வர்மம் கலையா? மருத்துவமா?

Spread the love

“வர்மம்” என்பது எளிமையாக மனித உடலில் உள்ள மர்மப் புள்ளிகள் எனக் கூறலாம். வர்மம் என்பது பொதுவாக உடலில் பிராண சக்தி உறைந்துள்ள / மறைந்துள்ள இடங்களைக் குறிக்கும். இதையே ‘வர்மப் புள்ளிகள்’ என்கின்றனர். “மனித உடல் சீராக இயங்குவதற்காக நம் உடலில் 108 இடங்களில் நின்று இயங்கும் பிராணக் கலை அல்லது உயிர் நிலைகளே வர்மம்” எனப்படுகின்றது.

உடலுயிர் நாடி தன்னில் உந்திடும் வாசியதாம்

 ஊனுடல் மருவியே ஊடாடும் நிலையே வர்மம்

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவினை ஆதாரமாகக் கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். இது கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டைபோடுதல் ஆகியவையும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றியதாகும். வர்ம சூத்திரம் என்ற தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து ஏற்ப்படுத்தப்பட்டு பிறகு  தற்காத்துக்கொள்ளும் கலையாக  கற்ப்பிக்கப்பட்டது. .

வர்மம் என்றால் என்ன?

உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவு வேகத்தில் தட்டப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட சில  இடங்களே ”வர்மம்” எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக நம் உடலின் 108 இடங்களில் நின்று இயக்கப்படும் உயிர் நிலைகளையே வர்மங்கள் எனப்படுகிறது.

வர்மம்

வர்மம் அல்லது அழுத்துமிடம் (மர்மம் எனவும் அறியப்படும்) என்பது மனித உடலிலுள்ள நரம்புகள் அல்லது நரம்புகளை இணைக்கும் புள்ளிகளின் அசைவு பற்றி அறிதலாகும். இந்த அறிவைப் பெற்றிருப்பதன் மூலம் ஒருவர் சிகிச்சை அளிப்பதற்க்காகவோ அல்லது தன்னைக் காத்துக்கொள்ளூம் கதற்காப்புக் கலையாகவோ பயன்படுத்தலாம்.

நம் உடலில் 108 இடங்களில் வர்மங்கள் உள்ளதாக அறியப்பட்டுள்ளன. அவையாவன.

மனித உடல் பகுதிகள் காணப்படும் வர்மங்கள்

தலை முதல் கழுத்து வரையில் 25 இடங்களும்

கழுத்து முதல் தொப்புள் வரை 45 இடங்களும்

தொப்புள் முதல் கை வரை 09 இடங்களும்

இரு கைகளில்   14 இடங்களும்

இரு கால்களில் 15 இடங்களும்

உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.

சித்த வைத்தியத்தில் வர்மமானது  இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

வர்மங்கள் –     செயற்பாடுகள்

64 இடங்கள்     –     வாத வர்மமாகவும்

24 இடங்கள்     –     பித்த வர்மமாகவும்

06 இடங்கள்     –     கப வர்மமாகவும்

06 இடங்கள்     –     உள் வர்மமாகவும்

08 இடங்கள்     –     தட்டு வர்மமாகவும்

எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

வர்மக்கலைகளை கற்றுத் தேர்ந்த குடும்பத்தினர் வர்ம முறைகளை கையாளத்தெரிந்த சூட்சுமத்தினை உபயோகப்படுத்தி முறையாக மனித இனத்திற்கு சிகிச்சை அளித்தனர். இவர்கள் வர்ம ஆசான் என்று அழைக்கப்பட்டார்கள். மேலும் இவர்கள் முறையாகவும், பாரம்பரியமாகவும்  சித்த மற்றும் ஆயுர் வேத வைத்திய முறைகளையும் கற்று வைத்தியம் செய்தனர்.

தற்காலத்தில் புது முறைகளையும் புதிய யுக்திகளையும் கையாண்டு அக்குபிரஷர், அக்குபஞ்சர், சரப்பயிற்சி, வர்ம முறை, மற்றும் யோகாசன முறைகளை கையாண்டு முதுகுத்தண்டு, கழுத்து, தோள், முட்டிவலிகள், வாய்கோணல், காது கேளாமை, கண்பார்வை கோளாறுகள், பேசும் திறன் மற்றும் நாளடைவில் குணம் ஆகாத ஆஸ்த்மா, காசநோய். இதயநோய், குன்மம், மேகநீரழிவு, விரை நோய், அறுவை சிகிச்சை எதுவுமில்லாத நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை புற மருத்துவத்திலும் ஆற்றுப்படுத்த ஏதுவாகிறது.

