வெப்ப மண்டல நாடுகளில் நன்றாக வளரக்கூடியது. இது வறட்சியைத் தாங்கக்கூடியது. இது செடியாகவும், சிறு மரமாகவும் வளரக்கூடியது. இதன் இலைகள் கூட்டிலை வகையாகும். இதன் இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை என்று இத்தாவரம் முழுவதுமே நமக்குப் பயன்படுகிறது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் ஆற்றக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிகளுக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
இதில் வெண்நொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி எனப் பல வகைகள் இருந்தாலும் வெண்நொச்சி தான் பெரும்பாலான இடங்களில் வளர்கிறது. இதில் கருநொச்சியே அதிக மருத்துவ குணமுடையது.
வேறு பெயர்கள்: இந்திர சூரியம், நித்தில், நிர்க்குண்டி, சிந்துவாரம்.
இலைகள்
நமது உடல் உறுப்புகளின் செயல்களை ஊக்கப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது. தானியங்களை பூச்சிகள் தாக்காத வண்ணம் காக்கிறது. நொச்சி இலைகளின் கீழ்ப்புறம் சாம்பல் நிறத்தில் உரோமப் பூச்சுகள் இருக்கும். நொச்சி இலைகளை தலையணையாக உபயோகிக்க, காய்ச்சல், தலைவலி, பீனிசம் ஆகியவை குணமாகும். நொச்சி இலையை அரைத்து மண்ணீரல் வீக்கங்களுக்குப் பற்றுப் போடலாம். நொச்சி இலையின் புகைக்கு கொசுக்கள் என்பது கூடுதல் செய்தி.
வேர்
சிறுநீர் போக்கைத் தூண்டுகிறது, சளியை அகற்றும். கட்டிகள் மற்றும் குடல்வலி, பசியின்மை, பெருவியாதி ஆகியவற்றிகு மருந்தாகிறது. குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல்திறன் கொண்டது.
மலர்கள்
குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தருபவை, தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
கனிகள்
நரம்புகளுக்கு வலுவேற்றியாகவும். காய்ந்த விதைகள் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. நீர்க் கோர்வையை போக்கக் கூடியவை மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
நொச்சி – மருத்துவ பயன்கள்
நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை, உடல் அசதியைத் தணிக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; காய்ச்சலைப் போக்கும்; ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும்; மாதவிலக்கை தூண்டும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்.
நொச்சி பூ குளிர்ச்சி உண்டாக்கும்; துவர்ப்புச் சுவையைத் தூண்டும். நொச்சி வேர், காய்ச்சலை கட்டுப்படுத்தும். கோழையை அகற்றும்; சிறுநீரைப் பெருக்கும்.
இதன் மலர்கள் கொத்து கொத்தாக நுனியில் அல்லது இலைக் கோணத்தில் அமைந்தவை. கருஞ்சிவப்பு அல்லது செங்கருநீல நிறம் கொண்டவை.
நொச்சி இலைகளை தலையணையாகச் செய்து உபயோகிக்க, காய்ச்சல், தலைவலி, பீனிசம் ஆகியவை குணமாகும்.
நொச்சி இலையை அரைத்து மண்ணீரல் வீக்கங்களுக்குப் பற்றுப் போடலாம்.
நொச்சி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும். நொச்சி இலையை அரிசிக் கஞ்சியில் சேர்த்து புண்களைக் குணமாக்க உபயோகிக்கலாம். பொதுவாக, நொச்சி இலைச் சாற்றைக் கொண்டு புண்களை கழுவி மருந்திடலாம். ஒரு கைப்பிடி நொச்சி இலைகளை வென்னீரில் போட்டு ஆவி பிடிக்க மண்டை நீரேற்றம் நீங்கும்.
நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, குப்பைமேனி, ஆடாதொடை இலை, நாயுருவி ஆகியவற்றை ஒரு பிடி, வாயகன்ற மண் கலத்தில் இட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பக்குவமான சூட்டில் ஆவி பிடிக்க வாதநோய்கள், தலைவலி போன்றவை குணமாகும். கொதித்த நீரைத் துணியில் நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
பிரசவித்த பெண்கள், நொச்சி இலைகளை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி அந்த நீரில் குளிக்க பிரசவித்ததால் ஏற்ப்பட்ட அசதி குறையும்.
