வைட்டமின் டி – சூரிய ஒளி விட்டமின்

Spread the love

நமக்கு இலவசமாக கிடைக்கும் விட்டமின் தான் விட்டமின் டி. இதை நாம் நேரடியாக சூரிய ஒளியிலிருந்து பெறலாம். தினமும் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரம் வெய்யில் குளியல் செய்தால் போதும். இந்த குறிப்பிட்ட நேரம் மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா – வயலெட் கதிர்கள் நாம் உடலின் கொழுப்பு திசுக்களில் மேல் படியும் போது, இரசாயன மாறுதலால் வைட்டமின் டி தோன்றுகின்றது. எவ்வளவு நேரம் சூரிய ஒளி பட வேண்டும் என்பது பல விஷயங்களை பொருத்தது. நம்முடைய தோல் நிறம், வயது எப்போது வீட்டிலிருந்து வெளியே செல்கின்றோம் முதலியவை அடிப்படை காரணங்கள்.

வெள்ளை தோல் உள்ளவர்கள், தினமும் 1/2 மணி நேரம் நேரடியாக சூரிய ஒளியில் உலாவினால் அவர்களுக்கு தேவையான விட்டமின் டிஉருவாகி விடுகின்றது. குளிர்காலத்தில் சிறிது அதிக நேரம் பிடிக்கும். கருமை நிறமுடையவர்கள் சூரிய ஒளியில் அதிக நேரம் உலாவினால் சர்ம பாதிப்புகள் ஏற்படலாம். கோடையில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி நேரம் வெளியே போவதை தவிர்ப்பது நல்லது. போக நேர்ந்தால் குடை (அ) தொப்பி, உடல் முழுவதும் மூடும் ஆடைகளுடன் செல்லவும். சன் கிரீம் லோசன்-ஐ தடவிக் கொள்ளலாம்.

பயன்கள்

உணவிலிருந்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்களை உடல் கிரகிக்க உதவுகின்றது. இதனால் எலும்புகள், பற்கள் வலிவடைகின்றன.

விட்டமின் டி குறைந்தால் பஞ்சு போல் நெகிழ்ந்து வளையும். எலும்பு நோயான ரிக்கெட்ஸ் குழந்தைகளை தாக்குகின்றது.

விட்டமின் டி குறைபாட்டினால் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படும்.

கிடைக்கும் பொருட்கள்

சூரிய ஒளி

பால்

வெண்ணெய்

தானியங்கள்

கீரை, காய்கறிகள்

முட்டை

மீன்கள்.

தினசரி தேவை

50 வயதை தாண்டியவர்களுக்கு தாங்கள் வழக்கமாக உட்கொள்வதை விட இரு மடங்கு அதிகம் எடுத்துக் கொள்ளவும்.70 வயதை தாண்டியவர்களுக்கு இன்னும் அதிகம் தேவை.

50 வயதிற்கு குறைந்தவர்கள் – 200 ஐ.யு.

51 லிருந்து 70 வயது வரை – 400 ஐ.யு.

70 வயதை தாண்டியவர்கள் – 600 ஐ.யு.

வைட்டமின் டி குறைந்தால்

முன்பு சொன்னபடி குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் ஏற்படும். ஆஸ்டியோ பொராசிஸ் ஏற்படலாம்.

காது கேளாமை, வாய் தொண்டை எரிச்சல்.

எலும்பு, தசை பலவீனமடையும்.

அதிகமானால்

பசியின்மை, தலை வலி, பேதி ஏற்படலாம். உடல் சோர்வடையும். கால்சியம் தேங்கி அதிக அளவு நாளங்களில், சிறுநீரகத்தில், இதயத்தில் படிந்து பல நோய்களை உண்டாக்கும்.

உணவு நலம் நவம்பர் 2011

வைட்டமின் டி, வைட்டமின் டி குறைந்தால், ஆஸ்டியோ பொராசிஸ், காது கேளாமை,


Spread the love