தளர்ச்சி நீக்கும் தேநீர்

Spread the love

தளர்ச்சி நீக்கும் தேநீர் வித, வித வகைகள் தயாரிப்புகள்

தண்ணீருக்கு அடுத்தபடி உலகிலேயே மக்கள் அதிகம் அருந்தும் பானம் டீ‘. தேயிலை, பெயருக்கு ஏற்றபடி கொழுந்து, இலைகளின் பானம். செடியின் மொட்டுக்கள், இளசான தண்டுகளும் உபயோகிக்கப்படுகின்றன. தேயிலை செடி இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் 7000 அடிக்கு மேலான மலைப் பிரதேசங்களில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. தேயிலையில் குறைந்தபட்சம் ஆறு வகைகள் உள்ளன. அவற்றில் நான்கு மார்க்கெட்டில் கிடைப்பவை. அவை வெள்ளை, பச்சை, ஊலங் மற்றும் கறுப்பு தேயிலைகள். எல்லா விதங்களும் ஒரே இனத்தைச் சேர்ந்த செடிகளிலிருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. வெள்ளை ரக தேயிலை பிரத்யேகமாக பயிரிடப்படுகிறது. “மூலிகை டீதேயிலை அல்ல. வேறு மூலிகைகள், பூக்கள், பழங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சிகப்பு டீஎன்றால் தென்ஆப்ரிக்காவில் தேயிலை அல்லாத ரூயிபாஸ்செடியிலிருந்து தயாரிக்கப்படும் கஷாயம். ஆனால் இதே சிகப்பு டீஎன்ற வார்த்தை சீன, ஜப்பானிய இதர கிழக்காசிய மொழியில் கறுப்பு தேயிலையிலிருந்து தயாரிக்கப்படும் டிகாக்ஷனைக் குறிக்கும்.

தேயிலை அதன் பெயருக்கேற்ப, சிறுமரம் (செடி) ஒன்றின் கொழுந்து இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. உஷ்ண பிரதேசங்கள், உஷ்ணம் குறைந்த பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. நல்ல மழை தேவை. வருடத்தில் குறைந்தபட்சம் 127 செ.மீ. (50 அங்குலம்) மழை வேண்டும். அமிலத்தன்மையுள்ள மண்களில் தேயிலை நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் பயிரிடப்படும் தேயிலை மெதுவாக வளர்ந்து தரத்திலும், சுவையிலும் சிறப்பாக இருக்கும். டார்ஜிலிங்தேயிலை உயரத்தில் பயிரிடப்படுவதால் தான் தரத்தில் மிக மேன்மையாக இருப்பதின் காரணம். செடியின் தலைநடுவில் கத்தரித்துவந்தால் பக்கவாட்டில் கொழுந்து இலைகள் நன்றாக துளிர்விடும். ஒவ்வொரு செடியும் (புதர் செடி எனலாம்) வருடத்தில் 0.75 கிலோ (2 பவுண்ட்) எடை இலைகளை தரும். செடிகள் விதைகள் மூலம் நடப்பட்டு பண்ணைகளில் (நாற்றங்கால்) வளர்த்து பயிரிடப்படலாம். இல்லை செடித்துண்டுகளை நட்டும் பயிரிடலாம். பயிரிட்டதிலிருந்து 4 (அ) 6 வருடத்தில் “கைகளால்” பறிக்கப்படும் பழக்கம் இன்றும் தொடருகிறது. பறிப்பவர் ஒரு மொட்டையும், இரு தளிர்களையும், இளம் கிளைகளிலிருந்து பறிப்பார். மறுபடியும் புதுக் கொழுந்து இலைகள் 7 (அ) 10 நாட்களில் செடி வளரும் பருவத்தில் துளிர்க்கும். தேயிலை செடிகள் பறிப்பதற்கு சுலபமாக, இருப்பு வரை வளர்க்கப்படுகின்றன. அப்படியே விட்டு விட்டால் தேயிலை மரமாகிவிடும்!

