தூக்கம் என்பது கடவுள் நமக்கு கொடுத்திருக்க மிக பெரிய பரிசு. நாம் எந்த நிலையில் உடல் உறுப்புகளை வைத்து தூங்கவேண்டும், என பல பேருக்கு தெரியாது. ஏனென்றால், எந்த நிலையில் படுத்தாலும் நமக்கு தூக்கம் வருவதால், அதை யாரும் யோசிப்பது கிடையாது. தூக்கம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு எந்த முறையில் எப்படி தூங்கவேண்டும் என்பதும் முக்கியம்.
தூங்கும் பொழுது இடது கை கீழேயும், வடது கை மேலேயும் வைத்த மாதிரி கால்களை நீட்டி ஒருக்களித்து படுப்பதால், நமக்கு நல்ல பயன் கிடைக்கும். அதாவது, நம்ம உடலோடு இடது பக்கம் உணவு பையும், வலது பக்கம் பித்தப்பையும் அமைந்திருக்கும். இப்படி படுப்பதால், உணவுப்பையில் சில பித்த நீர்கள் விழுந்து, சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானம் ஆகும். இரண்டாவதாக, வலப்பக்கமாக இருக்க சூரிய நாடி, அதாவது வலது நாசியில் சீரான சுவாசம் செல்வதால் ஆயுள் கூடும்.
மூன்றாவதாக, இடப்பக்கம் இருக்க சந்திரநாடி அதவாது இடது நாசியில், வரும் சுவாச சூடு குறைந்து, சூரிய நாடியில் ஏற்படும் சுவாசம் அதிகரிக்கும். இது நாம சாப்பிட்ட சாப்பாடு செரிக்க அதிகமான சூடு தேவைப்படுவதால், இந்த முறையில் படுக்கும்பொழுது, தேவையான அளவு சூடு, உடலுக்கு கிடைத்துவிடும்.
மாறாக, இந்த முறையில் படுக்காமல், தொடர்ந்து வலது கையை கீழ் பகுதியில் வைத்து படுத்தால், உணவு பை மேலேயும், பித்தப்பை கீழயும் இருந்து, பித்தப்பையில் இருந்து வரக்கூடிய நீர் கீழே விழ முரண்பட்டு, சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமல், அந்த உணவில் புளிப்பு தன்மை ஏற்பட்டு, அதன் மூலமாக விஷ கிருமிகள் உருவாகி, அது ரத்தத்தில் கலந்து பல நோய்களை உருவாக்கும். சந்திரநாடியில் சுவாசம் அதிகமாக செல்வதால் ஆயுளும் குறையும். அந்த சூடு குறைந்த சுவாசத்தால், உணவு செரிமானம் தடைபட்டு நரம்பு தளர்ச்சியும் பல பிரச்சனைகளும் ஏற்பட்டு விடும்.
பொதுவாக தரையில் படுப்பதை விட, கட்டில், பெஞ்ச் போன்ற உயரமான இடங்களில் படுப்பதுதான் நல்லது. ஏனென்றால்? காற்றில் நச்சுக்காற்று, உயிர் காற்று என்று இரண்டு வகை உள்ளது.
தடிப்பு தன்மையை நச்சுக்காற்று எனவும், சுத்தமான காற்றை உயிர் காற்று என்றும் சொல்லலாம். தடிப்பான பொருட்களை பூமி தன்னுடன் ஈர்த்துக்கொள்ளும். அதனால், நச்சுக்காற்று எப்பொழுதும் தரைமட்டத்தில் உதவுவதால், தரையில் படுத்து உறங்கும்பொழுது, இரவு முழுவதும் அந்த நச்சுக்காற்றையே உள்வாங்கி சுவாசிக்க நேரிடும். இதனால், உடல் நலம் கெட்டு போய் பல நோய்களுக்கு வழி வகுக்கும். ஆனால் கட்டில் போன்ற உயரமான இடத்தில் படுத்து தூங்கினால், வெளிக்காற்று வீசவில்லை என்றாலும், கட்டில் மேல் உலாவும், உயிர்காற்றை உட்கொண்டு வெளியிட்டால், நமது உடல் நலம் கெடாமல் நலமாக வாழலாம்.