வர்மம் என்றால் என்ன ? வர்மம் என்பது உயிர் ஆற்றல், உயிர் நிலைகளின் ஓட்டம், உயிர்சக்தி தடம்புரியும் புள்ளிகள். உயிர் நிலை புள்ளிகள் அடங்கிய சக்தி ஓட்டங்களில் அடியோ, தாக்குதலோ நிகழும்போது ஏற்படும் தடையின் காரணமாக உடலில் உலவும் உயிர்வேகம் அதனுடைய வழக்கமான வேலையை செய்யவிடாமல் தடுத்து மரணத்தையோ, உடல் ஊனத்தையோ, அல்லது அந்தப் பகுதிகளில் தொடர்ந்த வலிகளையோ ஏற்படுத்தும். அவை தசைகளிலோ, தசை நார்களிலோ, நரம்புகளிலோ இரத்தக் குழாய்களிலோ, எலும்புகளிலோ, மூட்டுகளிலோ அமைந்திருக்கும் இந்த புள்ளிகளில் மூன்று தோஷங்களும், தச வாயுக்களும், தச நாடிகளும், நிலம்,  நீர்,  நெருப்பு,  காற்று,  ஆகாயம் எனப்படும் பஞ்ச பூதங்களும்,  ஓஜஸ் எனப்படும் ஏழு தாதுக்களின் சாரங்களும், சத்வ, ரஜ, தமோ குணங்களும் சில விகிதாசாரத்தில்  அமைந்துள்ளன,   இவை உடலின் உள்ளுறுப்புகளையும், நமது பிரபஞ்சத்தையும் 13 ஸ்ரோதஸ் எனும் தடங்களும், பாஹ்யாந்தர் எனப்படும் உள் மற்றும் வெளி வழிகளையும் 6 சக்கரங்களையும் இணைக்கும், நமது  கண்களுக்குப் புலனாகாத மாய கோடுகள்.

வர்ம மருத்துவம் என்றால் என்ன?  எல்லாவித நோய்களுக்கும் காரணம் நமது உடலில் உள்ள பத்து நாடிகளில் பாதிப்புகள்,  ஓட்டத்தில் ஏற்படுகின்ற தடை, வர்ம புள்ளிகளின் ஆற்றல் குறைபாடுகள், பிரபஞ்சத்தோடு ஏற்படும் பிணைப்பில் உண்டாகிற தடை, தச வாயுக்களின் தடை, முக்குற்ற வேறுபாடு, உடலின் பஞ்ச பூதங்களின் மாறுபாடு -இந்த அனைத்து காரணத்தையும் நமது உடலில் உள்ள வர்ம புள்ளிகளை ஒழுங்காக்குவதன் மூலம், வர்ம புள்ளிகளின் ஆற்றல் மாறுபாட்டை சரி செய்வதன் மூலம் நாம் குணப்படுத்த முடியும் என்பதே வர்ம மருத்துவத்தின் சாராம்சம்.

சீனத்து அக்குபஞ்சர் சிகிச்சைக்கு நமது வர்ம மருத்துவமே தாய் என்கிறது வரலாறு. வர்ம மருத்துவத்தில் குணமாகும் நோய்கள் எவை?

