மஞ்சள்

Spread the love

மறந்ததும்… மறக்காததும்…

நம் வீட்டு சமையலுக்கு சுவை கூட்டுவதிலும்,  பாட்டி வைத்தியத்திலும் சரி மஞ்சள் தனித்தன்மையான ஒன்று. இந்த மஞ்சளை பெண்கள் முகத்தில் பூசுவதுண்டு. இதுதவிர, மஞ்சளை தனியாகவும், பிற பொருட்கைளுடன் பல்வேறு வகைளில் அழகுப் பொருளாக பயன்படுத்தி வருகின்றனர். மஞ்சளை எந்தெந்த வகைகளில் அழகுப் படுத்த, என்பதை பார்க்கலாம்.

பெண்கள் மஞ்சளை உடலில் வருவது வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அப்படி பயன்படுத்தி வரும்போது, உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை மஞ்சள் அகற்றி விடுகின்றது.

நீங்கள் தினமும் குளிக்கும் போது, தவறாமல்  கஸ்தூரி மஞ்சளை பூசி வாருங்கள். இப்படி குளிக்கும்போது, ஆறாத புண்கள்,கரப்பான் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப்பிரச்னைகளில் விடுபட முடியும். ஒரு சில பொருட்களை நீங்கள் நுகரும் போது, அதன் நறுமணமே நம்மை உற்சாகப்படுத்தும். அப்படி, கஸ்துாரி மஞ்சளின் வாசனை எப்போதும், உங்களை உற்சாகப்படுத்தும்.

ஒரு சிலருக்கு தோலில் ஏதாவது பிரச்னை இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு,கஸ்துாரி மஞ்சள் சிறந்த நிவாரணியாக இருக்கின்றது. ஏனெனில், கஸ்துாரி மஞ்சளை உடலில் பூசும்போது, தோலில் அதிகளவில் வெப்பத்தை உண்டாக்கி, கிருமிகளை அகற்றும் பணியை செம்மையாக செய்கின்றது.

ஆறாத காயங்கள், அடிபட்ட புண்கள் போன்றவற்றை சரி செய்வதற்கு,  கஸ்துாரி மஞ்கள் தகுந்த நிவாரணியாக இருக்கின்றது. முதலில், 50 கிராம் கஸ்தூரி மஞ்சள் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.  அதை, ஒரு லிட்டர் அளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மருந்தை, அடிபட்ட புண்களில் தடவி வரலாம். புண்கள் விரைவில் ஆறிவிடும்.

தீராத வயிற்று வலி இருப்பவர்கள், சிறிது கஸ்தூரி மஞ்சள் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், வயிற்று வலி தீரும். இந்த கஸ்துாரி மஞ்சளை பாலில் கலந்து குடித்து வந்தால், ‘பிராங்கைட்டிஸ்’ என்னும், நுரையீரல் தொற்று, இருமல் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

தலைவலி இருப்பவர்கள், கஸ்துாரி மஞ்சள் வெந்நீர் கலந்து தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து வரலாம். இப்படி செய்து வந்தால், ஒரு சில நிமிடங்களில் உங்களுக்கு தலைவலி பறந்து விடும்.

கஸ்தூரி மஞ்சளுடன் கிச்சிலிக் கிழங்கு, மற்றும் கோரைக் கிழங்கு, ரோஜா இதழ், செண்பகப்பூ, வெட்டிவேர், விளா மரத்தின் வேர், சந்தனம் கலந்து பொடி செய்து, தினமும் தேய்த்துக் குளித்துவரலாம். அப்படி செய்து வந்தால், சொறி சிரங்கு, மற்றும் தேமல், உள்ளிட்ட பல்வேறு தோல் நோய்கள், அறவே நீங்கும். இதுதவிர, தோல் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறுவதற்கு கஸ்துாரி மஞ்சள் பயன்படுகின்றது.

ஒரு சிலருக்கு பாதத்தில் வெடிப்பு உண்டாகும். இந்த பாத வெடிப்பின் மீது, விளக்கெண்ணெயுடன் மஞ்சள் துாள் கலந்து கலவையை பூச வேண்டும். அப்படி செய்து வந்தால், பாதவெடிப்பு சரியாகும்.

கோடைவெயில் கொளுத்தும் போது, வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்கு, விதவிதமான  அழகு சாதன பொருட்களை பூசுகின்றது. கோடை காலத்திலும், உங்கள் சருமம் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமா? அதுவும் எளிய வழியில் இருக்கின்றது. மஞ்சளை உங்கள் முகத்தில் மஞ்சளை பூசி வந்தாலே, சருமம் குளிர்ச்சியாக இருக்கும்.

வகைகள்…

மஞ்சள் என்பது  ஒன்று மட்டும் தான் என்று நினைத்து விடாதீர்கள், மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அதில், முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரிமஞ்சள், நாக மஞ்சள், காஞ்சிரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குடமஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள், ஆகிய 11 வகைகள் உள்ளன. இவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போமா..?

முட்டா மஞ்சள்:

என்ன இது மஞ்சளின் பெயரே இப்படி இருக்கின்றது என்று வியப்படைந்து விடாதீர்கள். பெயர் தான் இப்படி, ஆனால், இந்த முட்டா மஞ்சள் பல நன்மைகளைத் தரும். இந்த முட்டா மஞ்சள் வடிவத்தில், சற்று உருண்டையாக இருக்கும். இந்த முட்டா மஞ்சளை அரைத்தோ, அல்லது கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசி வரலாம். அப்படி, செய்து வந்தால், முகத்தில் தோன்றும் தேவையற்ற தேமல், உள்ளிட்ட சருமப்பிரச்னைகளிலிந்து தீர்வு கிடைக்கும்.

