ஒல்லியாக ரெட் ஒயின்

Spread the love

தினசரி 3 தேக்கரண்டி அளவு எடுத்து கொள்ள இடுப்புச் சதையை கரைக்கும். மனிதனின் உடலில் உள்ள இரத்த தட்டுக்கள், மற்றும் இரத்தம் குழாய்கள் சுத்தம் செய்வதுடன் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் அங்கு சென்று படிவதையும் வெளியேற்றுகிறது. சிகப்பு ஒயினில் உள்ள ரெஸ்வாரடிரால் என்னும் பொருளானது உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது. மூன்று ஸ்பூன் அளவு சிவப்பு ஒயினும் பூண்டும் கொழுப்புச் சத்துகளை எரிப்பதில் முன்னிலை வகிக்கிறது.

உடல் எடையை/ பருமனைக் குறைக்க முயற்சி எடுப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இது நமக்குச் சரிப்பட்டு வராது என்று விட்டு விடுவீர்கள் எனில், உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற உங்கள் உணவுப் பட்டியலை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம், உங்கள் உடல் பருமனைக் குறைக்க இது முக்கிய பங்காற்றுகிறது.

நீங்கள் என்ன வகையான உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்துத் தான் உங்கள் எடை கூடுவதோ அல்லது குறைவதோ காரணமாகிறது. இவ்வகையில், ஒரு சில உணவுகள் சேர்த்து சாப்பிடும் பொழுது உடல் பருமனைக் குறைக்க ஒன்றுக்கொன்று உதவுகிறது. அவ்வாறுள்ள உணவுகள் தான் பூண்டும், சிவப்பு ஒயினும்..!

உடல் எடை குறைக்க பூண்டு

பூண்டானது, இதன் தீமை செய்யும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயலாற்றும் பண்பு காரணமாக, பல நூற்றாண்டுகளாக, அனைத்து நாடுகளிலும் பரவலான மருந்தாகப் பயன்பட்டு வருகிறது. தற்போதைய ஆராய்ச்சியில், பூண்டு உடல் பருமனைக் குறைக்க உதவும் பொருளாகவும் அறியப்பட்டுள்ளது. அதிக அளவு ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ள பூண்டானது, உடலில் காணப்படும் கொழுப்பை எரிக்க உதவுகிறது.

கொரிய ஆராய்ச்சியில், எலியின் மீது பரிசோதிக்கப்பட்டதில் பூண்டு, எலியின் உடல் பருமனை எளிதாக, வேகமாக குறைந்தது தெரிய வந்துள்ளது. இருந்தாலும் இதே மனிதனிடம் பரிசோதிக்கப்பட்டதில் ஒரு எல்லை வரை உடல் பருமன் குறைப்பிற்கு பூண்டு உதவுகிறது.

உடல் பருமன் காரணமாக பல நோய்கள் உருவாகின்றன. இவற்றுள் முக்கியமானது உயர் இரத்த அழுத்த, நீரிழிவு, மாரடைப்பு, மூளை செயல் இழப்பு ஆகிய நோய்கள் உருவாக உடல் பருமன் காரணமாகிறது. உடல் எடைக் குறைப்பிற்கு ‘பெக்டின்’ என்ற நார்ப் பொருள் உதவுகிறது. இது மிகுதியாக தோன்றி பசியை குறைத்து உண்ணும் உணவின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றன.

‘பெக்டின்’ நார்ப்பொருள், இரைப்பையில் உள்ள உணவை குழைக்கச் செய்து, உணவுப் பாதையில் செல்ல வேண்டிய நேரத்தின் அளவை சுமார் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதபடுத்துகிறது. இரைப்பையில் இவ்வாறு உணவு தேங்குவதன் காரணமாக, பசி உணர்வு குறைந்து விடுகிறது. பெக்டின் நார்ச்சத்து மட்டும் அன்றி சோடியம். பொட்டாசியம், ஆகியவை உடலில் சரியான விகிதத்தில் இருக்கும் பொழுது, உடல் எடைக் குறைப்பு எளிதாகிறது. பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்பதால், உடலில் தேவைக்கு மேல் தேங்கும் தண்ணீர் வெளியேற்றப்படும்.

உடலில் சோடியம் மிகுதியானால், தண்ணீர் தேக்கமும் கூடி விடும். பொட்டாசியம், சோடியத்தின் இத்தகைய செயல்பாடுகளை முடக்கி, கட்டுப்படுத்தி, தண்ணீரை வெளியேற்றுவதால் உடல் எடை குறைப்பது சாத்தியமாகிறது. மேலும், நமது உடல் இயக்கத்தில் நரம்பு மண்டலம், தசைகளில் சோடியம், பொட்டாசியம் சம நிலையில் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.

உடல் எடையை குறைக்க பல வித மருந்துகள், டானிக்குகள் என்று எடுத்துக் கொள்வதை விட இயற்கை தரும் கலவையான பூண்டும், சிவப்பு ஒயினும் பல வகைகளில் உதவுகிறது. இதனை உட்கொள்ளும் நீங்கள் மதுவுக்கு அடிமையானவராக இருத்தல் கூடாது. மேலும் 30 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

12 பூண்டு பற்களையும், சிவப்பு ஒயின் அரை லிட்டர் அளவும் எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டின் மேல் தோல் பகுதிகளை உரித்து நீக்கி விடுங்கள். மேல் தோல் நீக்கிய பூண்டுப் பற்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு பீங்கான் ஜாடியில் போட்டு அதில் சிவப்பு ஒயினை ஊற்றிக் கொள்ளுங்கள். ஜாடியில் மேல் சூரிய ஒளி படுமளவுக்கு உள்ள அறைப் பகுதியில் 15 நாட்கள் வரை வைக்கவும். தினசரி காலை ஜாடியை நன்றாகக் குலுக்கி கொள்ள வேண்டும்.

15 நாட்கள் கழித்த பின்பு முதல் ஜாடியில் உள்ள பொருட்கள் அனைத்தையும் இரண்டாவதாக ஒரு ஜாடி தயார் செய்து அதில் மாற்றிக் கொள்ளவும். அதை மேலும் 15 நாடுகளுக்கு இருட்டான பகுதியில் வைத்திருக்க வேண்டும்.

ஆக மேற்கூறிய 15+15 முப்பது நாட்களுக்கென செய்முறை முடிவுக்கு வந்த பின் தினசரி மூன்று வேளை என ஒரு மேஜைக் கரண்டி கலவையை தேக்கரண்டியில் எடுத்து சாப்பிட உடல் குறைப்பில் நல்ல பலன் கிடைக்கும்.


Spread the love