ஆண், பெண் இல்லற வாழ்க்கையில் உடலுறவு என்பது ஒரு பகுதியான நிகழ்ச்சி.காதலும், காமமும் சேர்ந்தது தான் வாழ்க்கை.ஆண்மைக் குறைபாடுகள் பலவகை இருந்தாலும் ஒரு ஆடவனுக்கு மிகவும் முக்கியமான ஒரு சில பிரச்சனைகள் தான் மிகுந்த கவலையை அளிக்கின்றன. அவைகளில் குறி விறைப்புத் தன்மையடையாமல் தளர்வுற்று காணப்படுதல், விந்து முந்துதல், நரம்புத் தளர்ச்சியின் காரணமாக நீண்ட நேரம் உடலுறவு கொள்ள இயலாமை முக்கியமானவையாகும். அது போல பெண்களுக்கும் உடலுறவில் நாட்டமின்மை, பெண் மலட்டுத் தன்மை போன்ற முக்கிய பிரச்சனைகளாகும். ஆயுர்வேதம் பயன்படுத்தும் மூலிகைகள் மேற்கூறிய ஆண், பெண் இருபாலரிடமும் காணப்படும் செக்ஸ் பிரச்சனைகளுக்கு பக்க விளைவுகள் ஏதுமின்றி உடலையும், உள்ளத்தையும் வலிமை படுத்தி மகிழ்ச்சிகரமாக செயல்பட வைக்கிறது. கீழே நாம் குறிப்பிட்டுள்ள மூலிகைகள் விந்தணுக்களின் இறப்பைக் குறைத்து, விந்து விருத்தியாக, விந்தணுக்களின் நடமாட்டத்தை அதிகரிக்க, விறைப்புத் தன்மையை உண்டாக்க, விந்து முந்துதலைத் தடுக்க, செக்ஸ் உணர்வைத் தூண்ட உதவுகின்றன.
அஸ்வகந்தா
தமிழில் அமுக்கிராக் கிழங்கு என்று கூறப்படும்.பழங்காலத்திலிருந்தே செக்ஸ் குறைபாடுகளைக் குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் இம்மூலிகை காமசூத்திரத்தில் வாத்ஸ்யானரால் குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு ரத்த நாளங்களை விரியச் செய்து அதிக இரத்தம் பாய உதவுகிறது.பாலுணர்வு மகிழ்ச்சிகரமாக அமைய உடலுக்கு வலிமையினைத் தருகிறது.செக்ஸ் குறைபாடுகளுக்குத் தரப்படும் ஆயுர்வேத மருந்துகளில் அஸ்வகந்தா ஒரு முக்கிய மூலிகை ஆண் ஹார்மோனான ‘டெஸ்டோஸ்டிரோன்’ செயல்பாடுகளைத் தூண்டுகிறது.இளமையினை நீட்டிக்கும் இம்மூலிகை இந்திய ஜின்செங் என்று அழைக்கப்படுகிறது.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் இம்மூலிகை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது. அஸ்வகந்தா ஒரு பங்கும், கற்கண்டு மூன்று பங்கும் சேர்த்து ஒவ்வொரு வேளைக்கும் 4 கிராம் அளவு எடுத்துக் கொண்டு, தினசரி காலை மாலை இருவேளை ஓரிரு டம்ளர் பசும்பாலில் கலந்து அருந்தி வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வலுப்பெறும்.அழகு தரும்.உடலுறவின் போது ஆண் குறி விறைப்புத் தன்மையை அதிகரிக்க அஸ்வகந்தா சூரணம், லேகியம் போன்றவை உதவுகிறது.
பூனைக் காலி
விந்துவின் தரம், உடலுறவுக்கான வலிமை, உடலுறவில் இச்சை போன்றவற்றை அதிகரிக்கச் செய்யும்.நரம்புக் கோளாறுகளை குணப்படுத்தும்.ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களின் பாலியல் பிரச்சனைகளையும் பூனைக்காலி மூலிகை சரி செய்யும்.ஆண்குறி விரைப்புத் தன்மை இழப்பை மீட்டுத் தரும்.தண்ணீர்விட்டான் கிழங்குடன் பூனைக்காலி மூலிகை சேர்த்து தயாரிக்கப்படும் மருந்து விந்துவின் தரத்தை அதிகரிக்கும்.