வர்மம் மருத்துவம் என்றால் நமது அனைவருக்கு நினைவுக்கு வருவது இந்தியன் தாத்தா தான். உயிரை கொள்ள, ஆளை அடிக்க, செயல் இழக்க செய்யத்தான் இந்த வர்ம மருத்துவம் என்று நாம் தவறாக புரிந்து வைத்திருக்கிறோம். சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவாக இருக்கும் இந்த வர்ம மருத்துவம் பல நோய்க்களுக்கு மருந்து இல்லாமலும் சிகிச்சை அளிக்கிறது. முதுகு வலி, கழுத்து வலிக்கு காரணமான டிஸ்க் பிரச்சனைகள் மூட்டு எலும்பு தேய்மானம், மூட்டு வலி, டென்னிஸ் எல்போ, முடக்கு வாதம், தோள்பட்டை வலி, குதிகால் வலி மற்றுமுள்ள அனைத்து வலிகளுக்கும்  நரம்பியல் நோய்களான நடுக்கு வாதம் பார்க்கின்சொனிசம், மைக்ரேன், பக்கவாதம், முக வாதம், நரம்புத தளர்ச்சி மற்றும் வாழ்வியல் நோய்களான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம்.  தூக்கமின்மை, மன அழுத்தம், பதட்டம், வயிற்று புண். ஆஸ்த்மா, அலர்ஜி, உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைதல்,  காரணம் தெரியாமல் தலைசுற்றுதல் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள்,  நீலீவீறீபீ, கிutவீsனீ, பிஹ்ஜீமீக்ஷீணீநீtவீஸ்மீ சிலீவீறீபீ, குழந்தைளின் ஞாபக மறதி, பிடிவாதம், விந்தணுக்கள் குறைவாதல், சிலருக்கு விந்தணுக்கள் இல்லாத நிலை, கரு முட்டை இல்லாத நிலை, குழந்தை இன்மை போன்றவைகளை வர்மம் மூலமாக சரிசெய்யா இயலும்.

வர்மக்கலை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்களால் உருவாக்கப்பட்டது. இது  தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலை மற்றும் நமது தமிழ் மண்ணுக்கே உரிய கலை வர்மககலையாகும். உடலியல் மற்றும் மனவியல் கலையான இதை உலக மக்களின்   நன்மைக்காக பல்லாயிரம் இன்றைய அறிவியல் விஞ்ஞானம் அறியாத நூற்றாண்டுகளுக்கு முன்பே அன்றே சித்தர்கள் இதை உருவாக்கினார்கள்.

இதைத்  தற்காப்பு கலையாகவும், மருத்துவம் செய்வதற்கும் கற்றுக் கொடுத்தனர். ஆனால், பின்னாட்களில் நம் முன்னோர்கள், சிலர் இதை தவறாக பயன்படுத்துவார்கள் என்று கணித்து அதை  பிறருக்குக் கற்றுக் கொடுக்காமல் சென்ற காரணத்தினால் இது அதிகம் பிரபலமாகாமல் உள்ளது.   வர்மக் கலையை கற்றுக் கொள்ள அதை கற்பவர் மனிதாபிமானமிக்கவராகவும், சிறந்த பண்புடையவராகவும், பிறருக்கு உதவும் குணமுள்ளவராகவும் இருத்தல் மிகவும் அவசியம். கோபம் மற்றும் எதிர்மறை சிந்தனை உள்ளவர்களுக்கு வர்மக்கலை சரிப்பட்டு வராது. (ஏனெனில் கோபமுள்ளவர்கள் எதையும் சிறிதும் ஆராயாமல் அதை மற்றவர்கள் மீது பிரயோகிக்க வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது) தற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியில் மருத்துவத் துறைகளில் அபரிமிதமான பல முன்னேற்றங்கள் வந்தாலும் வர்மக்கலை மருத்துவம் என்பது  சித்த மருத்துவம் போல் மக்களிடையே மிகவும் பிரபலமாகிக் கொண்டுவருகிறது.

வர்மம் என்றால் என்ன?

நமது உடலைச்சுற்றி கிட்டத்தட்ட 72,000 நரம்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நம் உடலில் பிராண வாயு (சக்தி) சுற்றிச்சுழன்று கொண்டிருக்கிறது. இந்தப் பிராண வாயு என்கிற சக்தி, தசை, நரம்புகள், எலும்புகளிலும், பந்துகளிலும் மறைவாய் நின்று செயல்பட உதவுவதால் மர்மம் அல்லது வர்மம் என்று குறிபிடப்படுகிறது. இவ்வாறு நமது உடலில் உள்ள வர்மப்புள்ளிகளான அவை  எதிர்பாரத சமயத்தில் தாக்கப்படும் போது அக்குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் உயிர் புள்ளி(களை)  பாதிக்கும்.

