கரிசலாங்கண்ணியின் சிறப்பு

Spread the love

கரிசலாங்கண்ணிக் கீரை ஆயுர்வேத மூலிகைகளில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அக்காலத்தில் இக்கீரையை பயிரிட அரசரிடம் அனுமதி வாங்கி வரி செலுத்தித் தான் பயிரிட முடியுமாம். நம் முன்னோர்கள் இந்த மூலிகைச்செடிக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளனர். வாரத்திற்கு இரண்டு முறை கரிசலாங்கண்ணிக் கீரை உண்பதால் எவ்வி நோயும் நம்மை அனுகாது. குறிப்பாக மஞ்சள் காமாலை நோய் தடுக்கப்படுகிறது. கரிசலாங்கண்ணி கீரையை எவ்வாறெல்லாம் உபயோகப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இங்கு நாம் பார்க்கலாம்.

 1. மஞ்சள் காமாலையால் அவதிப்படுபவர்களுக்குக் கரிசாலாங்கண்ணி கீரையை அரைத்து ஒரு சுண்டக்காய் அளவு பாலில் கலந்து கொடுக்கலாம்.
 2. அனைத்து விதமான காமாலை நோய்களுக்கும் கரிசலாங்கண்ணி கீரை மிகவும் நல்லது.
 3. ஆஸ்துமா உள்ளவர்கள் தினமும் கரிசலாங்கண்ணி சாறெடுத்து 1௦௦ மிலி அளவு சாப்பிட்டு வர ஆஸ்துமா விரைவில் குணமாகும்.

 1. இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் கரிசாலாங்கண்ணி சாப்பிடுவது மிகவும் நல்லது.
 2. கரிசலாங்கண்ணிச் சாறெடுத்து 3௦ மிலி அளவு தினமும் காலையில் சாப்பிட்டு வர சிறுநீர்ப் பிரச்சனைகள் நீங்கும்.
 3. குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடித்தால், கரிசலாங்கண்ணிச் சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவிற்கு தினமும் குடிக்க கொடுக்க நல்ல பலனைக் காணலாம்.
 4. கரிசலாங்கண்ணிச் சாறுடன் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாகத் தைலப்பதத்திற்கு காய்ச்சி உடம்பில் மேற்பூச்சாகப் பூசி வர சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்றவை நீங்கும்.
 1. கரிசாலாங்கண்ணிக் கீரையுடன் வெல்லம், எள் சேர்த்து லட்டு போன்று செய்து குழந்தைகளுக்கு தினமும் ஒரு உருண்டை அளவு கொடுத்து வர இரத்த சோகை நீங்கும். மேலும் இது நினைவாற்றலை அதிகரிக்கிறது.
 2. கரிசலாங்கண்ணிக் கீரையை பொடி செய்து தினமும் உடலில் தேய்த்து குளித்து வர தோல் மினுமினுக்கும்.
 3. கரிசலாங்கண்ணிக் கீரையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு தேய்க்கலாம். இவ்வாறு உபயோகப்படுத்துவதால் முடி நன்கு வளர்ந்து உதிர்வது குறையும், இளநரை மாறும், பொடுகு தொல்லையும் குறையும்.
 4. கரிசலாங்கண்ணிக் கீரையை பல் தேய்க்கப் பயன்படுத்தலாம், இவ்வாறு செய்வதால் பல் ஈறுகள் வலுவாகும், பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழியும்.

Spread the love