பப்பாளி பழத்தின் நன்மைகள்

Spread the love

மாம்பழத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவு வைட்டமின் ஏ உயிர்ச்சத்து உள்ளது. வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகமுள்ளன. வைட்டமின் சி உயிர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்பவர்களுக்கு எலும்பு மூட்டுவலி சார்ந்த பிரச்சனைகள் அதிகம் ஏற்படுவதில்லை. செரிமான சக்தியைத் தரும் என்சைமான பாப்பைன் என்ற பொருள் பப்பாளியில் அதிகம் இருப்பதால் எளிதான செரிமானத்திற்கு பப்பாளி அதிகம் உதவுகிறது. மலச்சிக்கல், பல் சார்ந்த குறைபாடுகள், சிறுநீர்ப் பையில் தோன்றும் கற்களை கரைக்க தினசரி பப்பாளிப் பழம் சாப்பிட்டு வரலாம். இரத்த சோகை, நரம்பு பலகீனமுள்ளவர்கள், ஆண்மை இழப்பு, ஆண்மை பலகீனம் உடையவர்கள் தொடர்ந்து பப்பாளி சாப்பிட்டு வர குணம் பெறலாம். பப்பாளிப் பழத்தில் இயற்கையிலேயே விஷக் கிருமிகளைக் கொல்லும் ஒரு வகைச் சத்துள்ளதால் பப்பாளிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களின் இரத்தத்தில் நோய்க் கிருமிகள் அழிந்துவிடும். இதனால் நோய்த் தொற்ற வாய்ப்பு இல்லை. மாதவிடாய் சரியான அளவில், ஒழுங்காக வரவில்லை என்றால் தினமும் ஒரு பப்பாளிப் பழம் சாப்பிட்டு வர நிவர்த்தி கிடைக்கும்.

View Our Products >>


Spread the love