பரவலாக பயிரிடப்படும் ரகங்கள் இரண்டு. சீரை தேயிலை, அஸ்ஸாம் செடி. இலைகளின் சைஸைவைத்துத்தான் தேயிலையின் ரகங்கள் சொல்லப்படுகின்றன. சீனத்தேயிலை இலைகள் சிறியவை. அஸ்ஸாமிய தேயிலை இலைகள் அளவில் பெரியவை.

பதப்படுத்தும் முறைகள்

தேயிலை இலைகளை பறித்தவுடன் டீயாக பதப்படுத்த உடனடியாக ஃபேக்ட்ரிக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிடில் வாடி விடும். ஆக்ஸிகரணம்ஆகிவிடும். பறித்தவுடன் இலைகளை உலர விட வேண்டும். இல்லாவிடில் தேயிலையின் பச்சயம் சிதைந்து விடும். இதை தேயிலை தயாரிப்பாளர்கள் “புளிக்க விடும்” என்கின்றனர். உண்மையிலேயே நடப்பது என்ஜைம் ஆக்ஸிகரணம் இருந்து செயல்படுவதற்குத்தான் புளிக்க வைப்பது என்பது பொருந்தும். இந்த பதப்படுத்தும் முறைகளால் தேயிலைக்கு மணமும், சுவையும் கூடுகிறது. குளிர் – ஈரம் உள்ள அறைகளில் புளிக்க வைத்து பிறகு, இலைகள் 3% ஈரப்பசை இருக்குமாறு உலர் காற்றில் காய வைக்கப்படுகின்றன. அப்போது அவை கருமையாகின்றன. இது தான் கறுப்புடீ.

அடுத்த கட்டம் இந்த ஆக்ஸிகரணத்தை முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒரு கட்டத்தில் நிறுத்துவது. சூடுபடுத்துவதால், என்சைம்கள் செயலிழந்து ஆக்ஸிகரணம் நின்று விடும். கறுப்பு டீ தயாரிப்பில் ஆக்ஸிகரணம் நிறுத்தப்படுவதும், இலைகள் சூடுபடுத்தப்படுவதும் ஒரே சமயத்தில் செய்யப்படும். இந்த செய்முறைகளின் போது, சரியான உஷ்ண நிலை மற்றும் ஈரப்பசை கட்டுப்பாடு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பூஞ்சனம் பிடித்து விடும். இதனால் தேயிலை பாழாகி விடும்.

பதப்படுத்தும் முறைப்படி தேயிலை ரகங்கள்

வெண்மை தேயிலை – வாடியது, ஆக்ஸிகரணமாகாதது.

மஞ்சள் டீ – வாடாமல், ஆக்ஸிகரணமில்லாதது – மஞ்சள் நிறமாக விடப்படுகிறது.

பச்சை டீ – வாடாதது, ஆக்ஸிகரணமாகாதது. அதிகமாக பதப்படுத்தும் முறைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பறித்த இலைகள் நீராவியால் சுத்தப்படுத்தப்பட்டு உடனடியாக பெட்டிகளில் பேக்செய்யப்படுகிறது. எனவே பச்சை தேயிலை இயற்கையானது.

ஊலங் – பாதி புளிக்கவைத்தவை அமெரிக்காவில் பிரபலமான ரகம்.

கறுப்பு டீ – சில சமயங்களில் தூளாக்கப்படும் டீத்தூள் முழுமையாக ஆக்ஸிகரணமானது.

தேயிலையில் உள்ள பொருட்கள்

புதிதாக பறித்த தேயிலை ஒன்றில் (எடையில்) 30% வரை ஆன்டி – ஆக்ஸிடன்ட் ஆன கேட்சின் என்ற பொருள் உள்ளது. இது வெள்ளை மற்றும் பச்சை தேயிலையில் அதிகமாகவும், கறுப்பு டீயில் சிறிது குறைவாகவும் இருக்கலாம். தவிர தியானின் மற்றும் காஃபின் ஒரு 250 மி.லி. கப் தேநீரில், முறையே 30 மி.கி. மற்றும் 90 மி.கி. உள்ளன. இந்த அளவுகள் தேயிலை ரகத்தை பொருத்து மாறலாம். சிறிய அளவில் தியோப்ரோமைன் மற்றும் தியோப்லைன் பொருட்களும் தேயிலையில் உள்ளன.

