குழந்தைகள் உணவு

Spread the love

குழந்தைகளின் வளர்ச்சி முதல் 1 வயது வரை விரைவாக இருக்கும். ஒன்றிலிருந்து 6 வரை வளர்ச்சி நிதானமாக இருக்கும். சூழ்நிலை வளர்ப்பு முறை இவை குழந்தைகளின் உணவு முறைகளை நிர்ணயிக்கும். இந்த வளரும் பருவத்தில் ஆரோக்கியமான சத்தான உணவுகள் தேவை. இரண்டாவது வருடத்தில் குழந்தையின் உயரம் 10 செ.மீ. அதிகமாகும். எடை 2 – 2.5 கிலோ கூடும். இரண்டு வயதுக்கு பிறகு வருடத்தில், உயரம் 6 – 7 செ. மீ ஆகவும், எடை 1.5 – 2 கிலோவாகவும் அதிகரிக்கும். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், குழந்தைகள் வளர வளர, மாற்றங்கள் தெரியும்.

சக்தி – கார்போஹைடிரேட்

மாவுச்சத்து இவை வளர்ச்சிக்கும், செயல்பாடுகளுக்கும் தேவை. இந்த எரிசக்தி இல்லாவிட்டால், ஓடி ஆடி விளையாடவோ, வேலை செய்யவோ முடியாது. முக்கியமான மாவுச்சத்து குளூகோஸ் எனப்படும் சர்க்கரை. இது மூளைக்கும், நரம்புகளுக்கும் தேவையான எரிசக்தி.

ரத்தத்தின் சிவப்பணுக்கள் உபயோகிப்பது இந்த குளூகோஸ் தான். மாவுச்சத்து தானியங்கள் காய்கறிகள் முதலியவற்றி இந்த மாவுச்சத்து அடங்கியுள்ளது.

தானியங்கள்

கோதுமை, அரிசி, பருப்புகள் போன்றவைகள் உங்கள் குழந்தைக்கு தேவையான சக்தியை கொடுக்கும். கூட இவைகளில் வைட்டமின்கள் தோல் நீக்கப்படாத, அதிகமாக பதப்படுத்தப்படாத முழுதானியங்கள் சிறந்தவை. உதாரணமாக கைக்குத்தல் அரிசி, புழுங்கலரிசி போன்றவை. இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தவிர, நார்சத்து மிகுந்த பழங்கள், விதைகள், காய்கறிகள் மலச்சிக்கலை தடுக்கும்.

ஆப்பிள், பழுப்பு ரொட்டி, கேரட் இவை எல்லாம் உகந்தவை. பொரித்த மக்காசோளம்) நார்ச்சத்து மிகுந்தது. நார்ச்சத்துடன் அதிக திரவப் பொருட்கள் குடிப்பது சீரணத்துக்கு நல்லது.

புரதம்

மாமிச உணவின் புரதம் முழுமையானது. ஆனால் கொழுப்பும் சேர்ந்தது. சைவ உணவின் புரதம் முழுவதும் கிடைக்க இரு வகை உணவுகளை சேர்க்க வேண்டும். உதாரணமாக அரிசியுடன், பீன்ஸ் (விதைகள்) அல்லது சோயா.

கொழுப்புச்சத்து

வைட்டமின் ஏ, டி, , கே மற்றும் பீடா – கரோடீன் இவைகளை உடல் ஏற்றுக் கொள்ள கொழுப்புச் சக்தி தேவை. ஆலிவ் எண்ணெய், சோள எண்ணெய், சோயா எண்ணெய், சூர்யகாந்தி எண்ணெய் போன்றவை கொலஸ்ட்ராலை ஏற்காது. வெண்ணெய், மார்கரீன், நெய் போன்றவை கெடுதலான கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். ஆனால் குழந்தையின் 2 வயது வரை கொழுப்பான உணவுகள் குழந்தைக்கு தேவை என்பதை மறக்க வேண்டாம்.

கால்சியம்

எலும்புகளுக்கு தேவை கால்சியம் 225 மி.லி. பாலில் 300 மி.கி. கால்சியம் உள்ளது. தவிர, கால்சியம் தசைகளின் வேலைப்பாட்டிற்கு உதவுகிறது.

