வைரஸ் முதல் கேன்சர் வரை எதிர்த்து நிற்கும் ஆரஞ்சு பழம்…!

Spread the love

எனக்கு இன்னொரு பேரு இருக்கின்ற மாதிரி ஆரஞ்சு பழத்திற்கு வேறு ஒரு பெயர் இருக்கின்றது.அதுதான் கமலா……
எப்படிப்பட்ட நோயின் தாக்கத்தில் இருக்கும் நோயாளிகளுக்கும், நாக்கில் சுவையை உணரவைக்க கூடிய ஒரே பழம் ஆரஞ்சு மட்டும்தான்…  ஆரஞ்சு பழத்தில் உயிர் சத்துகளாக இருக்க கூடிய,வைட்டமின் சி, ஏ, கே, மற்றும் நியாசின், ரிபோப்ளேளின், போலேட்ஸ் அதோடு கால்சியம், காப்பர்,இரும்புசத்து, மக்னீஷியம், மாங்கனீசு ஜிங்க் போன்ற மினரல்ஸ் அடங்கியிருக்கிறது. 

அனைவருக்கும், நோயில் இருந்து தப்புவதற்கு நமது உடல் ஒத்துழைக்க வேண்டும் என விரும்புவோம். அதற்கு ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி மிகவும் முக்கியமானது.குறிப்பாக இந்த ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் மற்ற பழங்களைவிட ஆரஞ்சு பழத்தில் அதிகமாகவே உள்ளது. இது உடலில் ப்ரீரெடிக்கல்ஸ் செல்களின் அழிவையும், ஆக்சிடேஷன் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்கும். ஆரஞ்சு பழம் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படாது என பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. 


உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு இதயம் தான். ஆரஞ்சில் இருக்கும் கனிம சத்து இதயத்தை சீராக இயக்க துணையாக இருக்கிறது. அதோடு இந்த பழத்தில் இருக்கும் பொட்டாசியம், இதய பிரட்சனை ஏற்படாமல் பாதுகாக்கிறது. சிறுநீரகத்தை பற்றி அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும். ஏனென்றால்? அதில் ஏற்படும் சிறு தொற்று கூட பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். 
அதனால் அடிக்கடி ஆரஞ்சு பழசாறு குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கல் வராமல் பாதுகாப்பதோடு,தொற்றுகளிலிருந்தும் பாதுகாத்து கொள்ளலாம்.

கொலஸ்ட்ரால் பற்றிய பயம் அனைவருக்கும் இருக்கின்றது. ஆரஞ்சு பழத்தை தாராளமாக சாப்பிடலாம் ஏனென்றால்? இதில் இருக்கும் கரைய கூடிய நார்சத்துக்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்துவிடும்.  இதனால் உடல் பருமனடைய வாய்ப்பே இல்லை. குறிப்பாக ஆரஞ்சில் இருக்க கூடிய பாலிஃபினால் உடலில் வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.  

To buy herbal Products>>>



Spread the love