மேலை நாட்டு உணவுகள் பை

Spread the love

மேலை நாடுகளில் பரவலாக காணப்படும் உணவு வகை பை ஆகும். இது நெருப்பில் வேக வைக்கப்பட்டு மாவு ரகமாகும். (பிரட் போல). இதன் உள்ளே காரம் அல்லது இனிப்பு பொருட்கள் நிரப்பப்பட்டிருக்கும். இரண்டு விதமான பை உள்ளது ஒன்று உள்ளே பொருட்கள் நிரப்பப்பட்டது. இதன்ன ஃபில்ட் பை என்கின்றனர். மற்றொன்று மாவின் மேல் பகுதியில் பொருட்கள் வைக்கப்பட்டு அதன் மேலும் மாவு பூசப்பட்டிருக்கும். இதனை “டாப் கிரஸ்ட் பை” – என அழைக்கப்படுகின்றது.

காலம் காலமாக பைகள் நடைமுறையிலிருந்துள்ளது பழங்கால குறிப்புகளில் காணப்படுகின்றது. எகிப்தியர்கள் பழங்காலந் தொட்டே பை உணவுகளை உட்கொண்டதற்கான குறிப்புகள் காணப்படுகின்றது. இங்கிலாந்து நாட்டில் 12 ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஸ்னரி பை விளக்கப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே பை நடைமுறையில் இருந்து வந்துள்ளது தெரியவருகின்றது.

பை தோன்றிய கதை விசித்திரமானது அந்தக் காலத்தில் மாவு தயாரிக்கப்பட்டு அது சுடப்பட்டு சாப்பிடப்பட்டது. ஆனால் அது சுவையாக இல்லாததால் எப்படி அதிக சுவை சேர்ப்பது எனும் ஆராய்ச்சியில் இறங்கினர் அக்காலத்தினர் அப்போது பிரட்டுடன் சில சேர்மானங்களை – காரம் அல்லது இனிப்பு பொருட்களை சேர்த்து உண்ண ருசி கூடியது சாப்பிடுவதும் எளிதாக இருந்தது. இவ்வாறு இருக்கும் பொழுது எப்படி உள்ளே வைக்கும் பொருட்களை மாவுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு சமைப்பது எப்படிப்பட்ட பாத்திரத்தின் உள்ளே வைப்பவற்றை உபயோகிப்பது என யோசித்து மாவிலேயே ஒரு பாத்திரம் போல செய்து சமைத்தனர் அப்பொழுது அடுப்பிலிட்டு சுடும் பொழுது அந்த பொருட்கள் பொங்கி வரத் துவங்கின. அவை பொங்கி வெளிவராமலிருக்க கொஞ்சம் கெட்டியான மாவை வைத்து அந்த மாவுப் பாத்திரத்தை மூடி சுட்டு எடுத்து, பின்பு அதனை உடைத்து திறந்து சாப்பிட்டனர்.

ருசி நன்றாக இருக்கவே மாவில் ஒட்டியிருக்கும் உணவை சாப்பிட ஆரம்பித்தனர். அப்படியே மாவையும் சாப்பிட்டனர். இதுவே பிற்காலத்தில் பை எனும் உணவாக உருவெடுத்தது. பை இருவகைப்படும் ஒன்று இனிப்பு பை. இவை பொதுவாக உணவு உண்ட பின்பு ஐஸ்கிரீம் அல்லது பழங்களும் சாப்பிடப்படுகின்றது. இது ஒரு வகையான பொருட்கள் நிரப்பப்படும் கேக் வகை என்று கூட கொள்ளலாம். இதில் நிரப்பப்படும் பொருட்கள், முந்திரி, பிஸ்தா, பாதாம், தேன் உலர் பழங்கள், பழங்கள் கிரீம் போன்றவையாகும். இவையே இந்தியா போன்ற கிழக்கு நாடுகளில் பெரிதும் உபயோகிக்கப்படுகின்றது.

மற்றொரு வகை பை கார வகையாகும். இவை உணவாக உண்ணப்படுகின்றது. இவற்றின் உள்ளே நிரப்பப்படும் பொருட்கள் கோழி, இறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டு இறைச்சி போன்றவையாகும். இவ்வகை பெரிதும் மேலைநாடுகளிலேயே உண்ணப்படுகின்றது.

இனிப்பு வகை பைகள் மிகவும் ருசியானவை உண்ணத்தூண்டும் வண்ணங்களில் இருக்கும். உண்ண உண்ண தெவிட்டாதவை. இங்கே 3 வகையான பைகள் செய்யும் விதங்களை விளக்கியுள்ளோம். நீங்களும் செய்து பார்த்து கொண்டாடலாம்.

ஆயுர்வேதம். காம்


Spread the love