கழுவுதல் போன்றவற்றை செய்யலாம். மோசமான பிரச்சனையைத் தரக்கூடிய வணிகரீதியான, ஆல்கஹால் கொண்டிருக்கும் வாய் கழுவும் திரவங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
ஒரு நாளுக்கு 2 முறைகள் Flossing செய்தல் பற் காறைகள் வளர்வதை தவிர்க்க முடியும், உணவு உண்ணும் நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் உண்ணும் திண்பண்டங்கள் மற்றும் சிற்றுண்டிகள் உண்பதை தவிர்ப்பதோடு கார்போஹைட்ரேட்டுள்ள உணவுகள் உண்பதை குறைக்கவும்.
ஈறுகளில் இரத்தப்போக்கை அதிகமாக்கக்கூடிய புகையிலை பாவனையை தவிர்க்கவும்.
இது விட்டமின் சத்துக்களின் குறைபாடுகளால் நிகழ்கிறது என அறிந்தால், அந்த விட்டமின் குறைபாட்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட விட்டமின் குறை நிரப்பிகளை சாப்பிடலாம்.
மருந்துகளின் விளைவாக எரிச்சல் ஏற்படுமாயின் அதற்கு பதிலான மற்றொரு பதில் நிரப்பி மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம். மருத்துவரது ஆலோசனை பெறாது மருந்துகள் மாற்றி பாவிக்கக்கூடாது.