சூடு தணிக்கும் ரோஜா…

Spread the love

பூக்களில் ரொம்ப ஸ்பெஷல் ரோஜா. கவிதை எழுதுபவர்கள் ரோஜாவை வர்ணிக்காமல் இருந்ததில்லை. இந்த ரோஜாவுக்கு எப்போதும் மவுசுதான். அதே வேளையில், ரோஜா அழகு மட்டுமல்ல. ஆரோக்கிய விஷயத்திலும் உயர்ந்தது. ரோஜாவை அத்தர் என்று மருத்துவ உலகில் கூறப்படுவதுண்டு. காட்டு ரோஜாதான் அழகுதான். அதை விட நாட்டு ரோஜா அழகு. இந்த நாட்டு ரோஜாவில் ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள் உள்ளன.

ரோஜா மலரில் உள்ள மருத்துவக் குணங்கள் என்னென்ன தெரியுமா…

ரோஜாவில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரை, நாம் வாசனை திரவியமாக பயன்படுத்துவதுண்டு. இந்த ரோஜா பன்னீர் உடலில் தெளிக்கும்போது, உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தருகின்றது.

உணவுப் பொருட்களுடன் ரோஜா பன்னீரை சேர்த்து சாப்பிட்டு வரலாம். இவ்வாறு உட்கொள்ளும் போது, மூச்சிரைப்பு பிரச்னையில் இருந்து விடுபடுவதுண்டு. உடல் சூடு தணியும்.

மனக்கலக்கத்தை மாற்றி மனதை அமைதியாக்கும் சக்தி ரோஜாவுக்கு உண்டு.பெண்கள் தினமும் தலையில் ரோஜா மலரை சூடிக் கொள்வதால், நல்ல மனநிலை வாய்க்கும். ஆண்களும், தங்கள் பையில் வைத்துக் கொள்ளலாம்.

நன்கு காய்ந்த ரோஜா இதழ்களை வெந்நீரில் போட்டு, 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும். இப்போது ரோஸ் வாட்டர் தயார். இந்த ரோஸ் வாட்டரை தினமும் ஒரு ஸ்பூன் 45 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், வயிற்று வலி மற்றும் பெண்களுக்கு வெள்ளைப் படுதல் போன்ற உடல் உபாதைகள் மறைந்து விடும்.

காய்ந்த ரோஜாவை தேனில் ஊற வைத்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இப்படி உட்கொண்டு வந்தால், உடம்புக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைப்பதுடன் உடல் சூடு தணியும்.

நல்ல காய்ந்த சிவப்பு சிவப்பு ரோஜா இதழ்களை வெந்நீரில் அரைமணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி , சிறிது உப்பு கலந்து சாப்பிட்டு வரவும். இவ்வாறு உட்கொண்டு வந்தால், வாந்தி, அதீத தாகம், குமட்டல் போன்றவை நீங்கி பிரெஷ்ஷாக இருக்கும்.

புண், சிராய்ப்பு,அடிபட்ட இடத்தில் ரோஜா பன்னீருடன் பத்து துளி பாதாம் எண்ணெயைக் கலந்து போட வேண்டு. அவ்வாறு செய்தால், புண், சிராய்ப்பு போன்றவை விரைவில் ஆறி விடும்.

ரோஜாப்பூவில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும். இதிலிருந்து எடுக்கப்படும் தைலம் சருமத்துக்கு மிருதுத்தன்மையையும் பளபளப்பையும் வழங்கக்கூடியது. இந்த ரோஜா தைலத்தை வீட்டிலேயே தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம். ரோஜாப்பூக்களை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதின் அளவில் சம பங்கு தேங்காய் எண்ணையைக் கலந்து, மிதமான தீயில் அடுப்பில் வைத்துக் காய்ச்சிக் கொள்ளவும்.தண்ணீர் வற்றி சத்தம் அடங்கியதும் நல்ல வாசனையுடன் தைலம் தனியாகப் பிரியும். இப்போது, இறக்கி ஆற வையுங்கள். இதுதான் ரோஜா தைலம். இதை சென்ட் பாட்டிலில் அடைத்து வைத்துத் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.


Spread the love