காஃபினை பொருத்த வரையில், காப்பிப் பொடியை விட, டீத்தூளில் தான் அதிகம். ஆனால் ஒரு கப் காப்பி தயாரிக்க தேயிலையை விட அதிகமாக காப்பித்தூள் தேவைப்படுகிறது. எனவே ஒரு கப் காப்பியையும், ஒரு கப் டீயையும் ஒரு கப் பால் காப்பியில் காஃபின் அதிகம்!

எந்த முறையில் பதப்படுத்தப்பட்டிருந்தாலும் எல்லா தேயிலைகளிலும் பாலி ஃபெனால் என்ற நன்மை பயக்கும் பொருள் உள்ளது. ஆனால் தேநீரில் கார்போஹைடிரேட், புரதம், கொழுப்பு இவைகள் மிக, மிகக் குறைந்த அளவில் உள்ளன. இல்லையென்றே சொல்லலாம்.

தேயிலையின் சரித்திரம்

சீனாவில் தான் தேயிலை உதயமாகியதா சொல்லப்படுகிறது. அங்கிருந்தே உலகமெங்கும் பரவியது.

தேயிலையின் நற்குணங்கள்

தேயிலை இலைகளில், கரோடீன், ரிபோப்ளேவின், நிக்கோடினிக் அமிலம், பேன்தோதெனிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் இவை உள்ளன. இவைகளால் ரத்த அழுத்தம் அதிகமாவது, தொற்று நோய்கள் தவிர்க்கப்படுகிறது.

தேயிலையில் உள்ள பாலி ஃபெனால்ஸ் என்னும் பொருட்கள் புற்றுநோயை, இருதயநோயை தடுக்கும்.

கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

உடலின் தற்காப்பு சக்தியை அதிகரிக்கும்.

தேயிலையில் உள்ள ப்ளூரைட் பற்களை பலப்படுத்தும்.

பச்சை தேயிலையின் நன்மைகள்

4000 வருடங்களுக்கு முன்பாகவே பச்சை தேயிலையின் மகிமையை சீனர்களும், ஜப்பானியர்களும் அறிந்திருந்தார்கள். உடலில் கெடுதலை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸ் “க்ரீன் டீயில் உள்ள பாலி ஃபெனால்ஸ் அழித்து விடுவதால் சோர்வு அகன்று புத்துணர்ச்சி உண்டாகிறது. புற்றுநோயை தடுக்கிறது.

பச்சை தேயிலை ரத்த அழுத்தத்தை மற்றும் என்ஸைம்களை கட்டுப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் குறைகிறது.

ரத்தம் கட்டுவதை தேயிலையில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட் குறைப்பதால் இதய வியாதியும் பக்கவாதமும் தடுக்கப்படுகின்றன.

பற்சிதைவை உண்டாக்கும் கிருமி ஸ்ட்ரெப்டோகாகஸ் முடன்ஸ், க்ரீன் டீ இந்த பாக்டீரியாவை வளரவிடாது.

வைரஸ் கிருமிகளை தேயிலையில் உள்ள கேட்சின்ஸ்எனும் பொருள் அழிந்து விடும். ப்ளூ போன்ற காய்ச்சல்கள் இதனால் தவிர்க்கப்படும்.

தேநீரின் நன்மைகளைப்பற்றி கூறும் போது சில மாறுபட்ட கருத்துகளும் உள்ளன. மேலும் ஆராய்ச்சிகள் தேவை. தேயிலையால் உண்டாகும் தீமைகளைப்பற்றி சரிவர தெரியவில்லையென்றாலும், அதில் காஃபின் உள்ளதால், அதை அளவாக குடிப்பது நன்மை தரும்.