அதிமதுரம்
பாலியல் செயல்பாடுகளுக்கு முக்கியமான சுரப்பி அட்ரினல் சுரப்பியாகும்.அதிமதுரம் அட்ரினல் சுரப்பியை நன்கு இயங்கச் செய்யும்.அட்ரினலின் ஒரு முக்கியமான சுரப்பி நேரடியாக செக்ஸ் உணர்வுகளை கட்டுபடுத்துகிறது.அட்ரினலின் சுரப்பி குறைந்தால் செக்சில் ஈடுபாடும் ஆசையும் குறையும்.சக்தியில்லாமல் போகும்.அதிமதுரம் மூலிகை கலவைகள் சரிசம நிலையை தோற்றுவிக்கும்.
நெருஞ்சில்
உடலுறவுக்கான ஆர்வத்தைத் தூண்டும், அதிகரிக்கும்.ஆண் ஹார்மோனை அதிகரிப்பதன் காரணமாக, இந்திய மற்றும் சீன மருத்துவ சிகிச்சையில் முக்கிய மருந்தாக கருதப்படுகிறது.பெண்களில் புரோலாக்டின் அளவைக் குறைக்கிறது.புரோலாக்டின் அளவு அதிகமானால் பெண்களின் உடலுறவு ஆசை குறையும்.பெண்களின் மலட்டுத் தன்மையை குணப்படுத்த நெருஞ்சில் பயன்படுகிறது.ஆண் பெண் உறுப்புகளின் செயல்பாட்டைச் சீராக்கி இருவருக்கும் பாலியல் உணர்வைத் தூண்டுகிறது.
ஆண்மைக் குறை நீங்க நெருஞ்சில் உடன் தேன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்ட்ரோன் உற்பத்திக்குக் காரணமான லியூடினைசிங் ஹார்மோன்களை ஊக்குவிக்கிறது 30 நாட்கள் நெருஞ்சியை உட்கொண்டு வர ஆண் மலட்டுத் தன்மை நீங்கும். ஆண்மை பெருக நெருஞ்சி முள்ளை சேகரித்து அதை பசும்பாலில் வேக வைத்து உலர்த்தி பொடி செய்து கொள்ளவும்.அவ்வாறு தயாரித்த பொடியில் 2 கிராம் அளவு எடுத்து காலை, மாலை இருவேளை என தினசரி பசும்பாலில் கலந்து அருந்தி வர வேண்டும்.விந்து அதிகரிக்கும்.நெருஞ்சி இலையை வெள்ளாட்டு பாலுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டிய பின்பு தேன் கலந்து அருந்தி வர ஆண்மை அதிகரிக்கும்.
சிலாஜித்
இமய மலை, நேபாளம் போன்ற இடங்களில் பாறையிலிருந்து வெளிவரும் தார் போன்ற ஒரு பொருள் மண்ணில் மக்கிப்போன தாவரங்களின் மூலம் கூட சிலாஜித் உண்டாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிலாஜித்தில் நான்கு வகைகள் உள்ளன.தங்க சிலாஜித், வெள்ளி சிலாஜித், செம்பு சிலாஜித், இரும்பு சிலாஜித் என்பனவாம்.இவை முறையே சிகப்பு, வெள்ளை, நீலம், பழுப்பு வண்ணங்களில் காணப்படும்.இரும்பு சிலாஜித் வகை தான் நமக்கு அதிகமாக கிடைக்கிறது.ஆயுர்வேத ஆசான் சரகர் சிலாஜித் பற்றி கூறுகையில் குணம் பெறும் வியாதிகளில், சிலாஜித் குணப்படுத்தாத வியாதி எதுவுமில்லை என்கிறார்.சிலாஜித், அஸ்வகந்தாவுடன் சேர்த்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் செக்ஸ் குறைபாடுகளுக்கு வழங்கப்படுகின்றன.சிலாஜித் பெண்களின் மலட்டுத் தன்மையை குணப்படுத்தவும் உதவுகிறது.
