பசியே இல்லை என்று ஒரு சிலர் கூறுவர். சாப்பிட்ட உணவு செரிக்கவில்லை, வயிறு கடமுடா கடமுடா என்கிறது, வயிறு வலிக்கிறது என்று கூறுவர் ஒரு சிலர். இதற்கு இலந்தைப் பழம் மிகவும் சிறந்த மருந்தாகும். இலந்தை வடை செய்து சாப்பிட்டு வருவதால், செரிமானம் அதிகரிக்கும். வயிற்று வலி, வயிற்றுப் புண் நீங்கி விடும். இலந்தை பசியை உண்டாக்கும்.
இலந்தை மரத்தின் வேர், அசதி, களைப்பை நீக்கி, பசியை உண்டாக்கும். இலந்தை இலை உடல் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, மூலம், பித்த மேகம், இரத்தம் அதிகளவு வெளியேறுதல் போன்றவற்றை குணப்படுத்தும். பழம் பித்த, மலக்கட்டு, வாந்தி, வலி, வாதம் முதலியவற்றைப் போக்கும்.