பாகற்காய் டீ தெரியுமா?

Spread the love

பாகற்காய் நம் அனைவருக்கும் பிடித்த காய் இல்லை என்றாலும், இது உடலிற்கு மிகவும் ஆரோக்கியமானது என்பது நாம் அறிந்ததாகும். பாகற்காய் ஜூஸ் போட்டு குடித்தால் அதிகளவு நியூட்ரியேஷன் நம் உடலிற்கு கிடைக்கிறது. இது படர்கொடியை சார்ந்த ஒரு வகை தாவரம். பாகற்காய் டீ நம்  உடலிற்கு மிகவும் நல்லது. இந்த பாகற்காயின் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பது பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.

காய்ந்த பாகற்காய், பாகற்காய் டீ பவுடர், பாகற்காய் இலை, பாகற்காய் விதை வைத்து பாகற்காய் டீ செய்கின்றனர்.

பாகற்காயில் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து , வைட்டமின் A,  B,  C,  E,  K, கனிமங்களான சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, பாஸ்பரஸ், சாம்பல் சத்து, சோடியம், துத்தநாகம் ஆகியவை அடங்கியுள்ளது.

பாகற்காயின் மருத்துவ குணங்கள்

நமது இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை குறைக்க பாகற்காய் பயன்படுகிறது.

பாகற்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கல்லீரலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கவும் பயன்படுகிறது.

பாகற்காய் டீ யில் வைட்டமின் A, பீட்டா கரோட்டின் உள்ளதால் இது கண்பார்வையை மேம்படுத்துகிறது.

மூச்சு சம்மந்தமான பிரச்சனையை நீக்குகிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், நீரழிவு நோயாளிகளுக்கும் பாகற்காய் மிகவும் நல்லது.

பாகற்காய் புற்றுநோய் செல்கள் பெருகாமல் பாதுகாக்கிறது. சிறுநீரக கற்களையும் நீக்குகிறது.

இரத்தத்தை தூய்மையாக்கவும், இதயத்தை சீராக வைக்கவும் பாகற்காய் உதவுகிறது.

தோல் அரிப்பு மற்றும் எரிச்சல் நீங்க பாகற்காயை அரைத்து அந்த கலவையுடன் சிறிது மஞ்சள் தூள், கற்றாழை சாற்றினை ஒன்றாக சேர்த்து அரிப்புள்ள இடத்தில் தடவவும். இதை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.

முகம் பொலிவுடன் காணப்படவும் பாகற்காய் உதவுகிறது. பாகற்காய் சாற்றை முகத்தில் தடவி, 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நல்ல பலனை காணலாம். 

குறிப்பு:

·           கருவுற்றிருக்கும் பெண்கள் பாகற்காயை அதிகமாக உட்கொள்ளுதல் கூடாது. இதனால்  கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

·           பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது.


Spread the love