சிலர் காலை வெயிலில் சூரியனை வணங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்களிடம் இதன் நன்மைகள் குறித்து கேட்டால் பதில்சொல்லத் தெரியாமல் முழிப்பார்கள். இந்த சூரிய நமஸ்காரம் என்பது யோகா பயிற்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
சூரிய நமஸ்காரம் நிமிர்ந்து நின்னும், குனிந்தும், வளைந்தும், படுத்தும் செய்யப்படுகின்றது. ஆரம்பத்தில் இவற்றைச் செய்வதில் சில சிரமங்கள் இருக்கலாம். உடம்பின் சில பாகங்களில் வலி ஏற்படும். சில பகுதிகள் சரியாக வளைந்து கொடுக்காமல் இருக்கலாம். இவை ஒரு வாரப் பயிற்சியில் சரியாகி விடும்.
பயன்கள்
சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிருட்டி ஆற்றலை அளிக்கிறது. கல்லீரல் , வயிறு. மண்ணீரல், குடல்கள் எல்லாம் கசக்கிப் பிடித்து விடுவது போன்று மசாஜ் செய்யப்படுகின்றன. மலச்சிக்கல் மறைந்து போகிறது. குன்மம் பசியின்மையும் பறந்தோடுகின்றன. வயிற்று உறுப்புகளில் இரத்தம் தங்குவதே இல்லை. இதனால் உறுதியடைகின்றது.
நுரையீரல்கள் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க் காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரியமில வாயுவையும், பிற நச்சுப் பொருன்களையும் மூச்சு மண்டலத்தில் இருந்து வெளியேற்றுவதன் முலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கிறது.
இதயத்தை முடக்கிவிட்டு இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகிறது. இது இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தும். இதயத்துடிப்பை சமன் செய்யும் கை, கால் போன்ற தூரவெளி உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும்.
மாறி ,மாறி மடக்கி நீட்டி நரம்பு மண்டலத்தை விழிப்புடன் இருக்கச் செய்வதில் சூரிய நமஸ்காரத்திற்கு இணையானது வேறு ஒன்றும் இல்லை. சிம்பதட்டிக் பாராசிம்பாட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஓய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது. சென்றதைப் பற்றிய கவலையும் வரப்போவதை பற்றிய அலட்டலுமின்றி உள்ளம் அமைதியடைகின்றது. பிற உயிரணுக்களைக் காட்டிலும் நரம்பு உயிரணுக்கள் மிகமிகத் தாமதமாகவே விழிப்புற்று உயிராற்றல் பெறுகின்றன. இருப்பினும் இடையறா முறையான பயிற்சியாலும் கலிக்காத முயற்சியாலும் சிறுகச் சிறுகச் நரம்பு உயிரணுக்கள் தத்தம் சாதாரணக் காரியங்களைச் செய்யத்தக்க வகையால் வலுவடைகின்றன.
சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தை ராயிட், பாராசையிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதால் எல்லா எண்டோகிரைன் சுரப்பிகளும் தமக்கு இயல்பான காரியங்களைச் செய்கின்றன.