வெள்ளை முஸ்லி
வெள்ளை முஸ்லி சதாவரி போன்றது.பல கிளைகளை உடைய முட்செடி.செடி முழுவதும் ஒரு அங்குல நீளமுள்ள முட்களிருக்கும்.இதன் கிழங்கு (ரிசோம்) வெண்மை நிறமாக 20 செ.மி.நீளம் இருக்கும்.வெள்ளை முஸ்லியானது இளமையைத் தக்க வைக்கும் வயாகராவுக்கு இணையான ஒன்றாகும்.ஆண்களின் குறைபாடுகளில் முக்கியமான ஆணுறுப்பு விரைப்புத் தன்மை இல்லாமல் போவதை குணப்படுத்தும்.பலவித ஆயுர்வேத, யுனானி, அலோபதி, ஹோமியோபதி மருந்துகளில் வெள்ளை முஸ்லியானது வலிமையூட்டும் ஆண்மை பெருக்கியாக உபயோகிக்கப்படுகிறது.
முஸ்லியில் உள்ள கிளைகோசைட் ஆண்மைக் குறைவிற்கு நல்ல மருந்தாகும்.விந்து அளவு, விந்தணுவின் ஆற்றல், எண்ணிக்கையைப் பெருக்குகிறது.இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவையும், சிரம் புரத அளவையும் அதிகரிக்கச் செய்கிறது.ஆயுர்வேத மருந்தான ஷயனபிராஷ் என்ற இளமையைத் தக்க வைக்கும் மருந்தில் வெண்முஸ்லி ஒரு முக்கிய பகுதிப் பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது.முஸ்லி உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்… இளமையைத் திரும்பி வரச் செய்யும் என்று ஆயுர்வேத ஆசான்களான சரக சம்சுதர், சரகர், சுஸ்ருதர் வாகபட்டர் ஆகியோர் கூறுகிறார்கள்.
சதாவரி
சதாவரி தாவரத்தின் சாறு வெண்ணெய், பசுவின் பால் ஆகியவை கலந்து கொதிக்க வைக்கப்பட்டு கோவக் கிருதா என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. இத்துடன் வால் மிளகு, தேன் மற்றும் சர்க்கரைச் சேர்த்து பாலுணர்வைத் தூண்டும் வலுவேற்றியாக பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் விட்டான் கிழங்கு என்று அழைக்கப்படும். சதாவரி என்பதன் அர்த்தம் வடமொழியில் 100 கணவர்கள் உடையவள் என்று பொருள் தரும். சதாவரி பெண்களுக்கு ஏற்ற ஒரு டானிக் மருந்தாகும். மலட்டுத் தன்மையை சரி செய்து, உடலுறவுக்கேற்ற ஆற்றலைத் தரும். மாதவிடாய்க் கோளாறுகளையும் குணப்படுத்தும். பூப்பெய்திய காலத்தில் இருந்து மெனோபாஸ் காலம் வரை பயன்படுத்தலாம். இரத்த விருத்தியைத் தூண்டும். சாதாரணமாக பூனைக்காலியுடன் சதாவரியைச் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்து விந்துவின் தரம், அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பால்வினை நோயான கொனேரியாவினைக் குணப்படுத்த பாலுடன் கலந்து தரப்படுகிறது.
கற்றாழை
தமிழில் குமரி என்றும் அழைக்கப்படும் கற்றாழை குமரியைப் போல இளமையைத் தரும். தினசரி ஒரு மேசைக் கரண்டி கற்றாழைச் சாறு குடித்து வர இளமைத் தோற்றம் அதிகரிக்கும். காலை வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் தினம் உட்கொண்டு வர உடலில் சத்து கூடும். உடல் பருக்காமலேயே பலகீனம் மறையும். தாது விருத்தி ஏற்படும்.
திப்பிலி
ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையை பலமுள்ளதாக்கும். நீடித்த விறைப்புத் தன்மை பெற சரகர் கூறும் மருந்தில் திப்பிலி முக்கித்துவம் பெறுகிறது. திப்பிலியின் உலர்ந்த பழங்கள் 30 எண்ணம் எடுத்து பொடியாக செய்து கொள்ளவும். இப்பொடியை 45 மி.லி. பசு நெய் மற்றும் 45 மி.லி. எண்ணெய் கலவையில் வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அதில் 45 கிராம் சர்க்கரை, 45 கிராம் தேன் சேர்த்துக்கொண்டு, பசுவின் பால் கலந்து அருந்தி வர வேண்டும். பிறகு பசிக்கும் பொழுது நெய் கலந்து அருந்தி வர வேண்டும். பிறகு பசிக்கும் பொழுது நெய் கலந்த சோற்றை உட்கொள்ளலாம்.