எடை குறைப்பில் கீரைகளின் பங்கு

Spread the love

கீரைத் தோட்டத்தைத் தமது மருந்துப் பெட்டி என்று கூறினார் டால்ஸ்டாய். வயிற்றுக்கு நிறைவையும் உடலுக்கு வளத்தையும் தருகின்ற அநேகம் வகைக் கீரைகள் நம்நாட்டில் எளிதாக கிடைக்கின்றன. கீரை இலைகளிலும், கொழுந்துகளிலும், தண்டுகளிலும் புரதங்கள், சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து. வைட்டமின் ஏ ஆகியவைகள் அதிகம் இருக்கின்றன.

ஒரு நபருக்கு தினந்தோறும் வைட்டமின் ஏ 5000 (மிஹி) தேவை. ஒரு வேளை முருங்கைக் கீரை சாப்பிட்டால் 3260 (மிஹி) வைட்டமின் ஏ அதிலிருந்து கிடைக்கிறது. உடல் எடையைக் கூட்டாத அதே நேரத்தில் வயிற்றுக்கு இதமளிக்கக்கூடிய உணவுகளில் கீரை முதன்மையானது.

நாம் சாப்பிடக்கூடிய கீரை வகைகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

அகத்திக்கீரை         புளிச்ச கீரை

அரைக்கீரை         பொன்னாங்கண்ணி

கடுகுக்கீரை           மணத்தக்காளி கீரை

கொத்தமல்லி கீரை    முளைக் கீரை

கோயாக்கீரை         முள்ளங்கிக் கீரை

கோசுக்கீரை           முருங்கைக் கீரை

சிறுகீரை        முடக்கத்தான் கீரை

செலரிக்கீரை          புதினாக் கீரை

தண்டுக்கீரை          வேளைக் கீரை

தூதுவளைக்கீரை லெட்டூஸ் கீரை

நூல்கோல்கீரை  பசலைக் கீரை

பருப்புக் கீரை

உணவு முறை மாற்றங்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது “பச்சைக் கீரைகளைச் சரியான படி உபயோகிக்க முற்பட்டு விட்டோமானால் அதுவே நமது உணவு முறையில் ஒரு பெரும் புரட்சியைச் செய்ததாகிவிடும். பால் சாப்பிடுவதால் என்ன பலன் கிடைக்கிறதோ அதே பலனைப் பச்சைக் கீரைகள் அளித்து விடும் என்று பிரபல ஆங்கில டாக்டர் ஒருவர் தம்மிடம் கூறியதாகக் காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்.

எனவே உங்களது கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறையில் மேலே சொல்லப்பட்ட கீரைகளில் ஏதேனும் ஒன்று நிச்சயமாக இடம் பெற வேண்டும்.

                                                                முருகன்.


Spread the love