நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க முளை கட்டிய தானியங்கள்

Spread the love

முளைகட்டிய தானியங்களை காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளைகளில் எந்த வேளையிலும் சாப்பிடலாம். ஆனால், ஏதாவது ஒருவேளைதான் சாப்பிட வேண்டும். காலை உணவு எனில், 50 &- 65 கிராம், மதிய உணவு எனில்  70 &- 80 கிராம், இரவு உணவு எனில்  70 -& 75 கிராம் என்கிற அளவில் முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை உணவில் 50-:50, அதாவது பாதி அளவு சாப்பாடு, பாதி அளவு முளைகட்டிய தானியம் இருக்குமாறு சாப்பிடலாம். இந்த அளவுகள் குறையலாம்… அதிகமாகக் கூடாது. மதியம், இரவு உணவுகளுடன், வேகவைக்காத முளைகட்டிய தானியங்களைச் சேர்த்துச் சாப்பிடலாம். அல்லது பாதி அளவு வேகவைக்காமலும், பாதி அளவு வேகவைத்தும் சாப்பிடலாம்

வைட்டமின் சி, வைட்டமின் டி சத்துக்கள் முளைக் கட்டிய தானியங்களைச் சாப்பிடுவதால் கிடைப்பதுடன் இதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலில் அதிகரிக்கிறது. மேலும் உடலுக்குத் தேவையான இரும்பு, கால்சியம், நார்ச்சத்து என்று பலவித சத்துக்கள் உடலுக்கு கிடைகின்றன. முளைக்கட்டிய தானியங்களை தினசரி ஏதாவது ஒரு வேலை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். முளைக் கட்டிய தானியங்களை மட்டுமே முழு உணவாகக் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் முளைக் கட்டிய தானியத்தில் புரதம் வைட்டமின் சத்துக்கள் கிடைத்தாலும் உடலுக்கு அவை மட்டுமே போதாது.

கார்போஹைட்ரேட், தாது உப்புகள் போன்றவையும் சமச்சீர் உணவுகளுக்கு அவசியம் தேவை. முளை கட்டிய தானியங்களைச் சாப்பிடும் போது செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். இதன் காரணமாகத் தான் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதைத் தவிர்த்து விட வேண்டும். முளைக் கட்டிய பச்சைப் பயிறு எளிதில் செரிமானம் ஆகும் என்பதால் 5 முதல் 10 வயதுக் குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம். 8 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லா வகை முளைக் கட்டிய தானியங்களைச் சாப்பிடலாம்.

காலை வேலையில் முளைக்கட்டிய தானியங்களைச் சாப்பிடும் பொழுது ஒரு சில விஷயங்களை நாம் அறிந்து நடந்து கொள்வது நல்லது. காலையில் சாப்பிடுவதாக இருந்தால் முளைக் கட்டிய தானியங்களின் அளவு 50 முதல் 65 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். இரு வேளை உணவில் பாதி அளவு சாப்பாடு பாதி அளவு முளை கட்டிய தானியம் 50:50 என்ற அளவில் இருக்குமாறு சாப்பிட்லாம்.

தானியங்களை தண்ணிரில் ஊற வைத்து முளைக்கட்டச் செய்வதனால், அவற்றில் அமிலத் தன்மை அதிகரிக்கிறது. காலை நேரத்தில் வெறும் வயிற்றில் அமில அதிகமாகச் சுரக்கும் என்பதால், அந்த காலை நேரத்தில் முளைக் கட்டிய தானியத்தைச் சாப்பிட்டால் அசிடிட்டி, அல்சர் அதாவது வயிற்றுப் பொருமல் வயிற்றுப் புண், இரைப்பைக் கோளாறுகள் ஏற்படலாம்.

இதன் காரணமாக இட்லி, தோசை, சப்பாத்தி என ஏதேனும் ஒரு உணவுடன், வேக வைக்காத முளை கட்டிய தானியங்களை சேர்த்து சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. வேக வைத்த உணவான இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிடும் பொழுது அதிக அளவு சாம்பார், சட்னி ஊற்றிச் சாப்பிடக் கூடாது. ஏனெனில் இவைகளின் குணம் தானிய சக்திக்கு எதிராக வேதிவினை புரிவதுடன் பலன் கிடைக்காமல் செய்து விடும்.      தினமும் ஒரே வகையான முளைக்கட்டிய தானியத்தை சாப்பிடுவதை விட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானிய வகைகளை உட்கொள்வது நல்லது. நான்கைந்து தானியங்களை ஒன்றாக முளைக் கட்டச் செய்து சாப்பிடுவதும் நல்லது. கர்ப்பிணிகள், அசிடிட்டி, அல்சர், நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் வயதானவர்கள் முளைக் கட்டிய தானியங்களை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். 

கா. ராகவேந்திரன்           


Spread the love