எந்த கூந்தலுக்கு எந்த ஷாம்பு பயன்படுத்தலாம்?

Spread the love

பெண்கள் பொதுவாக, பல ஆயிரங்கள் செலவழித்து வாங்க கூடிய பொருட்களுக்கு கூட பல மணி நேரம் சிந்திப்பதில்லை , ஆனால் தங்கள் கூந்தல் பராமரிக்கு மட்டும் ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை யோசிக்க வேண்டியுள்ளது. அப்படி யோசித்து வாங்கும் ஷாம்புக்கள், அவர்களின் கூந்தலுக்கு ஏற்றதா என்று பார்ப்பதும் இல்லை, மற்றவர்கள் சொல்லியோ, அல்லது ஷாம்புவின் மணம், ஸ்டிக்கரின் நிறம் மற்றும் விளம்பரம் இதை வைத்து வாங்கி விடுகிறார்கள். வாசனைக்கும், புத்துணர்ச்சிக்கும் அளவில்லாமல் போனாலும் ஆரோக்கியம் அவசியம்தானே! அந்த வகையில் பெண்கள் எந்த வகையான கூந்தலுக்கு என்ன ஷாம்பு உபயோகிக்கலாம் என்பதை பார்ப்போம். 

சுருள் முடி

பெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் இயற்கை கொடுக்கும் ஆசிர்வாதம்தான் சுருள் முடியை கொண்ட கூந்தல். வெட்ட வெட்ட முளைத்து வரும் முடி வளர்ச்சியை கொண்டிருப்பவர்களுக்கு, எப்படி தங்கள் முடியின் அருமை தெரியாதோ அது போலவே சுருள் முடியை கொண்டிருப்பவர்களும். சுருள் முடி சீக்கிரமாகவே தன்னுடைய ஈரப்பதத்தை இழந்து விடும். இதனால் முடிகள் உலர்ந்து உதிரவும் தொடங்கும். சுருள் முடிக்கெனவே மார்க்கெட்டில் பல ஷாம்புக்கள் பரிந்துரைக்கப்படுகிறது. அதில், சோயா, சில்க், ப்ரோடீன், பெயின், செராமிட்ஸ், ஃபேட்டி ஹால்கஹால்ஸ், சொல்யுபெல் சிலிகான்ஸ்  மற்றும் இயற்கை மூலப்பொருட்களை கொண்டுள்ள ஷாம்புக்களை உபயோகிக்க, ஆரோக்கியமான சுருள் முடியின் சொந்தக்காரராக மகிழ்ச்சியில் திளைக்கலாம்.

அடர்த்தி குறைவு

அடர்த்தி குறைந்த கூந்தலை கொண்டவர்களுடைய ஷாம்புவில் கூந்தலை அடர்த்தியாக்க உதவும் புரோட்டின் மற்றும் பாலிமர்கள் கொண்ட மூலப்பொருட்கள் இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டு வாங்கவேண்டும். இப்படி தேர்ந்தெடுக்கப்படும்  இந்த குணமுள்ள மூல பொருட்களை  கொண்ட ஷாம்பூவை உபயோகித்து வந்தால் விரைவில் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.

வெளுத்த, நிறமாரிய

கூந்தல் வெளுத்தோ அல்லது நிறமற்று இருந்தால், டெட்டாங்க்லெர், அவோகேடோ ஆயில், ஆர்கன்  ஆயில் , மற்றும்  ஆலிவ் ஆயில் மூலப்பொருட்களையும்,  கூந்தலை சரியான மெலனின் அளவு கொண்டதாக கலர் பேலன்ஸ் செய்யக்கூடிய ஷாம்புவை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விதமான ஷாம்பூ கூந்தலின் நிறத்தை மாற்றவும், முடி வேர்கள் வரை சென்று நிறமிழப்பையும் தடுக்கும்.