கஸ்தூரி மஞ்சள்:

இந்த கஸ்தூரி மஞ்சள் வில்லை வில்லையாகவும் தட்டையாகவும் இருக்கும். கஸ்துாரி மஞ்சள் அதிகளவில் வாசனை மிக்கதாக இருக்கும். இந்த கஸ்துாரி மஞ்சள் பல்வேறு உடல்நலப்பிரச்னைகளுக்கு தீர்வாகும்.

விரலி மஞ்சள்:

இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள்.

பயன்கள்…

1.குடல் சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள், மஞ்சள் சூரணம் உட்கொள்ளலாம். அவ்வாறு உட்கொள்ளும்போது, குடல் நோய் சம்பந்தமான நோய்கள் விரைவில் குணமாகி விடும். ஒரு சிலர், வண்டுக்கடி, பூச்சிக்கடியால் அவதிப்படுவதுண்டு. வண்டுக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், பச்சை மஞ்சளை அரைத்து பூசி வந்தால், உரிய நிவாரணம் கிடைக்கும்.

2. தீராத தலைவலி, ஜலதோஷம், தலைகனமாக இருத்தல் போன்ற உடல் நலப்பிரச்னை உள்ளவர்களுக்கு  எரிய மருத்துவம் உள்ளது.வேறொன்றுமில்லை. மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகை வருகிறதல்லவா. அந்த புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால் தலைவலி, ஜலதோஷம் உள்ளிட்ட உடல் நலப்பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

3. அதேபோல், மஞ்சளை எரிப்பதால், வருகின்ற  புகையை வாய் வழியாக உள்ளே இழுத்தால், அளவுக்கு அதிகமான மது போதை விரைவில் விலகி விலகி ஓடும். மஞ்சளை நன்கு வறுத்து அதை பொடியாக்கி கொள்ளலாம். இப்படி தயாரிக்கப்பட்ட மஞ்சள் பொடியை,  சருமத்திலும் உடலிலும் பூசி வந்தால், உடலில் தோன்றும் பல்வேறு விதமான நோய்களிலிருந்து விடுபட முடியும்.

4. மஞ்சளை நன்றாக சுட்டு ஏரிக்கப்பட்ட கரியிலிருந்து செய்யப்படுகின்ற சூரணத்தை உட்கொண்டு வரலாம். இந்த சூரணத்தை உட்கொண்டு வந்தால், மேகப்புண் மற்றும் தோல் சம்பந்தமான  நோய்களிலிருந்தும்,, விகாரத்தன்மை  மற்றும் அதிசாரக் கழிச்சல் போன்ற நோய்களிலிருந்து விடுபட முடியும். இதுதவிர, கரிமஞ்சளிலிருந்து செய்யப்படும் சூரணத்தை, உட்கொண்டு வந்தால், வாய்வு காரணமாக மார்பில் ஏற்படுகின்ற வலி மற்றும் தலைவலி  போன்றவை குணமாகும்.

5.  மஞ்சள் உப்பு  குடல் சம்பந்தமான பல்வேறு பிரச்னைகளுக்கு தகுந்த நிவாரணமாக இருக்கின்றது.இந்த மஞ்சள் உப்பை எப்படி தயாரிப்பது என்று தெரியுமா? முதலில், மஞ்சளை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கப்பட்ட மஞ்சளை, தண்ணீரில் கரைய வைத்து, வடித்துவிட டேண்டும். பாத்திரத்தில் தங்கியுள்ள பொடியை, திப்பிலியுடன் கலந்து அடுப்பில் வைத்து, தீ முட்ட வேண்டும். பாத்திரம் சூடாகும்போது, மஞ்சள் நீர் நன்கு சுண்டி,பிறகு உப்பு கிடைக்கும்.  இந்த உப்பை நீங்கள் உணவில் சேர்த்து சாப்பிட்டாலும் சரி, வெறுமனே சாப்பிட்டாலும் சரி, குடல்கிருமிகள் வெளியேற்றப்படும். துர்நாற்றத்தை நீக்கும்.

6. மஞ்சளில் கறிவேப்பிலை சேர்த்து, அரைத்து விட்டால் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது வெளிப்பூச்சாக பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும்போது, அனைத்து வகையான, நச்சுயிரிகள் எனப்படும் பாக்டீரியாக்களால் ஏற்படும் உடல் நலப்பிரச்னைகளிலிருந்து விடுபட முடியும்.

7. மஞ்சளுடன், வேப்பிலை, வசம்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து, உடலில் பூசிக் கொண்டால், மேகப் புண், சருமத்தில் உண்டாகும் படை, விஷக்கடிகள் போன்ற பிரச்னைகளில் இருந்து விரைவில் விடுபட முடியும்.

9. வேப்ப எண்ணெயில் மஞ்சளை நன்கு மூழ்கச்செய்து வெளியே எடுத்துக்கொள்ள வேண்டும். வேப்ப எண்ணெய் வழிந்து கொண்டிருக்கும் மஞ்சளை எரித்தால்,புகை வரும். அந்த புகையை மூக்கு வழியாக உள்ளிழுத்தால், தலைவலி பிரச்னையிலிருந்து விரைவில் விடுபடலாம்.

10. ஒரு சிலருக்கு ஆறாத புண்கள் இருக்கும். அப்படி ஆறாத புண்களால், அவதிப்படுபவர்களுக்கு மஞ்சள் மிகச்சிறந்த வலிநிவாரணியாக இருக்கின்றது. மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து, கற்பூரம் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டிய பின், அந்த எண்ணெயை புண்கள் மீது தடவிவரவும்.அப்படி செய்தால், ஆறாத புண்கள் எல்லாம் விரைவில், ஆறி விடும்.


Spread the love
error: Content is protected !!