சோயா பால்

Spread the love

உடலுக்கு வலுவும் திறனும் அளிக்கின்ற பல இயற்கைத் தாவரங்களில் ஒன்று சோயாபீன்ஸ். இதை ஒரு “எலும்பில்லாத புலால் உணவு” என்று சில ஆசிய நாடுகளில் அழைக்கின்றனர். அந்த அளவு புரதம் செறிந்தது சோயா பீன்ஸ். இதில் 50 சதவிகிதம் புரதமும் 25 சதவிகிதம் மாவுச்சத்தும் 25 சதவிகிதம் கொழுப்புச் சத்தும் உள்ளது. தாவர உணவை முதன்மையாகக் கொண்டுள்ள நம் நாட்டில் சோயா பீன்ஸை எத்தனையோ வழிகளில் சிறப்பாகப் பயன்படுத்தலாம்.

இது இளையவர்க்கும் முதியவர்க்கும் ஏற்ற உணவு. இதய நோய்க்காரருக்குக் கூட இதமான உணவு. ஒரு கிலோ சோயா பீன்ஸிலிருந்து 10 கிலோ சோயா பால் பெற முடியும். இது உடலுக்கு ஊட்டமளித்து புத்துணர்ச்சி தரக்கூடியது. பச்சை சோயா பயறிலிருந்து எடுக்கும் பால் தூய்மையானது. சத்து நிரம்பியது. இதை அப்படியே குடித்தால் செரிமானக் குறைபாடுகள் உண்டாகலாம். எனவே இதில் சரி பங்கு தண்ணீர் சேர்த்துக் குடிக்கலாம்.

சோயா பாலில் விட்டமின் ஏ, பி மற்றும் டி உள்ளன. முளைவிட்ட சோயாவில் விட்டமின் சி யும் உள்ளது. மேலும் இதில் பல தரப்பட்ட அமினோ அமிலங்களும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் அதிகமான பாஸ்பேட்டுகள் காணப்படுவதால் இதை நரம்புகள் தொடர்புடைய நோய் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம் என்கின்றனர். 100 கிராம் சோயாவில் 460 கலோரி சக்தி உள்ளது. 100 கிராம் கோதுமை நமக்குத் தருவது 365 கலோரி மட்டுமே.


Spread the love
error: Content is protected !!