மனிதனுக்கு ஏற்றது சைவ உணவு தான்!

Spread the love

ஆண்டவனால் படைக்கப்பட்ட மனிதர்களும் கருவறை முதல் கல்லறை வரைவாழ்ந்திட தேவை உணவு ஒன்றே ஒன்று. இக்கால அவசர உணவு வகைகளால் நவீன உலகில் பலரும் சிறுவயதிலேயே பெயர் சொல்லும் வியாதிகளால் அவதிப்படுகின்றனர். உதாரணமாக சிறு வயதிலேயே இரத்தஅழுத்தம் உடல் பருமன் அஜீரணம்  போன்ற பலவகை நோய்களுக்காகசிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர். படித்தவர், படிக்காதவர், ஏழை பணக்காரர் போன்று பாகுபாடின்றி இந்த வியாதிகளும் பிரச்சினையைதருகின்றன. ஏன்? எண்ணிப் பார்த்தால் அடிப்படை காரணம் உண்ணும்உணவு வகை தான். மேலும், அந்த உணவு வகைகளில்சேர்க்கப்படும் சேர்மானங்களே.

மனித குலத்தையும் ஆராய்ந்தால் ஆதி மனிதன் முதலில் தாவர உண்ணிதான். காட்டில் கிடைத்த காய்கள் பழங்கள் தழைகளை உண்டு வந்தான். இயற்கை சீற்றங்களாலும் காட்டு தீயாலும் தாவரங்களும் அழிந்தபொழுது லாவகமாக தப்பித்த மனிதன் உணவுக்காக வேட்டையாடி பறவைகள் மிருகங்கள் மாமிசத்தை உண்ண ஆரம்பித்தான். மனிதன் சாப்பிடும் வாயும் அதனுடைய பற்களின் அமைப்பையும் நோக்கினால் ஆடு, மாடு, மான், முயல் போன்ற தாவர உண்ணிகளின் அமைப்பையே ஒத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மாமிசம் உண்ணும் சிங்கம், சிறுத்தை, புலி, கரடி போன்றவைகளின் வாயும், கோரை பற்களுடன் மாமிசத்தை குத்திக் கிழிக்கும் வகையிலும் நகங்களுடன் இருக்கும்.

வாய்குழியில் தொடங்கி மலைப்புழையில் முடியும் இருபத்திநான்கடி (24 அடி) ஜீரண மண்டலமும், அவற்றுடன் தொடர்புடைய சிறு,  பெருங்குடல் மற்றும் சுரப்பிகளும் தாவர உண்ணிகளின் அமைப்பையே ஒத்திருக்கும். இந்த அமைப்பில் மாமிச உணவு உண்டால் நாளும் வருவது பல சிக்கல்களே.

ஆனால் பலரும் உடம்புக்கு புஷ்டி தருவது மாமிச உணவு வகைகளே என்ற தவறான எண்ணத்தில் மிதந்து வருகின்றனர். மேலும், பல மசாலா வகைகளை சுவைக்காக ஊறுடன் சேர்த்து சமைக்கும் வேளையில் தாவர உணவைவிட இதுவும் அதிக சுவையாக இருப்பதால் பலரும் ஏமாற்றியும் வருகின்றனர். இது ஒரு பெரிய அறியாமையே. மனித உடல் வளர்ச்சிக்கு ஏற்ற புரதம் கார்ப்போஹைட்ரேட், தாது உப்புக்கள் அனைத்துமே தாவர உணவில்தான் நிறைவுடன் கிடைக்கின்றது. மாமிச உணவிலுள்ள கொழுப்புக்கள் ‘கொலஸ்ட்ராலாக’ ரத்தத்தில் தேங்கி பல நோய்களுக்கு அடிப்படை காரணமாகிறது. பத்து நிமிடங்களில் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி. யை ஓர் ஆட்டை கொன்னு கல்லீரலை எடுத்து சமைத்து சாப்பிட வேண்டும். எது எளிமையானது, நலமானது, சிந்தியுங்கள்.

சைவ உணவைவிட அசைவ உணவை ஜீரணிக்க நமது குடல்களுக்கு கூடுதலானசக்தியும் நேரமும் தேவைப்படும். அதனால் இளம் வயதிலேயே பல வியாதி உபாதைகளும் வற்றிடவழிவகுக்கும். தேவையா? பொருளாதார ரீதியாகவும்ஒரு நாள் அசைவ உணவு வாங்கி (மீன், இறைச்சி) மேலும் அதனைருசியாக சமைப்பதற்கு எண்ணெய் மசாலா பொருட்களுக்கு ஆகும் செலவில் மூன்று நாட்களுக்குதேவையான காய்கறிகளை வாங்கி சமைக்க முடியும். மேலும் தாவர உணவுகளை பச்சையாக சமைத்தும்சாப்பிடலாம். மாமிச உணவு மூலம் அஸ்காரின் என்ற வயிற்று புழு பரவுகிறதுஎன செய்தியும் உள்ளது. அசைவ உணவுக்காக கொல்லப்படும். ஆடு,கோழி போன்ற உயிரினங்களில் சுரக்கும் ரசாயனம் அதன் ரத்தத்தில் ஓடி ஒவ்வொரு செல்லிலும்பாய்கிறது. அதை நாம் சமைத்து உண்ணும்போது நம் உடலில் பல வியாதிகளை பெருக்க வாய்ப்புஇருக்கிறது.

தாவர உணவு உண்டுதான், ஆடு, மாடு, யானை போன்றவை உடல்பலத்தோடு மனிதனுக்கும் பல வழிகளில் உதவுகின்றன. மேலும், மாமிச உணவோ ‘ரஜத்’ (அசுர) குணத்தை தந்திடும்.சாந்த குணத்தை அளிக்கும் சைவ உணவுக்கு மாறிட ஏன் தயக்கம்?’நலம் பெருக்கும்’ சைவ உணவு மானிடருக்கு’ஆதாரம்’, கேடு விளைவிக்கும் அசைவம் என்றுமே தந்திடும் ‘சேதாரம்’.


Spread the love