எண்ணெய் பசை

நீங்கள் உண்மையில் எண்ணெய் பிசுக்கு உள்ள கூந்தலை சரிசெய்ய விரும்பினால், அதற்கான தனித்துவம் வாய்ந்த ஷாம்புவை தேர்ந்தெடுக்க வேண்டும்.  எண்ணெய்ப்பசை மற்றும்  அதிக சீபத்தை வெளிப்படுத்துகிற கூந்தலுக்கு, கற்றாழை, காட்டன், மூலிகைகள் போன்ற மூலப்பொருட்களை கொண்ட  முடியின்  தன்மையை பாதுகாக்கும் மற்றும் ரீஸ்டோரேஷன், டிடங்கிளின்  ஷாம்பூவை தேர்ந்தெடுக்க வேண்டும்.    

ஆண்கள் ஷாம்பு பயன்படுத்தலாமா…

ஷாம்பு என்றாலே பொதுவாக பெண்களுக்கானது என்ற ஒரு அடிப்படை கருத்து இருந்து வருகிறது. அதற்கு காரணம், எந்த விதமான அழகு சார்ந்த விளம்பரங்கள் வந்தாலும், அதில் பெண்களை மையப்படுத்தியே இருக்கும். இருந்தும் ஆண்கள் ஷாம்பு உபயோகித்தாலும், கொஞ்சம் குழப்பத்திலேயே காணப்படுவார்கள். அதனால் எந்த குழப்பமும் வேண்டாம். ஆண்களுக்கு தலைமுடி வளர்ச்சி குறைவு, பெண்களுக்கு அதிகம்.  இந்த ரெண்டு வித்தியாசம் மட்டும்தான் உள்ளது. மற்றபடி, யார் வேண்டாலும் ஷாம்பு பயன்படுத்தலாம், அது நம் தலை முடிக்கு சரியானதா என்று அறிந்த பின்பு. மேலே குறிப்பிட்டுள்ள  ஷாம்பு வகைகளின் பயன்கள் ஆண்களுக்கும் பொருந்தும்.

பொதுவாக ஆண்கள் தங்கள் தலை முடியில் பிரச்னை ஏற்படும் வரை எவ்வித தீர்வையும் தேடி போக மாட்டார்கள். அவசரத்திற்கு கிடைப்பதை பயன்படுத்தி விடுவதும் பெரும்பாலான ஆண்களின் குணாதிசயம். தங்களுக்கு பொருந்திய ஷாம்புவை தேர்ந்தெடுத்த பின்னர் ஆண்கள் எப்படி அதை பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். அதாவது குளிக்கும்பொழுது, ஷாம்பூவை நேரடியாக உச்சந்தலைக்கு அப்ளை செய்ய கூடாது.

முதல் தடவை, போதுமான அளவு ஷாம்புவை கொஞ்சம் தண்ணீரில் கலக்கி அதன் பின்னர் ஈரத்தலையில் பின்பகுதியில் இருந்து தேய்த்து, பின்பு தலை முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும். இதுதான் முறை. அப்படி மசாஜ் செய்யும் பொழுது விறல் நகங்களை பயன்படுத்தாமல், விறல் நுனியால் லேசாக மசாஜ் செய்ய வேண்டும். ஷாம்பு வெகு நேரம் தலையில் ஊறவிடாமல், ஒரு மூணு நிமிஷம் கழித்து, குளிர்ந்த நீரில் தலையை அலசி கொள்ளலாம்..அலசி முடிச்சதும், நல்ல கண்டீஷனரை பயன்படுத்தலாம்.. கண்டீஷனரில் தண்ணீர் சேர்க்க வேண்டும் என்பது அவசியமில்லை, அப்படியே பயன்படுத்தலாம். சந்தோச குளியலுக்கு பின்னர், நன்கு காய்ந்த டவலை கொண்டு தலையை லேசாக துவற்றுவது நல்லது. ஏனெனில், ஈரமாக உள்ள தலையை வேகமாக துவற்றினால், முடி அதிகமாக உதிர நேரிடும்.


Spread the love