இரும்புச்சத்து

தேவையான இரும்புச்சத்து, சமைக்கப்பட்ட பீன்ஸ், முட்டை, வேர்க்கடலை, வெண்ணெய், பாதாம் போன்ற பருப்புகள், விதைகள் இவற்றிலிருந்து கிடைக்கும். இந்த உணவுகள் வைட்டமின் H தேவையையும் பூர்த்தி செய்யும்.

வைட்டமின்கள், தாதுப்பொருட்கள்

இவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. தாவிர எண்ணெய், கோதுமை, பச்சை கீரைகள், காய்கறிகள், பருப்புகள், (பாதாம் பருப்புகள்), பால், தயிர், சீஸ், பழங்கள், மீன், மாமிசம், ஒட்ஸ் போன்ற உணவுகள் வளரும் சிறுவர்களுக்கு தேவையான வைட்டமின்களையும் தாதுப்பொருட்களையும் கொடுக்கும்.

பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை

தாய்ப்பால் கொடுப்பது தான் சாலச்சிறந்தது. முதல் 6 மாதங்களுக்காவது கட்டாயமாக கொடுக்க வேண்டும். அதுவும் தாய்ப்பாலை குழந்தை பிறந்தவுடன் கொடுக்க வேண்டும். சீம்பால்என்று ஒதுக்கி 2, 3 நாள் கழித்து கொடுப்பது தவறு.

பால் புட்டிகளை உபயோகிப்பது கடினம். சுத்தம் செய்வது கடினம். தொற்றுவியாதிகள் வரும் வாய்ப்பு அதிகம்.

முதல் ஒரு வயதிலிருந்து மூன்று வயது வரை குழந்தைகளுக்கு 2, 3 டம்ளர் பால், பருப்பு, தானியங்கள் தினம் இரண்டு வேளை, முட்டை வாரத்திற்கு நான்கு இவைகளை கொடுக்க வேண்டும். வேக வைத்த காய்கறிகள், கீரைகள், சீஸனுக்கு ஏற்ப பழங்கள் இவை நாளொன்றுக்கு 2 வேளை தர வேண்டும்.

குழந்தைகள் நான்கு அல்லது ஆறு மாதம் வந்தவுடன் பாதி கன உணவைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் எண்ணெய் கலந்து கொடுக்கவும்.

குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு வருட வயது வந்தவுடன் தாயார் சாப்பிடும் உணவின் பாதி அளவு குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

உணவு நலம் ஜுன் 2011

குழந்தைகள் உணவு, உணவு முறை, சத்தான உணவுகள், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், குழந்தைகள், சக்தி, கார்போஹைடிரேட், மாவுச்சத்து, மூளை, நரம்பு,

சிவப்பணுக்கள், குளூகோஸ், தானியங்கள், கோதுமை, அரிசி, பருப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி, நார்சத்து மிகுந்த பழங்கள், விதைகள், காய்கறிகள், ஆப்பிள், பழுப்பு ரொட்டி, கேரட், புரதம், கொழுப்புச்சத்து, வைட்டமின், , டி, , கே, பீடா கரோடீன், கொழுப்புச் சக்தி, கொலஸ்ட்ரால், கால்சியம், இரும்புச்சத்து, பீன்ஸ், முட்டை, வேர்க்கடலை, வெண்ணெய், பாதாம், பருப்புகள், வைட்டமின், பி, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், ஆரோக்கியம், தாவிர எண்ணெய், கோதுமை, பச்சை கீரைகள், காய்கறிகள், பருப்புகள், பால், தயிர், சீஸ், பழங்கள், மீன், மாமிசம், ஒட்ஸ், உணவுகள், பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை,

தாய்ப்பால் கொடுப்பது, பால் புட்டிகளை உபயோகிப்பது கடினம், தொற்று வியாதிகள், வேக வைத்த காய்கறிகள், கீரைகள், பழங்கள், குழந்தைகள்,


Spread the love