தேநீர் தயாரிப்பு

தேநீர் (டீ) தயாரிப்பது எளிமையானது. தேயிலைகளை ஒரு கப்பில் போட்டு சுடுதண்ணீரை ஊற்றி 30 விநாடிகள் கழித்து குடிக்கலாம். வெந்நீரில் டீ இலைகள் விரிந்துசுவையை வெளியிடும். தேவையானால் பாலும், சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தேநீர் தயாரிப்பது எளிமையானாலும், சிறந்த தேநீரை தயாரிக்க அக்கறை தேவை. தேயிலை அளவு, நீரின் ஆடு, எவ்வளவு நேரம் இலைகள் ஊற வேண்டும் என்பதெல்லாம் கவனிக்க வேண்டும். ரகத்தை பொருத்து மேற்கண்டவை மாறும். முதல் படி – தேநீர் குடுவையை சுடுநீரில் கழுவவும்.

இரண்டாம் படி – குடுவையின் மூன்றில் 1 பாகத்தை தேயிலைகளில் நிரப்பவும்.

மூன்றாம் படி – டீயின் ரகத்துக்கு ஏற்றபடி, புதிதாக காய்ச்சிய சுடுநீரை சேர்க்கவும். தண்ணீரின் சூட்டு அளவுகள் முதலியன தனியே தரப்பட்டுள்ளன. தண்ணீர் அளவு – தேயிலைகள் மூழ்கும் வரை.

நான்காம் படி – பிறகு குடுவையை மூடி, முடிந்தால் கம்பளிதுணியால் குடுவையை மூடி வைக்கவும். 30 விநாடிகள் கழித்து, குடுவையை சாய்த்து தேநீரை கப்புகளில் கொட்டவும்.

தேயிலை ரகம்

வெள்ளை டீ

மஞ்சள் டீ

பச்சை டீ

ஊலங் டீ

கறுப்பு டீ

மூலிகை டீக்கள்

குறிப்பு

தண்ணீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ்

தேயிலை அளவுகள் – 1 டீஸ்பூன் ஒரு கப்பிற்கு. அதாவது 1 டீஸ்பூன் – 2 கிராம் தவிர குடுவைக்கு தனியாக 1 டீஸ்பூன் 1 கப் – 6 – 8 அவுன்ஸ்

கறுப்பு தேநீர்

காஃபின் அதிகம் உள்ள தேநீர் இது தான். உலகிலேயே பிரசித்தமான தேயிலையும் இது தான். இது வெட்டு, கிழி, சுருளாக சுருட்டு, முறையில் தயாரிக்கப்படுவதால் சிடிசி டீ என்றும் அழைக்கப்படுகிறது. தேயிலைகள் பறிக்கப்பட்டவுடன் அலமாரி போன்ற அமைப்புகளில் பரப்பப்பட்டு, காற்றால் உலர வைக்கப்படும். ஈரப்பசை தேநீர் இலைகள் மிருதுவாகின்றன. பிறகு மெஷின் – ரோலர்கள் மூலம் நசுக்கப்படுகின்றன. இலைகள் “கிழிக்கும் போது” தேயிலையின் செல்கள் ஆக்ஸிகரணம் ஆகின்றன. பிறகு புளிக்க வைக்கும் அறைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அங்கு நிறம் செம்பு வண்ணமாகிறது. பிறகு அவனில் உலர வைத்து சுருளாக்கப்படுகின்றன. நிறமும் பழுப்பான கருப்பாகிறது. கறுப்பு டீத்தூள்களிலிருந்து தயாரிக்கப்படும் கறுப்பு தேநீர் தான் மிக அதிகமாக குடிக்கப்படும் தேநீர் ரகம். இதற்கு தண்ணீர் கிட்டத்தட்ட அதன் கொதிநிலை (100 டிகிரி செல்சியஸ்) 99.0 டிகிரி வரை கொதிக்க வைக்கப்பட வேண்டும். இந்த தேநீரின் சுவைக்கு முக்கிய காரணம் தண்ணீரை சரியான உஷ்ண நிலை வரை கொதிக்க வைக்க வேண்டும். குறைவான உஷ்ண நிலையில் தேநீர் சரிவர கரையாது. இது பலர் செய்யும் தவறு. டீ தயாரிக்கும் முன் அதை தயாரிக்கும் பாத்திரம் அல்லது குடுவையை சூடுபடுத்த வேண்டும். இது சுலபமாக செய்யும் முறை அந்த பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி சுழற்றி நீரை வெளியே கொட்டி விடவும்.

