கருப்பு நிற ஐஸ்கிரீம்

Spread the love

ஐஸ்கிரீம் பால் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஐஸ்கிரீம் வெனிலா, ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட்,  மா,  திராட்சை என பல பல சுவைகளுடன் மஞ்சள், நீலம், பழுப்பு, ஆரஞ்சு, பச்சை என பல வண்ணங்களிலும் கிடைக்கிறது. இப்போது இவ்வரிசையில் கருப்பு நிற ஐஸ்கிரீமும் சேர்ந்திருக்கிறது.

பொதுவாகவே நாம் உண்ணும் உணவுகள் கருப்பு நிறத்தில் இருப்பதில்லை. அப்படி இருக்கையில் நமக்கு கருப்பு நிற ஐஸ்கிரீம் சற்று ஆச்சர்யத்தை கொடுக்கிறது. சமீப காலமாக பிரபலமடைந்து வரும் கருப்பு நிற ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் பொருள் தான் என்ன? இதனால் ஏதேனும் நன்மை உண்டா?. வாருங்கள் இவற்றிற்கான விடைகளைக் காண்போம்.

கார்பன் ஐஸ்கிரீம் தயார் செய்யும் முறை

 கருமை நிறத்தை கொடுப்பதற்கென கருமை நிறமுடைய கரி எனப்படும் பிரத்தியேகக் கார்பன் (activated carbon ) இதில் சேர்க்கப்படுகிறது. அதாவது அதிக வெப்பநிலையில் தேங்காய் ஓட்டினை எரிப்பதன் மூலம் இப்பிரத்தியோகக் கார்பன் தயார் செய்யப்படுகிறது. பிறகு  நீராவியை பயன்படுத்தி எண்ணற்ற துளை அமைப்புகள் (porous structure) இக்கார்பனில் உண்டாக்கப்படுகிறது. இத்தகைய கார்பன் அதீத புறப்பரப்பினை (Surface area) கொண்டதாக இருக்கிறது.

கார்பன் ஐஸ்கிரீமின் விளைவுகள்

கார்பன் ஐஸ்கிரீமில் உள்ள கார்பனின் அதீத புறப்பரப்பின் காரணமாக, பலவகையான சேர்மங்கள் கவரப்படுகின்றன. இத் தன்மையால் இது மருத்துவத் துறையில் நச்சு நீக்கியாக (detoxifier) பயன்படுத்தப்படுகிறது. நம் உடலில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை இக்கார்பன் கவர்ந்து வெளிக் கொணர்ந்து விடுகிறது. மேலும், உடல் எடை மற்றும் கொழுப்பினைக் குறைக்கிறது. நம் பற்களில் ஏற்படும் கறைகளை நீக்கி பற்களை வெண்மையாக்குதல் என பல மருத்துவ குணங்களும் இதற்கு  இருக்கிறது. ஆகவே, ஐஸ்கிரீமில் சேர்கக்ப்படும் கார்பனால் கருப்பு நிறம் கிடைப்பதோடு மருத்துவ பயன்களும் உள்ளன.

அதே நேரத்தில், இதற்கு எதிரான கருத்தும் நம் முன் வைக்கப்படுகிறது. அதாவது, அதீத புறப்பரப்பு கொண்ட   இக்கார்பன் நச்சுப்பொருட்களை மட்டுமில்லாமல்,  நம் உடலிற்கு தேவையான சத்துப்பொருட்களையும் கவர்ந்து வெளித் தள்ளும் நிலையை உண்டாக்கும். மேலும், ஐஸ்கிரீமில் இருக்கும் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உடலில் சேராமல் இது கவர்ந்து இழுத்து வெளிக் கொணரலாம் . என்கின்றனர் ஒரு பிரிவினர். (கார்பனின் அளவு அதிகரிக்கும் போது) தொடர்ந்து கார்பன் ஐஸ்கிரீமை உண்பதால் ஊட்டச்சத்து குறைபாடும் உண்டாகலாம் என்கின்றனர்) இத்துறை வல்லுநனர்கள்.

எனவே, இந்த கார்பன் ஐஸ்கிரீமை அளவோடு உண்டால் பாதிப்புகள் ஏதும் இல்லை என்பது இவர்களின் கருத்தாகும்.


Spread the love