இந்த நொச்சி இலையானது கபம், ஜலதோஷம் முதலிய பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வாகும் நொச்சி இலையை ஒரு துணிப்பையில கட்டி தலையணையாகச் செய்து பயன்படுத்தி வந்தால் ஜலதோஷம் தீரும். இதன் இலைச்சாறைத் தலை, கழுத்து, கன்னம் முதலிய இடங்களில் வெளிப்பூச்சாகத் தடவி வந்தால் சைனஸ் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தாவரவியல் பெயர்: ‘வைடக்ஸ்நிகுண்டோ’ Vitex Negundo
தாவரவியல் குடும்பம்: ‘லேமியேஸியே’
Lamiaceae
கருநொச்சி- நீலநொச்சி
நொச்சித் தாவரத்தைப் போன்றே இருந்தாலும் இலைகள் மற்றும் தண்டுகள் நீல நிறமானவை. மேலும் நொச்சியின் மருத்துவப் பயன்கள் அனைத்தும் இதற்கும் பொருந்தும்.
கீல் வாதம், முக வாதம் போன்ற கடுமையான வாத நோய்கள் மண்டைக் குடைச்சல் முதலியவற்றிற்குச் செய்யப்படும் மருந்துகளில் கரு நொச்சி சேர்க்கப்படுகின்றது.
கால் வீக்கங்களைக் குறைக்க கரு நொச்சியின் இலைகளை அரைத்து பற்றுப் போடும் பழக்கம் உள்ளது.
நொச்சி இலையுடன் சிறிது வெல்லம் சேத்து கஷாயம் செய்து பருகினால் உடலில் சூடு நீங்கி உடல் பலம் பெறும். அரைத் தேக்கரண்டி நொச்சி இலைச் சாற்றுடன் அரைத் தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் காய்ச்சல் தீரும். சிறிது நொச்சியிலை, மிளகு, பூண்டு, இலவங்கம் இவற்றைச் சேர்த்து மென்று வர இரைப்பு நோய்களின் தீவிரம் குறையும்.”
மேலும், மூச்சுக்குழல் ஒவ்வாமை, ஆஸ்துமா, வயிற்றுவலி, கண்நோய், கணைய வீக்கம், மற்ற வீக்கங்கள், வெண்குஷ்டம், ஆகியவற்றை நீக்கக் கூடியது. தலையில் முடி வளர்வதை ஊக்குவிக்கவும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாகவும் கருதப்படுகிறது. எனவே, நொச்சி இலை மனிதர்களின் பல்வேறு நோய்களுக்கும் அருமருந்தான எளிய மூலிகையாகும். இந்த மூலிகைச் செடி வீட்டுத் தோட்டங்களிலும், மாடித் தோட்டங்களிலும் கட்டாயம் வளர்க்க வேண்டிய ஒன்று என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
நொச்சி துவையல்:
வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகுடன் நொச்சி இலையையும் சேர்த்து லேசாக வதக்கவும். இதனுடன் வெற்றிலை மிளகு மற்றும் மிளகாய் செடியின் இலையை அரைத்தால், நொச்சி இலை துவையல் ரெடி. இந்த துவையலை தினமும் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமடையும். மேலும் சுவாசக் கோளாறுகள் நீங்கிவிடும்.
ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவங்களில் இது அதிகம் பயன்படுகிறது. ‘வைடக்ஸ் ஆக்னஸ் கேஸ்டஸ்’ என்கிற நொச்சி வகையானது, பெண்களுக்கான மாதவிடாய், கர்ப்ப காலத்திய கோளாறுகள், ஹார்மோன் குறைபாடுகள், ‘பிசிஓடி’ எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிகள் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. நொச்சி இலைகளின் புகை ‘ஏடிஸ்’ எனப்படும் வரிக்கொசுவை விரட்டும். ‘ஏடிஸ்’ என்ற வகையை சேர்ந்த கொசுக்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் தான் காணப்படும் இந்த கொசுவின் உடலில் வரி வரியாக கோடுகள் தெரியும். இந்த கொசுவே சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்ற நோய்களை பரப்புகிறது. இந்த கொசுவின் வளர்ச்சியை நொச்சி இலை கட்டுப்படுத்துகிறது.
