பெண்களுக்கான சிறப்பு நடைபயிற்சி

Spread the love

நடப்பது ஆரோக்கியத்திற்கும் அத்தியாவசியமான விஷயம் தான். இந்த நடையில் ஆண் பெண் பாகுபாடு இருக்கிறதா என்ன? பிறகேன் இந்தத் தலைப்பு என்று நீங்கள் நினைக்கலாம். ஆண்கள் நடைபயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களும் பெண்கள் நடைபயிற்சி செய்யும்போது கவனிக்க  வேண்டிய விஷயங்களும் பெண்கள் நடைபயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களும் சிலவற்றில் வேறுபடத்தான் செல்கின்றன.

பெண்கள் தளர்ந்த ஆடைகளை அணிவதாக நினைத்துக் கொண்டு உள்ளடைகள் ஏதுமில்லாமல் வேகவேகுமாக நடந்தால் அது பிறருடைய கண்களை உறுத்தும். கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கும். ஆகவே நாகரிகமாக உடையணிந்து செல்ல வேண்டும்.

குண்டாக இருக்கும் பெண்கள் வேகமாக நடக்க முடியாது. அதற்காக வேகமாக நடக்க வேண்டும் என்ற அவசியமில்லை மெதுவாகக் கூட நடக்கலாம். வீட்டுக் கவலைகளை நினைத்துக் கொண்டே நடைபயிற்சி செல்வதை அறவே தவிர்த்து விடுங்கள்.

பெண்களின் அழகைக் கெடுப்பது இடுப்பைச் சுற்றியுள்ள தேவையில்லாத தசைதான். கொடியிடை என்று பெண்களின் இடை குறித்து கூறுவதும் இதனால் தான். ஆகையால் இடுப்பை சுற்றியுள்ள தேவையற்ற தசைகள் கரைய நடைபயிற்சி மேற்கொள்வதே சிறந்தது. தொப்பை வயிறும் சேர்ந்தே குறையும்.

கருப்பை பிரச்சனை உள்ள பெண்கள் மருத்துவரின் ஆலோசனை கேட்ட பிறகே நடக்க வேண்டும். இல்லையெனில் கருப்பை கீழிறங்கி வரக்கூடிய ஆபத்து உண்டு.

கருவுற்றிருக்கும் பெண்கள் முதல் நான்கு மாதங்கள் கண்டிப்பாக எந்தப் பயிற்சியையும் மேற்கொள்ளக் கூடாது. ஓய்வு எடுக்க வேண்டும். ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு மென்யான நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக நடைபயிற்சி செய்தால் கரு சிதைவிற்கான வாய்ப்புகள்  ஏற்பட்டு விடும். மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கும் கருவுற்ற பெண்கள் நடக்கவே சுடாது.

நடப்பதால் கருவுற்ற காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய், உயர் அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. தூய்மையான காற்று இதயத்துக்கு கிடைக்கிறது. குழந்தையும் சுத்தமான காற்றை சுவாசிக்கிறது.

நடப்பதைத் தவிர வேறு எந்த பயிற்சியும் இக்காலக்கட்டத்தில் செய்ய முடியாது. நடக்காமல் இருந்தால் கை, கால்களில் வீக்கம் வரும். சுகப்பிரசவம் நிகழ குனிந்து நிமிந்து கடுமையான வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை, நடந்தாலே போதும்.

பிரசவம் ஆனதற்குப்பின் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். வயிறு பெறுத்து காணப்படும். சுகப்பிரசவம் நிகழ்ந்தவர்கள் வயிற்றில் பெல்ட் கட்டி குறைத்து விடுவார்கள்.

நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மாதவிடாய்ப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்

உடலில் உள்ள ஹார்மோன் சுரப்பிகள் காரணமாகவே பெண்கள் பூப்பெய்வதும், மாதவிடாய் நின்றுபோவதும் நடைபெறுகிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம். அதற்கு பால்அருந்துவதோடு கால்சியம் மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனையுடன் உட்கொள்ள வேண்டும்.

மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். காரணமின்றி எரிச்சலும் கோபமும் ஏற்படும். தனக்கு யாருமே இல்லை என்பது போன்ற கற்பனைகள் தோன்றும்.வாழ்க்கையே வெறுமையாகி விட்டது போன்ற மனநிலையை ஏற்படுத்தும்.

இத்தகைய மனநிலையிலிருந்து விடுபட பெண்கள் நடைபயிற்சி செய்வதால் எலும்பு தேய்மானத்திலிருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வெண்டும்.

பெண்களைச் சுற்றி எப்போதும் பிரச்சனைகளும் வேலைகளும் இருந்து கொண்டே இருக்கும். அவற்றிலிருந்து மீண்டு உடலைக் காப்பது பெண்களின் கையில் தான் இருக்கிறது.

தினமும் 45 நிமிடம் நடை பயிற்சியை மேற்கொண்டால் மெனோபாஸ் உள்ளிட்ட பல பிரச்சனைகளிலிருந்து மீண்டுவிட முடியும்.


Spread the love