வெளிநாட்டவரும் பயன்படுத்தும் கருப்பு கவுனி அரிசி

Spread the love

ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் கருப்பு கவுனி அரிசியை “பேரரசர் உணவு” என்று கூறுவர். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி இரகங்களை காட்டிலும் இதில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் இவை மிகக் குறைந்த அளவே பயிரிடப்படுகிறது. வெள்ளை மற்றும் பழுப்பு நிற அரிசியுடன் ஒப்பிடுகையில், கவுனி அரிசி அதிக அளவில் புரதம் மற்றும் இரும்புச்சத்தும், குறைந்த அளவில் மாவுச்சத்தும் நிறைந்துள்ளது.

இதன் சிறப்பை அறிந்த அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இவ்வகை அரிசியை பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.

மிகுந்த மருத்துவ குணங்களை கொண்ட இவ்வகை அரிசியை சீனாவில் பண்டையகாலத்தில் வாழ்ந்த அரசர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். சில காலங்களுக்குப் பின் இதன் மருத்துவ குணத்தை உணர்ந்த மக்களும் அதனை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். இதனால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இதனை பயன்படுத்த சீனாவில் தடை விதித்துள்ளனர்.

மருத்துவ குணங்கள்

கவுனி அரிசியின் கருப்பு நிறத்திற்கு காரணம் இதன் வெளிப்புற அடுக்கில் காணப்படும் ‘ஆன்தோசயானின்’ என்னும் நிறமியாகும். இது இரத்த நாளங்களில் படியும் கொழுப்பை கட்டுப்படுத்தி, இரத்த நாளங்கள் முதிர்ச்சியடையாமல் பாதுகாக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் நீரிழிவு, இதய நோய், புற்றுநோய், எடை அதிகரிப்பு, கல்லீரல் பாதிப்புகள், மலச்சிக்கல், செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.

மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கண் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. உடல் எடை குறைக்க விரும்புவோர் தாராளமாக இந்த அரியை பயன்படுத்தலாம்.

இவ்வகை அரிசியை கொண்டு சாதம், புட்டு, தோசை, கொழுக்கட்டை, இட்லி, லட்டு, இடியாப்பம், பழ புட்டிங், பேரிச்சை கீர் போன்ற பலவித உணவுகள் சமைத்து உண்ணலாம்.

கவுனி அரிசி உருண்டை

தேவையான பொருட்கள்

கவுனி அரிசி மாவு – 250 கிராம்,

தேங்காய் துருவல் – 100 கிராம்,

நாட்டுச்சக்கரை அல்லது கருப்பட்டி தேவையான அளவு.

செய்முறை

கவுனி அரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் அரைக்கவும்.

அரைத்த மாவை பாத்திரத்தில் வைத்து தண்ணீர் தெளித்து உதிரியாக பிசையவும். தண்ணீர் தெளித்து பிசையும் போது மாவு கெட்டியாக மாறிவிடக்கூடாது. மாவில் ஈரப்பதம் இருக்க வேண்டும்.

பின் இதனை சல்லடையில் சலித்து ஐந்து நிமிடங்கள் சென்ற பின் இட்லி பாத்திரத்தில் வைத்து ஏழு நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

மாவு நன்கு வெந்ததும் அதனை மற்றொரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் நாட்டுச்சக்கரை சேர்த்து பிசைந்து உருண்டை வடிவில் பிடித்து பரிமாறவும்.

சுவையான கவுனி அரிசி உருண்டை தயார்.

மல்லிகை அரிசி

மல்லிகை மலரின் வாசனையை கொண்டுள்ளதால் இவை மல்லிகை அரிசி என பெயர் பெற்றது. இது தாய்லாந்தில் விளைவிக்கப்படுகிறது. நீளமாக காணப்படும் இவ்வகை அரிசியில் அமைலோபெக்டின் குறைவாக இருப்பதால் வேக வைக்கும் போது ஓட்டும் தன்மை குறைவாக காணப்படுகிறது.

மல்லிகை அரிசியை சமைக்கும் முன் அரை மணி நேரம் ஊறவைத்து பின் உப்பு கலந்த நீரில் 20 நிமிடங்கள் வேக வைக்கவும். குக்கரில் சமைத்தால் சிம்மில் வைத்து 40 நிமிடங்கள் சமைக்கவும்.

இது அமெரிக்காவில் கிடைக்கும் வெள்ளை அரிசி வகையாகும். இது தனித்துவமான அமைப்பு மற்றும் இனிப்பு நறுமணம் உடையது. இதனை காற்றுச்சீரமைப்பி கொள்கையில் வைத்து ஆறு மாத காலத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.

சீனாவிலும், ஜப்பானிலும் பெரும்பாலும், குட்டையான ஒட்டும் தன்மை அதிகமுள்ள அரிசி இரகங்களே பயன்படுத்தப்படுகின்றன.

ஆயுர்வேதம்.காம்


Spread the love