இதன் இலையை இடித்துச் சாறு பிழிந்து கட்டிகளின் மீது பூசி வந்தால் கட்டி கரைந்து வீக்கம் குறையும்.
நொச்சி மலர்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து இரண்டு சிட்டிகை எடுத்து
பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தபேதி, ரத்தவாந்தி குணமாகும்.
நொச்சி இலையை சிறிது ஆமணக்கு எண்ணை சேர்த்து வதக்கி ஒற்றடம் கொடுத்து வர மூட்டுவலி மற்றும் மூட்டு வீக்கம் குறையும்.
வயிற்றில் உள்ள கிருமிகளை வெளியேற்றி. நெஞ்சகச் சளியை கரைத்து இருமலை போக்கி, வியர்வையை உண்டாக்கிக் காய்ச்சலை தணிக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும். இந்த நொச்சி இலைகளை பயன்படுத்தி உடல் சூட்டை குறைக்கும் தேனீர் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிறிது நொச்சி இலைகள், வெல்லம்.
செய்முறை:
ஒரு கைப்பிடி அளவு நொச்சி இலைகள் எடுத்து. அதனுடன் வெல்லம் சேர்த்து ஒரு கோப்பை தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி குடித்து வர உடல் சூடு தணியும். சிறுநீர் தாரையில் ஏற்படும் அடைப்பை நீக்கும். சிறுநீரை பெருக்கி உடல் சூட்டைக் குறைத்து. உடலுக்கு பொலிவைத் தரும்
மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்திற்கான மேல் பூச்சு மருந்து தயாரிக்க:
தேவையான பொருட்கள்:
நொச்சி இலைகள், விளக்கெண்ணெய்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுத்து. அதனுடன் நொச்சி இலைகளை சேர்த்து நன்றாக வதக்கி, இதை மேல் பற்றாக, ஒத்தடம் கொடுத்தால் மூட்டுவலி மற்றும் வீக்கம் சரியாகும்.
கழுத்து மற்றும் முதுகு பகுதிகளில் ஏற்படும் தேமலுக்கான மருந்தாகிறது :
இளம் வயதினருக்கு அதிகம் வரும் தேமலைப் போக்க புங்கன் இலை மற்றும் தேங்காய் எண்ணை மருந்தாக பயன்படுகிறது. புங்கன் தழைகளை அரைத்து தேங்காயெண்ணை விட்டு காய்ச்சி வடித்து தேமல் மீது பூசி வர சில நாட்களில் தேமல் மறைந்து தோல் அழகு பெறும்.
இதில் உள்ள செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
இதில் ஆண்ட்ரோக்ராஃபோலைடு -பியுரனாய்டு டை டெர்ப்பீன் கஃபியிக், க்ளோரோ ஜினிக், செரிவற்ற லாக்டோன், சைட்டோ ஸ்டீரால், ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன.
கரு நொச்சி தைலம் ஜுரத்தைத் தடுக்கும். வயிற்றிலுள்ள பூச்சிகளை அகற்றும். வாய் குழறுதலை நீக்கும். சீதபேதி மற்றும் மார்புச்சளியை நீக்கும். நீரிழிவு நோய், அஜீரணம், மேகவெட்டை, ஜலதோஷம், விட்டு விட்டு ஏற்படும் காய்ச்சல், சொறி, மஞ்சள் காமாலை, ஈரல் கோளாறுகளால் உண்டாகும் வீக்கம், ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகும். ஆயுர்வேத மருந்தான ஸ்வித்ராதி லேபா என்ற மருந்தில் இது முக்கிய கலவையாக உள்ளது.
கி. ராஜகோபாலன்