அந்த சமயத்தில் குத்தல், குடைச்சல், எரிச்சல், உயிர் போகும் அளவுக்கு வலி முதலியவை  ஏற்படுகிறது. சில சமயங்களில் நினைவாற்றலைக்கூட இழக்க நேரிடும். ஒருவர் வர்ம அடி அல்லது  வர்ம தாக்குதலுக்கு ஆளானால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அவருக்கு வர்மச் சிகிச்சை கொடுத்து அவருக்கு நினைவாற்றலைக் கொண்டு வரமுடியும். வர்ம தாக்குதலால் பாதிக்கப்பட்ட அந்த நபரை  வர்மக்கலை தெரிந்தவர்களால் மட்டுமே அதன் தன்மை மற்றும் சிகிச்சை முறை தெரிந்து  குணப்படுத்த முடியும். மற்ற எந்தவிதமான சிகிச்சை முறைகளுக்கும் வர்ம தாக்குதல்களை குணம் அடைய வைக்க முடியாது.

எதிர்பாராத விபத்துகள், மற்றும் எதிர்பாராமல் தவறி விழும் போதும், சாதாரணமாக விளையாடும் போது கூட வர்மத் தாக்குதல்களுக்கு ஆளாகும் சூழ்நிலைக்கு ஆட்பட நேரலாம். அப்படிப்பட்ட தருணங்களில் இதற்கென்றே உள்ள ஔஷதங்களான வர்மக் கஷாயம், வர்மச் சூரணங்கள் மற்றும் அதற்கேயுரிய பச்சிலையை சாப்பிடக் கொடுத்தல், தாக்குதலுக்குள்ளான இடங்களில் வர்ம எண்ணைத் தைலங்களை மேல் பூச்சாக பூசியும் வர்மத்தினால் பாதிக்கப்பட்ட நபரை மீண்டும் அவருடைய இயல்பான நிலைக்கு திருப்பலாம். வர்மச் சிகிச்சை நமது உடலில் உள்ள 72 ஆயிரம்  நரம்புகளின் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. நமது உடலின் எங்காவது ஓரிடத்தில், ஏதாவது ஒரு நரம்பில் இரத்த ஓட்டம் சரியாகவும், சீரகவுமில்லை எனில் அதற்கான வர்ம புள்ளிகளை கண்டுபிடித்து சரியாக்கும் போது தடைப்பட்ட இடத்தின் இரத்த ஓட்டமானது சரிசெய்யப்பட்டு சீராகும்.

இந்த சிறப்புகள் வர்ம சிகிச்சையில் மட்டுமே உள்ள ஓர் அற்புதமாகும். தசைகள், நரம்புகள்,  எலும்புகள், முறிவது மற்றும் ஓடிவது எல்லாம் வர்ம கலை சார்ந்ததேயாகும். இத்தகைய வர்மக் கலையை ஒருவர் முறையாக கற்றுக் கொள்ள குறைந்தது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். வர்ம ஆசானிடம் வர்மக் கலை, நாடி நிலைகள், தச வாயு நிலை, அவற்றின் இருப்பிடங்கள், வர்ம புள்ளிகளின்  இருப்பிடம்,  வர்ம மருத்துவ சிகிச்சை முறை மற்றும் வர்ம தற்காப்புக் கலை அதாவது தாக்கும் முறை இவைகளை கற்றுக் கொள்வதற்கே பல ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

வர்ம கலையில் சரவோட்டம், அமிர்தநிலை, யோக நிலை, வான சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம், பஞ்சபட்சி சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம், மனித உடலினுள் இயக்கப்படும் ஏழு ஆதாரச்சக்கரங்கள் மற்றும் அதனை சார்ந்த உப சக்கரங்கள், உடலில் உள்ள ஆரா, இவைகளை ஒரு குறிப்பிட்ட  காலக்கட்டத்திற்குள் கற்றுக் கொள்ளலாம். (ஆரா என்றால் என்ன என்று இக்கட்டுரையை தொடர்ந்து படிக்கும் போது அறியலாம்)

வர்மங்களின் வகைகள் :

நமது உடலில் தொடு வர்மங்கள், படு வர்மங்கள், தட்டு வர்மங்கள், பட்சி வர்மங்கள் என பல உள்ளன. இவ்விடங்கள் பாதிக்காமலிருந்தால் நம் உடல் மற்றும் உடல் உள்ளூறுப்புகள் பாதிப்படையாது. இவ்வர்மமுள்ள இடங்களில் தட்டினாலோ அல்லது அடிபட்டாலோ அல்லது  அளவுக்கு அதிகமாக அந்தப்பகுதிகள் அழுத்தப்படும்போது உடலிலுள்ள வர்மப்புள்ளிகளும், அதைச் சார்ந்த உடலுறுப்புக்களும் பாதிக்கும். பட்சி வர்மம் என்ற பகுதி பாதிக்கப்பட்டால் அது ராஜ உறுப்பையும் பாதிக்கச் செய்யும்.

