கறிவேப்பிலை மிளகு குழம்பு

Spread the love

தேவையான பொருட்கள்: 

கறிவேப்பிலை             – 2 கைப்பிடி அளவு

மிளகு                     – 20

உளுத்தம்பருப்பு            -2டீஸ்பூன்                                                             துவரம்பருப்பு              – 1 டீஸ்பூன்           

சீரகம்                     – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்          –  2

புளி                      – 1 பெரிய நெல்லிக்காய் அளவு

கடுகு                    – 1 டீஸ்பூன்

எண்ணெய்               – 4 டீஸ்பூன்

 உப்பு                    – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும். கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து எடுத்து கொள்ளவும். இதனுடன் புளி, உப்பு சேர்த்து, நீர் விட்டு நைஸாக மிக்ஸியில் அரைக்கவும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து, பின் அரைத்ததை போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு:

இந்தக் குழம்பு, பிரசவித்த பெண்களுக்கு மிகவும் நல்லது. மழை நேரத்தில் ஏற்படும் ஜுரம், உடல் வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

லு. விண்ணரசி


Spread the love