உங்களை யாராவது எது சிறந்த பழம் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? என்ன ஆப்பிள் என்பீர்களா? அல்லது எது உங்களுக்கு பிடித்த பழமோ அதைச் சொல்வீர்களா? அது தான் இல்லை.
பழங்கள் எல்லாமே சிறந்த பழங்கள் தான். அனைத்து பழங்களிலுமே அதிகமான போஷாக்கும், தாதுப்பொருட்களும் நிரம்பி உள்ளன. எல்லாப் பழங்களுமே சிறந்தவை தான் – ஏதாவது ஒரு வகையில் சில உடல்வாகு உள்ளவர்களுக்கு சில பழங்கள் சிறந்தவை சில உடல்வாகு உடையவர்களுக்கு மற்றவை சிறந்தவை.
வளரும் குழந்தைகளுக்கு சிறந்த பழமாக விளங்குவது பெரியவர்களுக்கு உகந்தது அல்ல. நீரிழிவு உடையவர்களுக்கு சில பழங்கள் நற்பயன்களைத் தரும். சில வகை ஒத்துக் கொள்வதில்லை. யார் யாருக்கு எந்த பழம் சிறந்தது என சுருக்கமாக பார்ப்போம்.
சேர்க்க வேண்டியவை
குழந்தைகளுக்கு-வாழைப்பழம், பெரியவர்களுக்கு -கொய்யாப்பழம், நீரிழிவு உடையவர்களுக்கு -பப்பாளி, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு -கொய்யா, வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்களுக்கு -மாதுளை, பெண்களுக்கு- திராட்சை, குண்டானவர்களுக்கு-பைனாப்பிள், ஒல்லியானவர்களுக்கு- வாழைப்பழம், வயதானவர்களுக்கு- கொய்யா, மூட்டுவலி உடையவர்களுக்கு- கொய்யா, வாய்வுத் தொல்லை உடயைவர்களுக்கு- கொய்யா, வயிற்றில் பூச்சி உள்ளவர்களுக்கு- சீதாப்பழம், இவை ஒவ்வொரு குணநலனின் அடிப்படையிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
தவிர்க்க வேண்டிய பழங்கள்
மலச்சிக்கல் உள்ளவர்கள்-சப்போட்டா, சளி உள்ளவர்கள்-கொய்யா, வாழைப்பழம், குண்டானவர்கள்-வாழைப்பழம், ஒல்லியானவர்கள்-பைனாப்பிள், நெஞ்செரிச்சல் உள்ளவர்கள்-எலுமிச்சம்பழம், வாய்வுத்தொல்லை உள்ளவர்கள்-ஆப்பிள்.