விட்டமின் B காம்ப்ளெக்ஸ் என்பது ஏறக்குறைய ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட சில விட்டமின்களின் சேர்க்கையாகும். இதில் பைரிடாக்ஸின்( Pyridoxine) என்னும் ஙி6விட்டமின் முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களுக்கும், பாலுட்டும் தாய்மார்களுக்கும் இது மிகவும் அவசியம். இந்த B 6 விட்டமின் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கச் சில எளிய வழிகள்
· தாய்ப்பாலில் இந்த வைட்டமின் உள்ளது என்பதால், குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் தந்துவிட வேண்டும். குறைந்தது ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் தர வேண்டும். இதன் முலம் பச்சிளங் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஙி6 பற்றாக்குறை வருவதைத் தடுக்க முடியும்.
· காசநோய்க்கு ஐசோநியசிட் மருந்து சாப்பிடுபவர்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளைச் சாப்பிட்டுவரும் பெண்கள், உறுப்பு மாற்று சிகிச்சைக்காக சைக்ளோசெரின் மாத்திரை சாப்பிடுபவர்கள், உணவு செரிமானக் குறைபாடு உள்ளவர்கள் ஆகியோர் வைட்டமின்-ஙி6 உள்ள பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை ஒன்றைத் தினமும் சாப்பிட வேண்டியது அவசியம்.
· கர்ப்பிணிகள் சரிவிகித உணவைச் சாப்பிட்டு தங்கள் கர்ப்ப காலத்தில் வைட்டமின்-ஙி6 பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளுக்கும் வைட்டமின்- B 6 பற்றாக்குறை ஏற்படாது.
· நம் தினசரி உணவில் ஏதேனும் ஒரு வகைப் பருப்பு அல்லது பயிறு வகைகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலமும், தினமும் 200 மி.லி. பால் சாப்பிட்டு வருவதன் மூலமும் நமக்குத் தேவையான வைட்டமின்- B 6 கிடைக்கச் செய்யலாம்.
· வைட்டமின்- B 6 அதிக வெப்பத்தில் அழிந்துவிடும். எனவே உணவைச் சமைக்கும்போது அதிக வெப்பம் ஆகாது. ஏற்கனவே சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுப்படுத்திச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
· வைட்டமின்- B 6 உள்ள உணவுகளை அதிக அளவுதண்ணீரில் கொதிக்க வைப்பதாலும், அதிக நேரம்கொதிக்க வைப்பதாலும் இந்தவைட்டமின் கரைந்துவிடும் என்பதால், இந்த மாதிரியான சமையல்முறைகளைத் தவிர்க்க வேண்டும்.
· உணவுகளை அதிக நேரம் பாதுகாத்து வைப்பதற்காக சில பதனப்பொருள்களைச் சேர்ப்பார்கள். இவை அந்த உணவுகளில் உள்ள வைட்டமின்- B 6 ஐ அழித்துவிடும். வினிகர், சமையல் சோடா போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை. ஆகவே இவற்றைச் சமையலுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
· மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு வைட்டமின்- B 6 பொதுவாகவே குறைந்த அளவில்தான் சிறுகுடலில் உறிஞ்சப்படும். இந்தக் காரணத்தால், இவர்கள் இந்த வைட்டமின் உள்ள உணவுகளை அடிக்கடி அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.