மகத்தான மஞ்சள்

Spread the love

நமது வீடுகளில் எளிதில் கிடைக்க கூடிய ஒரு பொருள் தான் மஞ்சள். இன்றைய காலத்தில் பெண்களை பொறுத்தவரை மஞ்சள் என்றால் சமையலில் சேர்க்க கூடிய ஒரு பொருள் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் பண்டைய காலத்தில் மஞ்சள் பல பணிகளை செய்து வந்துள்ளது.

வரலாறு

மஞ்சள் தமிழ் நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகித்தது. ஆரம்பத்தில் நிறமூட்ட மட்டும் தான் மஞ்சள் பயன்படுத்தப்பட்டது. பின்பு, மருந்தாக பயன்படுத்தப்பட்டது.

மஞ்சளின் வகைகள்

மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகத்தில் சிறந்த மஞ்சளாக கருதபடுகிறது.

· முட்டா மஞ்சள்

· கஸ்த்தூரி மஞ்சள்

· விரலி மஞ்சள்

· கரி மஞ்சள்

· நாக மஞ்சள்

· காஞ்சிரத்தின மஞ்சள்

· குரங்கு மஞ்சள்

· குட மஞ்சள்

· காட்டு மஞ்சள்

· பல மஞ்சள்

· மர மஞ்சள்

· ஆலப்புழை மஞ்சள்

மஞ்சளின் மருத்துவ பயன்கள்

· மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.

· மஞ்சள் பசி உணர்வை தூண்டுகிறது.

· மஞ்சள் காய்ச்சலை தணிக்கும்

· வீக்கம், வாயு ஆகியவற்றை கரைக்கும்.

· மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து அம்மை கொப்பளங்களில் பூசி வந்தால், கட்டி உடைந்து விடும். பின்பு, சிகிச்சையை தொடர அவை குணமாகும்.

· மஞ்சள் துண்டை சுட்டு  நுகர்ந்தால் தலை நீரேற்றம், மூக்கடைப்பு குணமாகும்.

· மஞ்சள் கட்டையை சிறு துண்டுகளாக வெட்டி பாலில் ஊற வைத்து அரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.

· மர மஞ்சள் கட்டையை நீர் விட்டு அரைத்து உடலில் பூசி 1/2 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளித்தால் உடல் வெப்பம் குறையும்.

அழகைத் தரும் மஞ்சள்

சிலருக்கு சிறு வயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டிருக்கும். அதனால் அவர்கள் முகத்தை வெளியில் காட்ட அவமானப்படுவார்கள். அதன் காரணமாக முகத்தை துணி வைத்து கட்டி கொண்டு செல்வார்கள். இனி அந்த கவலை வேண்டாம்.

மஞ்சளை தினமும் முகத்தில் பூசி வந்தால், முகத்தில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் நீங்கி விடும்.

சில பெண்களுக்கு முகம் முழுவதும் எண்ணையாக இருக்கும். அதற்காக அவர்கள் முகத்தில் எப்போதும் ஒப்பனை (make up) செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். இனி கவலை வேண்டாம்.

தினமும் உறங்கச் செல்வதற்கு முன்பு தேனில் சிறிது மஞ்சளை சேர்த்து முகத்தில் பூசி வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முகம் சாதாரணமாக மாறி விடும்.

சிலரின் முகம் பார்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் சிறிய பரு வந்து முகத்தின் அழகை கெடுத்து விடுகிறது. இதற்கு எளிய வழி, மஞ்சளை பருவில் பூசி வந்தால் முகப்பரு ஒரே நாளில் மறைந்துவிடும்.

இந்துக்களின் நம்பிக்கை

இந்துக்கள் மஞ்சளை புனிதப் பொருளாக நினைக்கின்றனர். அவர்கள் மஞ்சளை கடவுளுக்கு சமமாக நினைகின்றனர்.

· புது வீட்டிற்கு குடி புகும் போது, உப்பு மற்றும் மஞ்சள் போன்றவற்றை கடவுள் படத்தின் முன் வைத்த பின்னரே பால் காய்ச்சுகின்றனர்.

· புத்தாடை அணிவதற்கு முன்பு மஞ்சளை நீரில் நனைத்து ஆடையில் வைத்து கொள்கின்றனர்.

· பொங்கல் திருநாளில் பொங்கல் பானையை சுற்றி மஞ்சள் செடியை கட்டி விடுவர்.

· திருவிழா காலங்களில் உறவினர்களின் மீது மஞ்சள் நீரை தெளிப்பர்.

கீ.பி


Spread the love