சத்தான தக்காளி

Spread the love

தக்காளியில் உள்ள சத்துக்களை கவனிக்கும் பொழுது, அதைக் காய்கறிகளுடன் சேர்க்காமல் பழவகைகளோடு தான் சேர்க்க வேண்டும். வைட்டமின் ஏ,H,சி மற்றும் காரத்தன்மை பொருட்கள் அதிக அளவு இருப்பதால் தக்காளியை உட்கொள்ள ஸ்கர்வி நோய் ஏற்பட்டிருந்தாலும் குணப்படுத்துகிறது. வைட்டமின் ‘சி’ குறைபாடுகளினால் ஸ்கர்வி நோய் மட்டுமின்றி, குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி குறைதல், முகத்தில் பிரகாசமின்றி காணப்படுதல், பசியின்மை, எடைக் குறைவு, பல் ஈறிலிருந்து இரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகள் தோன்றுகின்றன.

வாலிப வயதில் வைட்டமின் ‘சி’ குறைந்தால், உடலில் சக்தி குறைதல், பல் ஈற்றில் இருந்து இரத்தம் வருதல், முகம் பொலிவின்மை, கால் உளைச்சல், சருமங்களில் சிவப்பான புள்ளிகள் மற்றும் மூச்சு விடுதலில் கோளாறுகள் ஏற்படுகின்றன.

மேற்கூறிய பிரச்சனைகள் குணம் பெற, தக்காளி ரசம் அல்லது தினசரி 100 கிராம் அளவு தக்காளிப் பழங்களை விழுங்கி தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். தாய்ப்பால் எடுத்துக் கொள்ளும் சிறு குழந்தைகளுக்கு, முதல் மாதத்திற்குப் பிறகு, வடிகட்டிய தக்காளி ரசம் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு  தேக்கரண்டி கொடுக்க ஆரம்பித்து, மூன்று மாதங்களில் 5, 6 தேக்கரண்டி வரை கொடுக்கலாம். முதலில் சிறு ஜூரம் தோன்றலாம் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. உடல் அதைத் தானாகவே சமாளித்துக் கொள்ளும்.

துணுக்குச் செய்தி

வரட்டு மோர்க்களி; திரட்டு மோர்க்களி தெரிஞ்சுக்கோங்க…

வறட்டு மோர்க்களியில் எண்ணெயும், மோரும் மிகக் குறைவாக சேர்ப்பார்கள். நெய் வாசனை, காரம் கண்ணிற்கு லட்சமாக கடுகு மிளகாய் மிகுந்து காணப்படும். பெருங்காய வாசனை ஆளைத்தூக்கிவிடும்.

திரட்டு மோர்க்களி செய்யும் முறை

கெட்டியான மோரில், தேவையான அளவு கோதுமை மாவைக் கொட்டி, உப்புப் போட்டு, தோசை மாவு போல கரைக்க வேண்டும். போதுமான அளவு எண்ணெய் அல்லது நெய்யை வெண்கலச் சட்டியில் ஊற்றி, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கொஞ்சம் உடைத்த மிளகு இவைகளைக் கொட்டி வறுபட்டவுடன் கரைத்த மாவை ஊற்றிக் கிளறிக்கொண்டே வர வேண்டும். அல்வா மாதிரியாகத் திரண்டு வந்தவுடன் கீழே இறக்கிக் கொள்ளவும். ஒரு தட்டில் நெய்யைத் தடவி மோர்க் களியைக் கொட்டி, தட்டி, அகட்டி விட வேண்டும். தோசைத் திருப்பி உதவி கொண்டு, இக்களியின் மேல் கட்டங்கள் கிழித்து பம்பாய் அல்வாக் கட்டி போல் பெயர்த்து எடுத்து பரிமாறவும்.

திரட்டு மோர்க் களி உண்டுவர, எலும்புக் கூடுகள் மறைந்து சதைப் பிடிப்பு ஏற்படும். சுத்த வெண்கலம் கிடைக்காவிட்டால் உருக்குச் சட்டியை உபயோகிக்கவும். ருசிக்கு ஏற்றவாறு புளிப்பு மோரை அல்லது புதுத் தயிரை உபயோகிக்கலாம். நெய்க்குப் பதிலாக எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.


Spread the love