எங்கோ உள்ள வர்ம புள்ளிகள் பாதிக்கப்பட்டால் அதைச் சார்ந்த உறுப்புகள் மட்டுமில்லாமல் அதை சார்ந்த சக்கரங்களும் பாதிக்கும், ஆராவும் பாதிக்கும். மனித உடலில் ஆரா 7 நிற வண்ணமாகவும், இந்த நிறம் வானவில்லின் நிறத்தை போல அமைந்து இருக்கும். ஆரா மனிதனின் சூட்சும சரிரமாக உடலை சூழ்ந்து இருக்கும்.

ஆரா, மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகள், பறவைகள், போன்றவைகளிலும் உள்ளது.   சித்தபுருஷர்களும், முனிவர்களும் தங்களது யோகசக்தியால் மனிதனின் உடலில் உள்ள ஆராவையும், உடலில் சுற்றும் சக்கரங்களையும் பார்த்தார்கள். சக்கரம் என்றால் சுழல் / சுற்றுதல்  என்று பொருள். நமது உடலில் இச்சக்கரங்கள் தாம் சூட்சும சக்திகளின் மையங்களாக உள்ளது.

மனித உடலில் சக்கரங்கள் ஏழு நிலைகளில் சிறிதும், பெரிதுமாக உள்ளன. 

அவைகளைப் பற்றி பார்க்காலாம்:-

முதலாவது மூலாதாரம்

இரண்டாவது ஸ்வாதிஷ்டானம்,

மூன்றாவது  மணிபூரகம்,

நான்காவது அநாகதம்,

ஐந்தாவது  விஷித்தி,

ஆறாவது  ஆக்ஞா,

ஏழாவது சகஸ்ராரமாகும்.  இவற்றைப் பற்றி சிறிது விரிவாகப் பார்க்கலாம்.

மூலாதாரம் : இது நமது  முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் உள்ளது. இதில் தான் குண்டலினி சக்தி உள்ளது. இது  நமக்கு மட்டுமல்ல பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் உள்ளது. நமது உயிராற்றலானது முதுகின் அடிப்பகுதியிலிருந்து நமது தலையுச்சி வரை செல்ல கூடிய சுழுமுனை நாடியாகும். நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் ஏழு மையங்களை ஆதாரமாகக்கொண்டு இயங்குகின்றன. இது நமது உடலுணர்வைச் சார்ந்ததாகவும், நமது உடலின் உறுப்புகளையும்,  உடல் மற்றும் உடலுறுப்புகளுக்குத் தேவையான சக்திகளைத் தரும் சுரப்பிகளை உயிர்ப்பித்துக் கொண்டு நமது மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.

இந்த மூலாதாரச் சக்கரமானது ஒரு மனிதன் குழந்தையாக பிறப்படைந்த பதினெட்டு மாதங்களில் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும் மேலும் இது ஒரு குழந்தையின் ஏழாவது வயது வரை சிறப்பாக  வளர்ச்சி அடையும். அதன்பின் இது மற்ற சக்கரங்களை இயங்க வைக்கும். இது ஒரு  குழந்தையினுடைய பேச்சு, மொழி, பழக்க, வழக்கங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. இச் சக்கரம் சரியாக இயங்காமலிருக்கும் ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல், இடுப்புவலி, மூட்டுவலி, உடல் வலிமையின்மை, தன்னம்பிக்கை இல்லாமை மற்றும் பலவித வாத நோய்கள் ஏற்படலாம். மூலாதார சக்கரம் சரியான முறையில் இயங்கிக் கொண்டிருந்தால் இந்நோய்கள் நம்மை அணுகாது. இச்சக்கரம்

இச்சக்கரம் சரியான முறையில் இயங்கினால் தான் குண்டலிணி சக்தியினை பெற முடியும். இந்தக் குண்டலிணி சக்தியை மையமாக கொண்டு தான் மூச்சுப்பயிற்சிகள், தியானம், தவம் அல்லது  யோக நிலையை அடைய முடியும்.

