உடல் ஆரோக்கியத்துடன் இதயத்தை காக்கும் சோயா பீன்ஸ்..

Spread the love

உடல் பலத்திற்கு சோயா பீன்ஸ் இயற்கையாகவே நல்ல ஒரு உணவு பொருளாக உள்ளது. ஜப்பானியர்களின் ஆரோக்கியத்திற்கு மிக பெரியதாக நம்பப்படுவதே இந்த சோயா பீன்ஸ் தான். இதில் இருந்து எண்ணெய், பால், Tofu போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றது. இதில் இருக்கும் ஒமேகா-3, ஃபிட்டிக் ஆசிட் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  சோயா பீன்ஸில் இருக்கும் இரும்பு சத்து இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, உடலை வலிமையாக்குகின்றது.

சோயா பீன்ஸில் இருக்கும் துத்தநாகம் காது நரம்புகளுக்கு இரத்த ஓட்டத்தை தூண்டுவதினால் வயதானவர்கள் சோயா பீன்ஸ் சாப்பிட்டு வந்தால், காது கேட்கும் திறனை இழக்காமல் பார்த்து கொள்ளலாம்.  உடலில் கெட்ட கொழுப்புகளை நீக்கி, நல்ல கொலஸ்ட்ரால் பெற நினைப்பவர்கள் சோயா பீன்ஸ் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. இதனால் இரத்தத்தில் கெட்ட கொழுப்பை சேர விடாமல் தடுக்கலாம். சோயாவில் இருக்கும் ஃபிட்டிக் ஆசிட் நமது உடலில் ஆண்டி ஆக்சிடன்ட்டாக செயல்பட்டு, உயிர் கொல்லி வியாதிகளான கேன்சர், நீரழிவு மற்றும் தொற்றுகளால் ஏற்படகூடிய எந்த பிரட்சனையாக இருந்தாலும் அதை ஆரம்ப நிலையிலேயே சரி செய்யவும்.

சோயா பீன்ஸில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றது. இது அதிகபடியான இரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும் இரத்த நாளங்களில் சேதம் ஏற்படாமல் தடுக்கின்றது. அதோடு இதில் நிறைந்திருக்கும் ஊட்டசத்துக்கள், இரத்த குழாய் விளிம்பிற்கு நேரடியாக பாதுகாப்பு வழங்குகிறது. இரத்த நாளங்களை சரியாக இயக்கவும், செல்களுக்கு ஊட்டமளிக்கவும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு சோயா பீன்ஸ் நல்ல ஒரு பானமாக இருக்கின்றது. இதில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைவு அதோடு இதில் இருக்கும் நிரப்பபடாத கொழுப்பு அமிலங்கள், நமது உடல், கொழுப்புகளை உறிஞ்சுவதை தடுக்கின்றது.

அதனால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தாரளமாக சோயா பீன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். மேலும் நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தி, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் சோயா பீன்ஸ் உதவுகிறது. சர்க்கரை, கலோரிகள் மிகவும் குறைவு ஆதலால் சர்க்கரை நோயாளி மற்றும் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு இது நல்லது. இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிக்கு மிகவும் நல்லது.

இதில் கரைய கூடிய மற்றும் கரையாத நார்சத்து இரண்டுமே இருக்கின்றது. ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு எவ்வித பிரட்சனையும் இல்லை என கூறப்படுகிறது. சோயா பீன்ஸில் இறைச்சிக்கு நிகரான புரதம் நிறைந்திருக்கின்றது. அதனால் சைவ பிரியர்களுக்கு சோயா பீன்ஸ் வரபிரசாதம்தான். ஆனால் சில காரணங்களால் இதில் பக்கவிளைவுகளும் உள்ளது. அதை பற்றி அடுத்த வீடியோவில் பார்க்கலாம்.



Spread the love