சம்மணமிட்டு சாப்பிடனும்

Spread the love

தமிழ் கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் மற்றும் சௌகரியம் என்றாகிவிட்டது.

முன்பெல்லாம் வாழை இலை போட்டு தரையில் உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதுதான் கௌரவமாக இருந்தது. ஆனால் இப்போது டைனிங் டேபிள்… இது சரியா, தவறா ?!! 

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?

சாப்பிடும் பொழுதாவது நாம் கால்களை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலை தொங்க விடுவதால், ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் முழுவதுமே காலுக்கே செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது.

கால்களை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு இரத்த ஓட்டமும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தப்பட்டது ராஜகோபாலன்  


Spread the love
error: Content is protected !!