தாகம் தணிக்கும் தர்பூசணி

Spread the love

தர்பூசணி என்பது வெள்ளரி வகையைச் சேர்ந்த ஒரு வகை காய்களாகும். இதனை தாவரவியலில்  (CITRULUS LANATUS )என அழைக்கின்றனர். இதனை ஆங்கிலத்தில் Water Melon என அழைக்கின்றோம். சமீப காலம் வரை பாடப் புத்தகங்களில் மட்டுமே காணப்பட்டு வந்த தர்பூசணி சமீப காலமாக சாலையோரங்களில் குவித்து கிடக்கின்றன. கடைகளிலும் அதிகமாக கோடைகாலங்களில் கிடைக்கின்றது. இதன் உட்புறம் சிவப்பு நிறமாகவும் வெளிப்புறம் கறும் பச்சை மற்றும் இளம் பச்சை நிறக் கோடுகளுடனும் அழகாக காட்சி தரும். இது சில இடங்களில் உட்புறத்தில் மஞ்சள் நிறத்திலும் ஆரஞ்சு நிறத்திலும் காணப்படுகின்றது. சில ஆப்ரிக்க நாடுகளில் சதுர வடிவத்திலும் கூட காணப்படுகின்றது.

இதன் ஹிந்தி பெயர் தர்பூஸ் இதனையே தமிழாக்கம் செய்து தர்பூசணி என ஆகியுள்ளது. இது மிகவும் குளிர்ச்சி தரக் கூடியது. இது இந்தியாவில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் அதிகமாகப் பயிரிடப்பட்டு வருகிறது. இதனை ஏதோ வெளிநாட்டுப் பழம் உடலுக்கு சூடு தரக் கூடியது என்றெல்லாம் நினைத்து வந்த மக்கள் கூட தற்போது தர்பூசணியை உண்ண ஆரம்பித்துள்ளனர். இது பிற பூசணி, வெள்ளரி குடும்பத்தைச் சேர்ந்த பழங்களைப் போல சர்க்கரை அளவு, வைட்டமின் சத்து, நார்ச்சத்து போன்றவை அடங்கியது.

சுமார் 1300 – 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆப்ரிக்காவை சுற்றிப் பார்த்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்த டேவிட் லிவிங்ஸ்டன் என்னும் ஆராய்ச்சியாளர் தர்பூசணியை அதிகமாக ஆப்ரிக்காவில் காலாஹாரி ( KALAHARI ) மாவட்டத்தில் கண்டதாக குறிப்பிட்டுள்ளார். எனவே இப் பழத்தின் பிறப்பிடம் ஆப்ரிக்காவாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. இது பயிரிடப்பட்டதா அல்லது தானாகவே ஆப்ரிக்காவில் வளர்ந்து வந்துள்ளதா? என்ற குறிப்புகள் காணப்படவில்லை. ஆப்ரிக்கர்கள் இதனை தாகம் தணிப்பதற்காகவும் தண்ணீர் தட்டுப்பாடாக உள்ள காலங்களில் தண்ணீருக்கு நிகரானதாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

10 ஆம் நூற்றாண்டில் தர்பூசணி சீனாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு பயிரிடப்பட்டு வந்துள்ளது. சீனாவே தற்பொழுது உலக அளவில் அதிக தர்பூசணி பயிரிடும் தனி நாடாகத் திகழ்கின்றது. 13 ஆம் நூற்றாண்டில் தர்பூசணி ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு பயிரிடப்பட்டு வந்துள்ளது. 1615 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொகுக்கப்பட்ட ஆங்கில அகராதியில் தர்பூசணி முதன் முதலாக இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தர்பூசணி பழமை வாய்ந்த ஓர் கனியாக இருப்பினும் 1940 வரை பெரும்பாலும் பயிரிடப்படவில்லை சில தர்பூசணி விரும்பிகள் மட்டுமே பயிரிட்டு விற்பனை செய்து வந்தனர். அதன் பிறகு தான் தர்பூசணி ஏற்றுமதி செய்யும் நாடாக திகழ்கிறது.