சுடுநீரில் தேயிலைத்தூளை அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் வரை (குறைந்த பட்சம் 30 விநாடிகள்) ஊற வைக்க வேண்டும். சில பிரசித்தி பெற்ற தேயிலை பிராண்டுகள் – அஸ்ஸாம் டீ, நேபால் டீ, டார்ஜிலிங் டீ, நீலகிரி டீ, சிலோன் டீ, பச்சை தேயிலை அதிகம் பதப்படுத்தப்படாத ஒரிஜினல் தேயிலை தான் கிரீன் டீ எனப்படும் பச்சை தேயிலை. இவற்றில் குறைந்த அளவே காஃபின் உள்ளது. ஆன்டி ஆக்சிடான்ட் இனங்கள் உள்ளது. காஃபின் 20 மி.கி. / அளவு.

பச்சை தேயிலைக்கு சுடுதண்ணீர் 80 – 85 டிகிரி சென்டிகிரேடு உஷ்ண நிலையில் இருந்தால் போதுமானது. பச்சை தேயிலையில் தரம் அதிகமாக அதிகமாக தயாரிக்க உபயோகிக்கப்படுத்தப்படும் நீரின் உஷ்ண நிலை குறையும். இதிலும் டீ தயாரிக்கும் பாத்திரத்தை அல்லது குடுவையை சூடுபடுத்தவும்.

வெள்ளை டீ

பச்சை தேயிலை போன்று அதிகம் பதப்படுத்தக் கூடாது. காஃபின் குறைந்தது 15 மி.கி / கப் சிறந்த இனிய லேசான சுவை உள்ளது. பல ரகங்கள் உள்ளன. பெரும்பாலும் சீனாவிலும், ஜப்பானிலும் பயிரிடப்படுகின்றன. இந்தியாவில் டார்ஜிலிங்கில் சிறந்த உயர் ரக வெள்ளை டீ பயிரிடப்படுகிறது.

டீயும் பாலும்

தேநீருடன் பால் சேர்த்து குடிக்கும் பழக்கம் 1680 வருடத்தில் தொடங்கியிருக்கலாம். இந்தியாவின் “மசாலா டீ” பிரசித்தி பெற்றது. சாதாரணமாக கறுப்பு தேயிலைத்தூள் பால் கலந்து டீ தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்த பாலை டீ தயாரிப்பின் எப்போதும் சேர்ப்பது என்பது சர்ச்சைக்குரிய விஷயம். பலருக்கு டீ டிக்காஷன் தயாரித்த பிறகு பாலையும் சர்க்கரையும் சேர்த்த பிறகு பிடித்தமான விஷயம். இதனால் சரியான அளவு பால் சேர்க்க முடியும் சர்க்கரையும் சுலபமாக கரையும்.

நறுமணத் தேயிலை

பச்சை தேயிலை அல்லது வெண்ணிற தேயிலை இவற்றுடன் மல்லிகை போன்ற மலர்களை சேர்ப்பதால் பிரத்யேக ஒரு நறுமணத் டீ தயாரிக்கலாம். நறுமணத் டீயில் பிரசித்தி பெற்றது பச்சை தேயிலை அல்லது வெள்ளை தேயிலையுடன் சேர்த்து தயாரிக்கப்படும் மல்லிகை தேயிலை ரகங்கள் தான்.

கிழக்கிந்தியாவில் லெமன் டீ என்பது பிரசித்தம். எலுமிச்சை சாறும், சர்க்கரையும், டீ டிகாக்ஷன் சேர்க்கப்படுகிறது. மசாலா லெமன் டீயில் சேர்க்கப்படுபவை சூடான தேநீர், வறுத்த சீரகப் பொடி, எலுமிச்சை ஜுஸ், கரு உப்பு மற்றும் சர்க்கரை. இது ஒரு விறுவிறுப்பான தேநீர்.

இஞ்சி சேர்த்த டீயும் பிரசித்தம்.

உலகிலேயே அதிகமாக அருந்தப்படும் பானம் தேநீர். காஃபி, சாக்லேட், மென்பானங்கள், சாராயம் – இவையனைத்தும் சேர்த்து குடிக்கப்படும் எண்ணிக்கைக்கு தேநீர் ஒன்றே சமமானது. உலகிலேயே அதிகம் தேநீர் குடிக்கும் தேசம் இந்தியா.