ஒரு சராசரி மனிதனாகிய நாம் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட இருபத்தியோரு ஆயிரம் முறைகள்  மூச்சை வெளிவிட்டு, காற்றை உள்ளிழுத்து சுவாசிக்கிறோம். சராசரியாக நாம் ஒரு மணி நேரத்துக்கு கிட்டத்தட்ட தொள்ளாயிரம் மூச்சுகள் வீதம், ஒரு நிமிடத்திற்கு சராசரியாக பதினைந்து தடவைகள்  சுவாசிக்கிறோம். இப்படி இந்த சுவாசத்தைக் குறைத்தால் நாம் கிட்டத்தட்ட நூற்றியிருபது ஆண்டுகள் வரை உயிருடன் வாழலாம். மூலாதாரமாகிய குண்டலினி சக்தியை எழுப்புவதால் அஷ்டாங்க யோக நிலையாகிய

இமயம்,                                                                                   நியமம்,                                                                       ஆசனம்,                                                                         பிராணயாமம்,                                                                         பிரத்தியாகாரம்,                                                                                  தாரணை,                                                                                            தியானம்,                                                                                          சமாதிநிலை                                                                                             இவைகளே அஷ்டாங்க யோகம் ஆகும்.

பார்வையாலே சிகிச்சை அளிக்கும் நோக்கு வர்மம் :

நாம் பார்க்கும் இந்த வர்மக்கலையில் தொடு வர்மம் தவிர நோக்கு வர்மம் என்ற ஒரு வர்மம் உள்ளது. முன்னர் நாம் பார்த்த தொடு வர்மத்தில் பாதித்த இடங்களை வர்ம மருத்துவர் தொட்டு சரி செய்வதன் மூலம் குணப்படுத்துவார். ஆனால், நோக்கு வர்மமாகிய இதில் தன்னுடைய பார்வையாலே ஒருவரது உடலில் ஏற்பட்டுள்ள வர்ம தாக்குதல்களை கண்டுபிடித்து சரிப்படுத்தப்படும். இக்கலையில் சிறப்பியல்புகள் பெற்ற அசான்களுக்கே ஒருவரை பார்த்த மாத்திரத்திலேயே வர்மத் தாக்குதல் எங்கு இருக்கிறது? அதன் ஆழம் (நிலை) என்ன என்பதை கண்டு பிடித்து பார்வையாலேயே அதை குணப்படுத்தவும் முடியும், நல்ல நிலையில் இருப்பவரை செயலிழக்கச் செய்யவும் முடியும். கண்களின் செயல்திறனை பலப்படுத்தி நோக்கு வர்மத்தினை கற்றுக் கொள்ள முடியும்.

தனி சிறப்பு வாய்ந்த தமிழரின் தற்காப்புக் கலை

இது ஒரு சிறந்த குருவின் மூலமாகப் பரம்பரை பரம்பரையாக பேணப்பட்டு வந்ததாகும், ஆனால்  இன்று காலத்தின் கோலத்தால் தமிழருக்கே இதைப் பற்றிய விவரங்கள் எதுவுமே தெரியாத கலையாகிவிட்டது. “வர்மம். அப்படி என்றால் என்ன?” எனக் கேள்வி எழுப்பும் நிலையிலேயே தமிழர்களாகிய நாம் இருப்பது  மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது. பழங்காலத்தில்  சிறப்பாக வளர்க்கப்பட்டு வந்த இக்கலை இன்றைய காலக்கட்டத்தில் அறிதாகி, மறைந்து விட்டது .

தமிழகத்தில் தோன்றி பல அண்மை நாடுகளில் பரவி புகழடைந்த இவ் வர்மக்கலை இன்றும் அண்டை நாடுகளில் இன்றைய சூழ்னிலைக்கேற்ப சில பல மாற்றங்களுடன் புழக்கத்திலுள்ளது.

இந்த யோகக் கலையான வர்மம் பற்றி சில தமிழ்த் திரைப்படங்கள் சொன்ன பிறகு தான் இப்படி ஒரு தொன்மையாக கலை ஒன்று உள்ளதென்றும் இக்கலையைப் பரப்பிய ‘போதி தர்மன்’ என்பவர் தமிழன் என்று தமிழராகிய நமக்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான காலக்கட்டத்தில் தன்  தமிழரின் தனித்தன்மைகளையும், வரலாற்று அடையாளங்களையும் தமிழர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தின் பிடியில் இருக்கிறோம். 

கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ் ஞானத்தை அடிப்படையாக வைத்து தொட ங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக் கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது.


Spread the love