முதலில் தர்பூசணி சிறிய அளவே இருந்துள்ளது விதைகளும் இல்லாமல் இருந்துள்ளது பயிரிடப்பட ஆரம்பித்தவுடன் ஏதோ GENE மாற்றங்கள் ஏற்பட்டு பெரிய அளவு பழங்களாக மாறியுள்ளன.

தர்பூசணியை பல வகைகளில் உண்ணலாம். ஒரு கப் தர்பூசணி சுமார் 48 கலோரி எரிசக்தியை தரக் கூடியது. தர்பூசணியில் அதிக அளவு வைட்டமின் சி யும் ( 14 . 59 Mg) கி யும் ( 5561 . 0) காணப்படுகின்றது. (ஒரு கப் அளவில்) போதுமான அளவு வைட்டமின் B 6 ம் B ம் பொட்டாஷியம் மற்றும் மக்னிஷியம் காணப்படுகின்றது.

100 கிராம் தர்பூசணி கீழ்க்கண்ட சத்துக்களைத் தருகின்றது.

நீர்ச்சத்து           92%

மாவுச்சத்து     7 . 56 gm

சர்க்கரை        6 . 2 gm

நார்ச்சத்து      0 . 4 gm

கொழுப்பு       0 . 15 gm

புரதம்             0 . 61 gm

வைட்டமின்   B 1 – 3%

                                    B 2  –  1%

                                    B 3  –  1%

                                    B 5  –  4%

                                    B 6  –  3%

                                    B 9  –  1%       

                                    C    – 14%

கால்ஷியம்        – 1%

இரும்புச்சத்து               – 2%

மக்னிஷியம்     – 3%

பாஸ்பரஸ்        – 2%

பொட்டாஷியம்           – 2%

X  ஜிங்க் ( துத்தநாகம்) – 1%

சீனர்கள் பழத்தின் உட்பகுதியை மட்டுமல்லாது வெளித் தோலையும் தங்கள் சமையலில் பயன்படுத்தி வருகின்றன. 92% நீர்ச்சத்து அடங்கியிருப்பதால் தாகத்தை தணிக்கக் கூடியது உடல் சூட்டை தணிக்கக் கூடியது. அமெரிக்க உணவகங்களில் தர்பூசணி நெருப்பில் சுட்டு WATER MELON STEEK என்றும் விற்பனை செய்யப்படுகின்றது. தர்பூசணியில் விதைகள் அதிக கொழுப்புச் சத்தும் புரதச் சத்தும் அடங்கியவை. அதனை வருத்து அமெரிக்க நாடுகளில் பிற உணவுகளில் சேர்த்தும் உண்ணப்படுகின்றது. இந்த விதைகள் சூரியகாந்தி விதைகளை போன்றவை மேற்கு ஆப்ரிக்காவில் இவ் விதைகளிலிருந்து எண்ணெய்யும் எடுக்கப்படுகின்றது.

தர்பூசணியில் 92 சதவிகிதம் தண்ணீர்ச் சத்து இருந்தாலும் உலகில் சில இடங்களில் தர்பூசணியிலிருந்து மது தயாரிக்கப்படுகின்றது. இவ்வகை மது ஆப்ரிக்காவில் தர்பூசணி பழத்துடன் சேர்த்து கலவையாக உண்ணப்படுகின்றது.

தர்பூசணி வெள்ளரி இனத்தைச் சேர்ந்ததாக இருப்பதால் உடலுக்கு வெள்ளரி எத்தகைய நலனைத் தருமோ அதனை ஒத்த நலனைத் தரக் கூடியது. ஆனால் வெள்ளரியை விட அதிக எரிசக்தியும் அதிக சத்துக்களும் நிறைந்தவை.

தர்பூசணி கோடைகாலத்திற்கு ஏற்ற உணவாகும். தினசரி உணவில் தர்பூசணியைச் சேர்த்து வர நற்பலன்களை அள்ளித் தரும்.


Spread the love