கரும்புள்ளிகள் அகல எளிய வழி

Spread the love

கரும்புள்ளிகள் அகல:

1. ஒரு பங்கு எலுமிச்சைச் சாற்றில் ஒரு பங்கு கடலை எண்ணெய்ச் சேர்த்துக் குழப்பி முகத்தில் தடவி வர கரும்புள்ளிகள் மறையும்.

2. பப்பாளிப் பழத்தை தோல், சதை, விதைகள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து பசைபோல ஆக்கி முகத்தில் தடவிய பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து கழுவி விட வேண்டும்.

3. தக்காளியின் தோலை நீக்கிவிட்டுப் பழத்தை மட்டும் பிசைந்து முகத்தில் தடவி விட்டு பின்னர் ஒரு மணி நேரம் கழித்துக் கழுவி விடவும்.

4. மாதுளம் பழத்தின் தோலைக் காய வைத்துப் பொடியாக்கிப் பின்னர் எலுமிச்சைச் சாற்றில் கலந்து  பருக்களில் தடவ இரண்டு, மூன்று நாட்களில் பருக்கள் மறையும்.

5. குளிர்ந்த நீரினால் முகத்தை சுத்தம் செய்து பின் சுத்தமான கஸ்தூரி மஞ்சள் கிழங்கை பொடி செய்து  பசும்பாலில் குழைத்து  கீழிருந்து மேலாகத் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம்.

6. ஏலாதி தைலத்தை ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) பஞ்சில் நனைத்து இரவில் மெல்லிய பூச்சாக படை ( கரும்படை ) உள்ள பகுதிகளில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற விடலாம். பகலில் வெயிலின் பொழுது இதைச் செய்யக் கூடாது.

7. இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் முகத்தில் மெல்லிய பூச்சாக குங்குமாதி தைலத்தைப் பூசலாம்.

8. முகத்தில் ஏற்படும் கரும் புள்ளியைப் போக்க எளிமையான வழி ஒன்று. ஜாதிக்காய் ஒன்று எடுத்து தேங்காய்ப் பால் சிறிது விட்டு அரைத்துக் கொள்ளவும். அதை இரவில் கரும்புள்ளியின் மீது பூசி வரவும். தொடர்ந்து சில நாட்கள் இது போல செய்து வர கரும்புள்ளி காணாமல் போய்விடும்.

9. கோபி சந்தனம் ஒரு தேக்கரண்டியளவு எடுத்துக் கொண்டு ஒரு பாதாம் பருப்பை எடுத்து நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இவற்றை அரைத்து முகம், கழுத்து பகுதியில் நன்கு பூசுங்கள். சுமார் ஒரு மணி நேரம் உலர விடவும். இரண்டு நாடகளுக்கு ஒரு முறை இவ்வாறு செய்து வர முகப்பரு, கரும்புள்ளியிலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும்.

10. வசம்பு, கொத்தமல்லி விதை, பாச்சோடி இவற்றை தலா 25 கிராம் எடுத்து நன்றாக அலசிக் கொள்ளவும். பிறகு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம் ஊற விடவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுங்கள். தொடர்ச்சியாக இதனைச் செய்துவர முகப்பரு நீங்கி விடும்.

11. நெல்லிக் காய்களை ( விதையினை நீக்கி ) நன்றாக அரைத்து அதனை முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். பருத்தொல்லை நீங்கி விடும்.

12. தரமான பன்னீரை கொஞ்சம் எடுத்து முகத்தில் தேய்த்துக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவி வர பரு  நீங்கும்.

13. புதினா சாறு அல்லது துளசிச் சாறு எடுத்து பருக்களின் மீது தடவலாம்.

14. உள்ளுக்கு கற்றாழைச் சாறு அரைக் கோப்பை என்று தினசரி இரண்டு வேளை அருந்தி வரவும்.

15. சிகப்பு சந்தனம் 5 கிராம் மஞ்சள் பொடி 5 கிராம் அளவு எடுத்துக் கொண்டு சிறிது பால் சேர்த்துக் கலந்து பருக்களின் மீது தடவலாம்.

16. கொதிக்கும் நீரில் மஞ்சள் பொடி, துளசி இலைகளைச் சேர்த்து டவலால் தலையை மூடிக் கொண்டு ஆவி பிடிக்கலாம். இதனால் சருமத் துவாரங்கள் விரிவடைந்து அழுக்கும், கொழுப்பும் வெளி வரும். பிறகு முகத்தைச் சுத்தமாக கழுவவும்.

17. தனியா பொடி ஒரு தேக்கரண்டி, சிறிது மஞ்சள் பொடி சேர்த்து இரவில் படுக்கும் முன் பருக்களின் மேல் தடவவும். காலையில் கழுவி விடவும்.

18. இதைப் போல சீரகப் பொடியையும் பசை போல் செய்து பருக்கள் மேல் தடவி ஒரு மணி நேரம் சென்ற பின்பு முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.

19. விளாம்பழ விழுது 2 தேக்கரண்டி, பயத்தம் பருப்பு 2 தேக்கரண்டி, பாதாம் பருப்பு இரண்டு மட்டும் இவை அனைத்தையும் முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் எடுத்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இக்கிரிமை முகத்தில் பூசி வர நாள்பட்ட பருக்கள் கூட படிப்படியாக மறைந்து விடும். தழும்பு இருந்த இடம் தெரியாது. விளாம்பழம், பாதாம் பருப்பு தோலை மிருதுவாக்குகிறது. பயத்தம் பருப்பு சருமத்தைச் சுத்தம் செய்ய உதவுகிறது.


Spread the love
error: Content is protected !!