தண்ணீருக்கு அடுத்தபடி உலகிலேயே மக்கள் அதிகம் அருந்தும் பானம் டீ. தேயிலை, பெயருக்கு ஏற்றபடி கொழுந்து இலைகளின் பானம். செடியின் மொட்டுக்கள், இளசான தண்டுகளும் உபயோகிக்கப்படுகின்றன. தேயிலை செடியின் இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் 7000 அடிக்கு மேலான மலைப்பிரதேசங்களில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தியா தேயிலை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்று. தேயிலை இலைகளை டீயாக தயாரிக்கும் முறைகளால் மூன்று முக்கிய வகைகள் மாறுபடுகின்றது. பச்சை தேயிலை இதை அதிகமாக தயாரிக்கும், பதப்படுத்தும் முறைகளுக்கு உட்படுத்துவதில்லை. பறித்த இலைகள் நீராவியால் சுத்தப்படுத்தப்பட்டு உடனேயே பெட்டிகளில் பேக் செய்யப்படுகின்றது. எனவே, பச்சை தேயிலை இயற்கையானது. இதர இரண்டு வகை தேயிலைகள் – கருப்பு மற்றும் சிவப்பு நிற தேயிலைகள் காய வைக்கப்பட்டு, நசுக்கப்பட்டு ஊற வைக்கப்படுகின்றது. ஊற வைக்கப்படும் நேரத்தை பொறுத்து தேயிலையின் நிறம் கருப்பாக அல்லது சிவப்பாக மாறுகிறது. எம்முறையில் தயாரித்தாலும் எல்லா தேயிலைகளிலும் ஃபாலி பெனால் என்னும் நன்மை தரும் பொருள் உள்ளது.
தேயிலையின் நற்குணங்கள்
தேயிலை இலைகளில், கரோடீன், ரிபோப்பிளேவின், நிக்கோடினிக் அமிலம், பென்தோதெனிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் இவை உள்ளன. இவைகளால் ரத்த அழுத்தம் அதிகமாகவது, தொற்று நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.
தேயிலையில் உள்ள ஃபாலி பெனால் என்னும் பொருட்கள் புற்றுநோயை, இருதய நோயை தடுக்கின்றது.
உடலின் தற்காப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
தேயிலையில் உள்ள ஃப்ளுரைட் பற்களை பலப்படுத்தும்.
பச்சை தேயிலையின் நன்மைகள்
4000 வருடங்களுக்கு முன்பாகவே பச்சை தேயிலையின் மகிமையை சீனர்களும் ஜப்பானியர்களும் அறிந்திருந்தார்கள். இந்த “க்ரீன் டீ” யை விட 25 மடங்கு அதிகமானது. உடலில் கெடுதலை உண்டாக்கும் ஃப்ரீரேடிகல்ஸ் க்ரீன் டீயில் உள்ள ஃபாலி பெனால் அழிந்து விடுவதால் சோர்வு அகன்று புத்துணர்ச்சி உண்டாகின்றது. புற்று நோயை தடுக்கின்றது. பச்சை தேயிலை ரத்த அழுத்தத்தை குறைக்கின்றது. என்சைம்களை கட்டுப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் குறைக்கின்றது. ரத்தம் கட்டுவதை தேயிலையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் குறைப்பதால் த்ரம்போசிஸ் என்னும் இதய வியாதியும் பக்கவாதமும் தடுக்கப்படுகின்றது. பற்சிதைவை உண்டாக்கும் கிருமி ஸ்ட்ரெப்டோகாகஸ், கிரீன் டீ இந்த பாக்டீரியாவை வளர விடாது. வைரஸ் கிருமிகளை தேயிலையில் உள்ள கேட்சின்ஸ் எனும் பொருள் அழிந்து விடும். ப்ளூ போன்ற காய்ச்சல்கள் இதனால் தவிர்க்கப்படுகின்றது.
உணவு நலம் ஜுன் 2011
தேயிலை, இந்தியா, தேயிலை இலை, பச்சை தேயிலை, ஃபாலி பெனால்,
தேயிலையின், நற்குணங்கள், கரோடீன், ரிபோப்பிளேவின், நிக்கோடினிக் அமிலம், பென்தோதெனிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், ரத்த அழுத்தம், தொற்று நோய்கள், ஃபாலி பெனால், புற்றுநோய், இருதய நோய், உடலின் தற்காப்பு சக்தி, ஃப்ளுரைட், பச்சை தேயிலையின், நன்மைகள், க்ரீன் டீ, ஃப்ரீரேடிகல்ஸ், புத்துணர்ச்சி, ரத்த அழுத்தம், என்சைம்கள், உயர் ரத்த அழுத்தம், ஆன்டி ஆக்சிடன்ட், த்ரம்போசிஸ், இதய வியாதி, பக்கவாதம், ஸ்ட்ரெப்டோகாகஸ், வைரஸ்கிருமி, கேட்சின்ஸ், ப்ளூ,