மாதுளை – புதிய ஆராய்ச்சி

Spread the love

மாதுளம் பழத்தின் பல மருத்துவ குணங்கள் ஏற்கனவே நன்கு அறிந்தவை. ஈரானில் தோன்றி, உலகெங்கும் பரவிய மாதுளம் பழத்தின் எல்லா பாகங்களும் (பழம், இலை, பூ, பட்டை, மரப்பட்டை, வேர்) மருத்துவ பயன்கள் கொண்டவை.

இதயத்திற்கு நல்லது. ஆண்மையை பெருக்கும். புற்றுநோயை தவிர்க்கும். மேலும் பல மருத்துவ குணங்களை கொண்ட மாதுளம் பழம், உடல் கொழுப்பை குறைக்கவும் உதவும் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

எடின்பர்க் பல்கலைக்கழகம், இங்கிலாந்து, மேற்கொண்ட ஆராய்ச்சியில், மாதுளம் ஜுஸ், வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை (தொப்பையை) குறைக்கவல்லது என்று தெரியவந்துள்ளது. ஒரே மாதத்தில், தினசரி மாதுளம் சாறு குடித்து வந்த நபர்களின் தொப்பை குறைந்தது. வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு செல்கள் குறைந்தன. இவர்களின் உயர் இரத்த அழுத்தமும் குறைந்திருந்தது.

இதனால் மாரடைப்பு, மூளைத்தாக்கு, சிறுநீரககோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைந்தன.

ரத்தத்தில் ஒரு கொழுப்பு அமிலம் உள்ளது. இதை Nonesterifred Fatty Acid (NEFA) என்பார்கள். இந்த அமில அளவு அதிகமானால் அடிவயிற்றைச் சுற்றி அதிக கொழுப்பு சேரும். மாரடைப்பு, டைப் – 2 நீரிழிவு இவை தோன்றும் அபாயம் ஏற்படும்.

மேற்சொன்ன ஆய்வில், தன்னார்வத்துடன் பங்கேற்றவர்கள் தினமும் 500 மி.லி. மாதுளம் ஜுலை, 4 வாரங்கள் குடித்து வந்தனர். மாத முடிவில் இவர்களில் பாதி நபர்களுக்கு ரத்த NEFA அளவுகள் குறைந்திருந்தன. வயிற்றை சுற்றி கொழுப்பு சேர்வது நிறுத்தப்பட்டது. தவிர 90% நபர்களுக்கு (ஆண், பெண் உட்பட) உயர் ரத்த அழுத்தம் குறைந்து சீராக இருந்தது. இதனால் இதயக்கோளாறுகள் தவிர்க்கப்படும்.


Spread the love