இந்தியா முழுவதும் பல ரூபங்களில் பயிரிடப்படுவது கம்பு. ஆங்கிலத்தில் ஃபியர் மில்லட் என்றும் இந்தியில் ‘பஜ்ரா‘ எனப்படும். கம்பை அன்னமாகவோ, கூழாகவோ சமைத்து தயிர் அல்லது மோருடன் சாப்பிட்டு வர குடல் கொதிப்பு அடங்கும். உடல் வளர்ச்சிக்கும், பலத்துக்கும் உதவும். உடம்பை தூய்மையாக்கும். ஆனால் சொறி, சிரங்கு, இருமல், காசம் உள்ளவர்கள் கம்பை தவிர்ப்பது நல்லது. கம்பு இந்த நோய்களை அதிகப்படுத்தும்.
கம்பு தோசை
தேவையான பொருட்கள்
கம்பு –1கப்
பு.அரிசி –1கப்
உளுந்து –1/2கப்
வெந்தயம்-1டே.ஸ்பூன்
உப்பு, எண்ணெய்-தேவைக்கேற்ப
செய்முறை
கம்பு, அரிசி இரண்டையும் சேர்த்து 3 மணி நேரம் ஊறவிடவும். உளுந்தது வெந்தயம் சேர்த்து தனியாக ஊற விடவும். ஊறிய பின் சுத்தம் செய்து உளுந்து வெந்தயம் நன்றாக இட்லிக்கு அரைப்பது போல் அரைத்து கொள்ளவும். பிறகு அரிசி கம்பு நைஸாக தோசை மாவு போல் அரைத்து உப்பும், உளுந்துமாவும் சேர்த்து கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும். பிறகு தோசை வார்த்தால் நன்றாக பட்டு போல் தோசை வார்க்க வரும். இதற்க்கு எந்த சட்னி வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும். உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட
குறிப்பு
கம்பு மிகவும் உடம்புக்கு நல்லது.
கம்பு சத்து மாவு (பொரி மாவு)
தேவையான பொருட்கள்
கம்பு –300கிராம்
கோதுமை, ஜவ்வரிசி, உடச்ச கடலை தலா-100 மி.கிராம்
வேர்கடலை வறுத்து தோல் நீக்கியது-50மி.கி.
சுக்கு பொடி-2டீஸ்பூன்
செய்முறை
முதல் நாள் இரவு கம்பை தண்ணீரில் ஊற விடவும். மறுநாள் நன்றாக சுத்தம் செய்து வடிகட்டி நிழலில் ஒரு துணியில் பரத்தி ஈரம் போக காய போடவும். காய்ந்ததும் அடுப்பை ஆன் செய்து கடாயை காய வைத்து, காய்ந்ததும் வடிகட்டிய கம்பை கொஞ்சமாக கடாயில் போட்டு வறுத்து எடுக்கவும். முழுவதுமாக வறுத்த பின் அதே கடாயில் கோதுமை, ஜவ்வரிசி, உடச்ச கடலை தனித்தனியாக வறுத்து கொண்டு ஆறிய பின் எல்லாமாக சேர்த்து வேர்கடலையும் சேர்த்து மிஷினிலோ (அல்லது) மிக்ஸியிலோ மாவாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவில் சுக்கு பொடி கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவு தான் கம்பு சத்து மால இந்த மாவில் கஞ்சி செய்து கொடுத்தால் சிறுவர்களிலிருந்து வயதானவர்கள் வரை அருந்தாலம். உடம்புக்கு மிகவும் ஆரோக்கியம். 2 ஸ்பூன் மாவுடன் சிறிது வெல்லம் பொடித்து போட்டு நெய் சூடாக்கி மாவில் சேர்த்து பால் சிறிது சேர்த்து கலந்து குழந்தை (அதாவது) 4-5 வயதான குழந்தைகளுக்கும் ஸ்கூல் படிக்கும் குழந்தைகளுக்கும் எல்லோருமே சாப்பிடலாம். கம்பு மிகவும் குளிர்ச்சியும் கூட உடம்புக்கு நல்லது.
கம்பு அடை
தேவையான பொருட்கள்
கம்பு –1கப்
ப.அரிசி –1/2கப்
க.பருப்பு,து.பருப்பு தலா-1/4கப்
உளுந்து –1டே.ஸ்பூன்
பாசிப்பருப்பு –1 டே.ஸ்பூன்
பச்சைமிளகாய் –2
சிவப்பு மிளகாய்-2
கறிவேப்பிலை –2ஆர்க்கு
இஞ்சி -சிறியதுண்டு
தேங்காய்த்துருவல்-1/4கப்
உப்பு -தேவைக்கேற்ப
ஜீரகம் –1/2டீஸ்பூன்
எண்ணை -தேவையான அளவு
சின்ன வெங்காயம் (சாம்பார்)-10
செய்முறை
முதலில் கம்பு ப.அரிசியும் சேர்த்து 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, பருப்பு வகைகளையும் எல்லாமாக சேர்த்து ஊற விடவும். ஊறியதும் அரிசி கம்பு சுத்தம் செய்து உப்பு, பெருங்காயம், ப.மிளகாய் சிவப்பு மிளகாய் சேர்த்து (இஞ்சியையும்) அரைத்து கொள்ளவும். (தோவை மாவு போல்) அரைக்கவும். பருப்பு வகைகளையும் அரைத்து அரிசி பருப்பு மாவுகளை நன்றாக சேர்த்து அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய் துருவல், ஜீரகம், வெங்காயம் பொடியாக அரிந்து எல்லாமாக கலந்து அடுப்பை பற்ற வைத்து, தவாவை காய வைத்து காய்ந்ததும் அடையாக சுட்டு எடுக்கவும். இருபுறமும் நன்றாக வேக விட்டு மொறு மொறுப்பாக சுட்டு எடுத்து பரிமாறவும் இதற்க்கு தொட்டு சாப்பிட தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.
உணவு நலம் ஜுன் 2011
கம்பு, ஃபியர் மில்லட், பஜ்ரா, குடல் கொதிப்பு, உடல் வளர்ச்சி, பலம், கம்பு தோசை, செய்முறை, கம்பு, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம், உப்பு, எண்ணெய், குறிப்பு, உடம்புக்கு நல்லது, கம்பு சத்து மாவு, பொரிமாவு, செய்முறை,
கம்பு, கோதுமை, ஜவ்வரிசி, உடச்ச கடலை தலா, வேர்கடலை, சுக்கு பொடி, உடம்புக்கு ஆரோக்கியம், கம்பு அடை, செய்முறை, கம்பு, பச்சரிசி, க.பருப்பு, து.பருப்பு, உளுந்து, பாசிப்பருப்பு, பச்சைமிளகாய், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, தேங்காய்த்துருவல், உப்பு, ஜீரகம், எண்ணை, சின்ன வெங்காயம்,