அதிகமான ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கும் பாதாமை, ஊறவைத்து சாப்பிட்டால் அதன் ஊட்டச்சத்துகளும், பலன்களும் நமக்கு அதிகமாகவே கிடைக்கும் என சொல்லப்படுகிறது…
பழங்களை அப்படியே சாப்பிடும்போது, ஜூஸ் ஆக குடிக்கும் போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிற வித்தியாசம்தான் இதிலேயும்.. மேலும் பாதாமை ஊறவைத்து சாப்பிடும்போது, அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை நமது உடல் முழுமையாக உறிந்து விடுகிறது என்று சொல்கிறார்கள்.
அந்த நன்மைகள் பற்றி பார்க்கலாம்… ஊறவைத்த பாதாமில் இருந்து வைட்டமின் பி, பொட்டாசியம், dietary fiber, ப்ரோடீன், மற்றும் சத்து நிறைந்த கொழுப்பு, கால்சியம், இரும்புசத்து, மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் உட்பட சிறந்த ஊட்டச்சத்துகளும், மினரல்சும் கிடைக்கின்றது…
இந்த நார்சத்து மலச்சிக்கலை குணப்படுத்துவது மட்டுமில்லாமல், பசி தூண்டுதலை குறைத்துவிடும்.. இது உணவுகளை குறைவாக உண்பதற்கு உதவும். அதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இதை உட்கொண்டு பயனடையலாம்.
நாள்பட்ட வியாதியால் அவதி படுகிறவர்களுக்கு இந்த பாதாம் மிகவும் சிறந்ததாக இருக்கின்றது.. இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் ப்ரீ ரேடிக்கல் நடுநிலைப்படுத்தி உடலில் நோய் ஏற்படுவதில் இருந்து தடுத்து குணமாக்க உதவுகிறது… குறிப்பாக, முடக்கு வாதம், கேன்சர் மற்றும் இதய கோளாறுகள் ஏற்படாமல் தடுப்பதாகவும் சொல்லப்படுகிறது… இரவு முழுவதும் ஊறவைத்த பாதாமில் கிடைக்க கூடிய வைட்டமின் இ கண்டன்ட் ஞாபக சக்தியை தூண்ட உதவுகிறது.. முக்கியமாக காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, அந்த ஊட்டசத்துக்கள் நமக்கு அப்படியே கிடைப்பதாகவும் அறியப்படுகின்றது… குறிப்பாக இதில் இருக்கும் சத்தான கொழுப்புகள் இதயத்திற்கு மிகவும் நல்லது.. இதனால் இதய கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு…
மேலும் ஊறவைத்த பாதாம் மூலமாக கிடைக்க கூடிய வைட்டமின் இ சிறந்த ஆன்டி ஆக்சிடண்டாக இருக்கின்றது. இது தோலிற்கும், கூந்தலுக்கும் ஏற்படும் inflammation குறைத்து, பாதிப்பில் இருந்து காக்கும்… இதில் காணப்படும் போலிக் ஆசிட், மகப்பேறு பெண்களுக்கு, போலேட் குறைபாட்டால் ஏற்படும் நரம்பு குழாய் பிரச்சனைகளையும் தடுக்கும்… இந்த பாதாமை மொத்தம் 24 மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்… ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் ஊற்றி, அதற்குள் ஒரு பாத்திரத்தில் இரண்டு கைப்பிடி பாதாமை போட்டு, அந்த பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துவிடுங்கள்… 12 மணி நேரம் கழித்து அந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றி விட்டு, ஊறியிருக்கும் பாதாமில் சிறிது உப்பு சேர்த்து கலக்கவும். இப்போது மீண்டும் 12 மணி நேரம் அப்படியே ஊறவைத்து எடுத்து, காற்று போகாத பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் காலையில் ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்…