Snake Gourd என்று சொல்லகூடிய புடலங்காயை கூட்டு, பொரியல் மற்றும் சாம்பார் என பல வகையில் சமைத்து சாப்பிடுவோம். இது சர்க்கரை நோயை மட்டுமில்லாமல் கடுமையான காய்ச்சலையும் குணப்படுத்தும். இவை பற்றி பார்க்கலாம். புடலங்காயை வேக வைத்து தண்ணீரில் கொத்த மல்லியை சேர்த்து, கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வர பித்தம், வாந்தி, மற்றும் மலேரியா காய்ச்சல் என அனைத்தும் குணமாகும்.
பெரும்பாலும் Chinese Therapy-யில் சர்க்கரை நோயாளியின் சிகிச்சைக்கு புடலங்காய் சேர்க்கபடுகின்றது. இதில் கலோரிகள் குறைவதினால் உடல் எடையையும் சீராக வைக்கலாம். குறிப்பாக இரண்டாம் வகை டையாபெடிஸை புடலங்காய் குணப்படுத்துவதாக கூறப்படுகின்றது. மஞ்சள் காமாலைக்கு புடலங்காயின் இலையை, கொத்தமல்லி விதையோடு சேர்த்து அரைத்து தினமும் 3௦-ல் இருந்து 6௦ கிராம் வரை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலையின் தீவிரம் குறைய தொடங்கும்.
புடலங்காயில் அதிசிறந்த வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் அடங்கியுள்ளது. புடலங்காய் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இது தமனிகளில் ஏற்படும் பிரட்சனைகளை சரி செய்து, இதயத்தில் ஏற்படும் வலி, பிடிப்பு போன்றவற்றையும் தடுக்கும். அதோடு மன அழுத்தத்தை போக்குவதாகவும் சொல்லப்படுகின்றது. இதய கோளாறு இருக்கிறவர்களுக்கு தினமும் 2 கப் புடலங்காயை கூட்டாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டு வருமாறு பரிந்துரைக்கபடுகின்றது. வயிற்றுப்போக்கினால் தவிப்பவர்கள் புடலங்காய் சாற்றை குடித்து வர குடலில் தேங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறும்.
இது மலச்சிக்கலை தடுக்கும். செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பதனால், வாயு தொல்லை மற்றும் வயிற்றுப்போக்கு வராது. அதோடு இந்த பிரட்சனைகளும் கட்டுப்படும். ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி தலைமுடிக்கும் புடலங்காய் சாறு மிகவும் நல்லது. பொடுகு தொல்லை இருப்பவர்கள் புடலங்காய் சாற்றை தலைமுடி முழுவதும் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து அலசி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். அதோடு உடலிற்கு கொழுப்பை வழங்காத காய்கறிகளில் புடலங்காயும் ஒன்று வாரத்தில் ஒரு நாளாவது உங்கள் உணவில் புடலங்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.