பொதுவாக இந்தக் கால அளவு ஒவ்வொரு தனிநபரின் உடல் எடையையும், தேவையையும், சக்தியையும் பொறுத்து அமைகிறது. என்றாலும், குறைந்தது 30 முதல் 40 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்தால்தான் அதன் பலனை அடைய முடியும். அதுவும் முன்பே சொன்னது போல் வாரத்திற்கு நான்கைந்து முறையாவது இருக்க வேண்டும். தினந்தோறும் செய்து வந்தால் மிகவும் நல்லது.
விரைந்து நடப்பவர்கள் 4 முதல் 5 கிலோ மீட்டர் தூரமும், துள்ளு மெல்லோட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் 8 கிலோ மீட்டர் தொலைவும் சென்று வரலாம். ஆனால் எந்த உடற்பயிற்சியை எடுத்துக் கொண்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தையும் தூரத்தையும் உயர்த்திக் கொண்டே வாருங்கள்.
இதற்கு முன் நீங்கள் உடற்பயிற்சி செய்யாதவராக இருந்தால் உடற்பயிற்சிகளை நிதானமாகத் துவங்கிப் பின்னர் உயர்த்திக் கொள்ளலாம். தொடர்ச்சியாகச் செய்து வந்தால் உடற்கட்டு உறுதிப்படும். மனதிற்கு உற்சாகமாகவும் உடல் இருக்கும்.
விரைவான நடையினால் எரிக்கப்படும் கலோரிகளின் அளவு
மணி ஒன்றுக்கு வேக விகிதம் செலவாகும் கலோரி
100 3.5
A.e.
200 5.0
A.e
300 6.5
A.e
400 8.0
A.e
உண்ட உணவு செலவழிய ஆகும் நேரம் நிமிடக்கணக்கில் தரப்பட்டுள்ளது
உணவு வகை நடத்தல் ஓடுதல் சைக்கிள் ஓட்டுதல் உட்கார்ந்திருத்தல் நீந்துதல்
ஆப்பிள் 19 5 12 78 9
வாழைப்பழம்(பெ) 17 4 11 68 8
ஆரஞ்சு (2) 13 4 8 52 6
மாம்பழம்(நடு) 30 8 19 123 14
காரட் (பச்சை) 8 2 5 32 4
வெள்ளரிக்காய் 1 _ _ 5 _
முட்டை(அவித்தது) 15 4 9 59 7
ஆம்லெட் 21 6 13 85 10
கோழி ரோஸ்ட்(1/4) 32 8 20 130 15
மட்டன்(100கிராம்) 37 10 23 150 17
மீன் (100 கிராம்) 20 5 13 85 10
பால்_1 டம்ளர் 32 9 20 128 15
(180 மி.லி)
மோர் 1 டம்ளர் 5 1 3 21 2
(180 மி.லி)
போர்ன்விடா 50 13 31 200 23
(180 மி.லி)
பீர் 1குவளை
240 மி.லி 22 6 14 88 10
தயிர் 1 கப்
90 மி.லி 11 3 7 46 5
ஐஸ்கிரீம் 37 10 24 148 17
ரொட்டி வெண்ணை 15 4 10 60 7
இட்லி_2 23 6 14 92 11
வீட்டு தோசை 125 7 15 100 12
சப்பாத்தி 2 12 3 7 46 5
பூரி 2 6 1 3 23 2
பீன்ஸ் அவித்தது
1 கப் 5 1 3 21 2
பச்சைப் பட்டாணி
1 கப் 11 3 7 43 5