உலகின் தேயிலை உற்பத்தி (மெட்ரிக் டன்களில்)

சீனா – 1, 257, 384

இந்தியா – 979, 000

கென்யா – 345, 800

ஸ்ரீலங்கா – 318, 470

துருக்கி – 198, 046

வியட்நாம் – 174, 900

இந்தோனேசியா – 150, 851

இதர தேயிலை உற்பத்தி செய்த தேசங்கள் ஜப்பான், அர்ஜன்டைனா, ஈரான், பங்காளதேஷ், மாலவி, உகண்டா. 

உணவு நலம் நவம்பர் 2010

தளர்ச்சி நீக்கும், தேநீர், வித, வித, வகைகள், தயாரிப்புகள், மூலிகை டீ, ரூயிபாஸ், டார்ஜிலிங், ஆக்ஸிகரணம், பச்சயம், என்ஜைம் ஆக்ஸிகரணம், கறுப்பு டீ, என்சைம்கள், ஈரப்பசை, பூஞ்சனம், பதப்படுத்தும், முறை, தேயிலை, ரகங்கள், வெண்மை தேயிலை, தேயிலையில், உள்ள, பொருட்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட், கேட்சின், தியானின், காஃபின், தியோப்ரோமைன், தியோப்லைன், பாலி ஃபெனால், கார்போஹைடிரேட், புரதம், கொழுப்பு, தேயிலையின், சரித்திரம், சீனா, தேயிலையின், நற்குணங்கள், கரோடீன், ரிபோப்ளேவின், நிக்கோடினிக் அமிலம், பேன்தோதெனிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், ரத்த அழுத்தம், தொற்று நோய், பாலி ஃபெனால்ஸ், புற்றுநோய், இருதயநோய், கொலஸ்ட்ரால், உடலின் தற்காப்பு சக்தி, ப்ளூரைட், பச்சை, தேயிலையின், நன்மைகள், ஃப்ரீ ரேடிகல்ஸ்,

புத்துணர்ச்சி, உயர் ரத்த அழுத்தம்இதய வியாதி, பக்கவாதம்,

தளர்ச்சி நீக்கும், தேநீர், வித, வித, வகைகள், தயாரிப்புகள், ஸ்ட்ரெப்டோ காகஸ், பாக்டீரியா, வைரஸ், கேட்சின்ஸ், ப்ளூ, தேநீர், தயாரிப்பு, டீ, பால், சர்க்கரை, சிறந்த தேநீர், தேயிலை அளவு, நீரின் சூடு, தேயிலை ரகம், வெள்ளை டீ, மஞ்சள்டீ, பச்சை டீ, ஊலங் டீ, கறுப்பு டீ, மூலிகை டீக்கள், குறிப்பு, கறுப்பு தேநீர், வெட்டு, கிழி, மெஷின் ரோலர்கள், செல்கள், அஸ்ஸாம் டீ, நேபால் டீ, டார்ஜிலிங் டீ, நீலகிரி டீ, சிலோன் டீ, பச்சை தேயிலை, கிரீன் டீ, வெள்ளை டீ, சீனா, ஜப்பான், டீயும், பாலும், மசாலா டீ, தேயிலைத்தூள், நறுமணத், தேயிலை, வெண்ணிற தேயிலை, தேயிலை ரகங்கள், லெமன் டீ, எலுமிச்சை சாறு, சர்க்கரை, டீ டிகாக்ஷன், வறுத்த சீரகப் பொடி, எலுமிச்சை ஜுஸ், கரு உப்பு, இஞ்சி டீ, காஃபி, சாக்லேட், மென்பானம், சாராயம், உலகின், தேயிலை, உற்பத்தி, சீனா, இந்தியா, கென்யா, ஸ்ரீலங்கா, துருக்கி, வியட்நாம், இந்தோனேசியா, தேசங்கள், ஜப்பான், அர்ஜன்டைனா, ஈரான், பங்காளதேஷ், மாலவி, உகண்டா,


Spread the love